நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும்.ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும்.கெடுதலான எண்ணங்கள் கெடுதலான செயல்களில் முடியும்.
எண்ணங்கள் செயல்களாகும்
செயல்கள் பழக்கவழக்கங்களாகும்
பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்.
THOUGHTS BECOME ACTIONS
ACTIONS CREATE HABITS
HABITS BUILD CHARACTER.
எல்லா எண்ணங்களும் செயல்களாவதில்லை.ஆனால் எந்த ஒரு செயலுக்கும் முக்கிய காரணம் எண்ணமே ஆகும்.அத்தகைய எண்ணம் சிறப்பாக இருந்தால் அந்த செயலும் சிறப்பாகவே இருக்கும்.

நாம் ஒழுக்கமான நடத்தை உள்ளவர்கள் ஆக வேண்டுமானால் நம்முடைய எண்ணங்கள் நல்லவிதமாக இருத்தல் அவசியம்.அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு மனக்கட்டுபாடு அவசியமாகிறது.மனதை கட்டுபடுத்துவது என்பது கடினம்.ஏனென்றால் நம் எண்ணங்கள் காற்றைவிட வேகமானதாகும்.அப்படி வேகமான ஒன்றை கட்டுப்படுத்துதல் கடினம்தான். ஆனால் எண்ணங்கள் செயல்களாவதை நாம் கட்டுப்படுத்தலாம்.
நம் மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களுக்கு வார்த்தை அல்லது செயல் வடிவம் கொடுக்கத்தொடங்கினால்,என்ன வேண்டுமானாலும் பேசலாம்,செய்யலாம் என்று ஆகிவிடும்.அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு நம்மை கொண்டுவிட்டுவிடும்.நல்ல செயல்கள் நம்மை நல்லவராக அடையாளம் காட்டும். கெடுதலான வார்த்தைகளோ,செயலோ நம்மை வழிதவறியவர்களாக்கும்.

நாம் செய்யும் செயல்கள் மற்றவர்களுக்கும் வழிகாட்டுதலாய் அமைய வேண்டும்.அப்படி இல்லாமல் நான் இப்படித்தான் இருப்பேன்.என் எண்ணம் போல தவறு செய்வேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தால்,நாம் சார்ந்து வாழும் சமூகத்தினரால் துஷ்டன் என்று ஒதுக்கி வைக்கப்படுவோம்.
நல்லவர்களை மதிக்கும் சமூகமே தீயவர்களை நிந்திக்கவும் செய்யும்.

நம் வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்ள சிறப்பான எண்ணங்களை துணை கொள்வோம்.நம் எண்ணங்கள் உயர்வாக இருந்தால் நம் செயல்களும் உயர்வாக இருக்கும்.உயர்வான செயல்கள் வாழ்க்கையில் நம்மை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும்.
எனவே மகிழ்ச்சியான,உயர்வான வாழ்க்கைக்கு அடிப்படையான நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வோம்.

----------------------------------------------------------------------------------------------
53 கருத்துகள்:
அனுபவ வரிகள்
சூழ்நிலைகளையும் பொறுத்துக் கூட அமைகிறது. //எண்ணங்களின் வேகத்திற்கு அவற்றைக் கட்டுப் படுத்துவது கடினம்// மனித மனம் உணர்ச்சி, உணர்வுகளைக் கடந்து தன்னறிவை அடைய வேண்டும் என்று நசிகேத வெண்பாவில் படித்தது நினைவுக்கு வருகிறது. உடல் என்னும் தேரை ஐம்புலன்கள் என்னும் குதிரையால் தேரோட்டியாக ஆன்மா அல்லது மனித மனம் செயல் படுகிறது என்று படித்ததும் நினைவுக்கு வருகிறது.
//கார்த்தி கேயனி சொன்னது…அனுபவ வரிகள்//
நன்றி கார்த்திகேயனி,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//ஸ்ரீராம். கூறியது...//
உணர்சிகளை கடந்து தன்னறிவை அடைய மிகுந்த பிரயத்தனம் தேவை,ஸ்ரீராம்.
நன்றி தங்களின் வருகைக்கும் அருமையான கருத்துக்கும்.
எண்ணம் போல் வாழ்வு
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் தங்கள் பதிவு அருமை சகோதரி .
மனதில் எதை விதைக்கிறோமோ விரைவில் அதையே நாம் அறுவடை செய்வோம் நமது வாழ்வில்
//M.R சொன்னது…
எண்ணம் போல் வாழ்வு //
ஆம் ரமேஷ்,எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.
நன்றி தங்களின் கருத்துக்கு.
//நல்லவர்களை மதிக்கும் சமூகமே தீயவர்களை நிந்திக்கவும் செய்யும்.//
சரியாகச் சொன்னீர்கள்.
எண்ணமே வாழ்வு.
எண்ணங்கள், அதன் வழி செயல்கள் பற்றிய அலசல்கள் அருமை ராம்வி!
எண்ணங்களைப்பற்றி என்னமா எழுதியிருக்கீங்க! பாராட்டுக்கள்.
வலைச்சரத்தில் இன்று மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
அன்புடன் vgk
நம் எண்ணம் எப்படியோ அப்படியே வாழ்க்கையும் அமைகிறது....!!!
நம் வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்ள சிறப்பான எண்ணங்களை துணை கொள்வோம்.நம் எண்ணங்கள் உயர்வாக இருந்தால் நம் செயல்களும் உயர்வாக இருக்கும்.உயர்வான செயல்கள் வாழ்க்கையில் நம்மை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும்.
ரொம்ப நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கே வாழ்த்துக்கள்.
//சத்ரியன் கூறியது...//
நன்றி சத்ரியன்,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//மனோ சாமிநாதன் கூறியது.//
நன்றி மேடம் தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும்.
//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...//
நன்றி ஐயா,தங்களின் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.
//MANO நாஞ்சில் மனோ கூறியது...//
நன்றி மனோ தங்களின் வருகைக்கும், கருத்துக்கும்.
//Lakshmi கூறியது...//
நன்றி அம்மா தங்களின் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.
நல்ல பகிர்வு அக்கா.
நல்ல அலசல் சகோ... வாழ்த்துகள்.
எண்ணங்கள் பற்றி ஒரு நல்ல பதிவு
//சே.குமார் கூறியது...//
நன்றி,குமார் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//வெங்கட் நாகராஜ் கூறியது..//
நன்றி வெங்கட் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//அப்பாவி தங்கமணி கூறியது.//
நன்றி புவனா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
//Rathnavel சொன்னது…//
நன்றி ஐயா.தங்களின் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.
அருமையான பதிவு ரமா .எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் .
வர வர உங்க எழுத்துக்கள்அட்டகாசமாக இருக்கு .வாழ்த்துக்கள்
//angelin சொன்னது…//
angelin.உங்க கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
மனம் போல் வாழ்வு என ஒரு சொல் வழக்கே இருக்கிறது. இது தான் எண்ணம் போல் வாழ்வு என்றாகிறது. மிக நல்ல பதிவு. வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அருமையான அனுபவ வரிகளுக்குப் பாராட்டுக்கள்.
//kavithai (kovaikkavi) சொன்னது…//
நன்றி வேதா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//இராஜராஜேஸ்வரி சொன்னது…//
நன்றி மேடம்,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
எண்ணங்களை பற்றிய நல்ல பகிர்வு.
நல்லதே நடக்கட்டும்.
மிக மிக நல்ல கருத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது பதிவு..
வாழ்த்துக்கள்
நம் வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்ள சிறப்பான எண்ணங்களை துணை கொள்வோம்.நம் எண்ணங்கள் உயர்வாக இருந்தால் நம் செயல்களும் உயர்வாக இருக்கும்.உயர்வான செயல்கள் வாழ்க்கையில் நம்மை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும்.
மறுக்க முடியாத உண்மை .மனத்தைக் கவர்ந்தது இன்றைய பகிர்வு .
வாழ்த்துக்கள் சகோ ................
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_28.html - உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்.
மனித மனம் வினோதமான ஒன்று.அதில் எப்போதும் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.அதில் நல்லவைகளையும் தீயவைகளையும் பிரித்து எடுத்து தீயவைகளை வடிகட்டி நல்லவைகளை ஏற்று அதன் வழி நடக்க கற்றுக் கொள்ள வேண்டும்.பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொள்ளும்.மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைக்கும்! சாதாரண மனிதர்கள் தானே.சுற்றுப் புற சூழல்களும் நம்மை நல்வழி செல்ல ஏற்ற வாறு அமைய வேண்டும். மனம் பற்றிய விரிவான கட்டுரையை எனது வலைப் பக்கத்தில் விரைவில் எழுத உத்தேசம் உள்ளது.
உங்களது இந்தப் பதிவிற்குப் பாராட்டுக்கள்.
சிறப்பான எண்ணங்கள் சிறப்பான வாழ்வுக்கு வழிவகுக்கும். அனைத்து மனப்போக்கு உள்ளவர்கள் மத்தியிலேயே நாம் வாழுகின்றோம். அதிலும் நல்லதை வடித்தெடுத்துப் பழக வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளோம். பொறாமை, அடுத்தவர் வளர்ச்சி கண்டு பொறுத்துக் கொள்ளமுடியாமை, தேவையற்று கண்டதற்கும் குறைகூறல், இப்படிப்பல. ஆனால், இவற்றின் மத்தியிலும் நல்ல பழக்குவழக்கங்களைக் கைக்கொண்டு நல்லுவராக வாழமுற்பட வேண்டுமென்பதை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
கோவை2தில்லி சொன்னது…//
நன்றி ஆதி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//ஷீ-நிசி சொன்னது…
மிக மிக நல்ல கருத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது பதிவு..
வாழ்த்துக்கள்//
நன்றி ஷீ-நிசி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//அம்பாளடியாள் சொன்னது…//
அம்பாள், தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
///middleclassmadhavi சொன்னது…
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_28.html - உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்.//
நன்றி மாதவி,என்னை வலைசரத்தில் அறிமுக படுத்தியதற்கு.
//Ragavmurali சொன்னது…//
நன்றி,Ragavmurali தங்களின் விரிவான கருத்துக்கு.
தங்களின் கட்டுரை படிப்பதர்க்கு ஆவலாக இருக்கிறேன்.
நன்றி.
//சந்திரகௌரி சொன்னது…//
சந்திரகௌரி ,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மகிழ்ச்சியான,உயர்வான வாழ்க்கைக்கு அடிப்படையான நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வோம்.
அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
அருமையான பதிவு
ஔவையின் வரப்புயர போல
அனைத்து உய்ர்வுக்கும் தாழ்வுக்கும்
எண்ணங்களே முழுமுதற்காரணம் என்பதை
மிக அழகாக விளக்கி பதிவிட்டமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
//இராஜராஜேஸ்வரி சொன்னது…//
நன்றி இராஜராஜேஸ்வரி மேடம், தங்களின் வருகைக்கும் அழகான கருத்துக்கும்.
//Ramani சொன்னது…//
ஆமாம் ரமணி சார்,எண்ணங்களே உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் ஆகிறது.
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
நாம் செய்யும் செயல்கள் மற்றவர்களுக்கும் வழிகாட்டுதலாய் அமைய வேண்டும்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
எண்ணங்கள் பற்றி கருத்துக்கள் அருமை.
சிந்திக்க ஒரு நல்ல பதிவு அருமை.
மனம் போல் வாழ்க்கை! கெடுவான் கேடு நினைப்பான்!! நல்ல பதிவு பாராட்டுக்கள்
//Dr.S.இராஜேந்திரன்.B.V.Sc; சொன்னது…
மனம் போல் வாழ்க்கை! கெடுவான் கேடு நினைப்பான்!! நல்ல பதிவு பாராட்டுக்கள்//
நன்றி Dr.S.இராஜேந்திரன்,சார்,தங்களின் வருகைக்கும் பாராட்டுகளுக்கும்.
ஆனால் எந்த ஒரு செயலுக்கும் முக்கிய காரணம் எண்ணமே ஆகும்.அத்தகைய எண்ணம் சிறப்பாக இருந்தால் அந்த செயலும் சிறப்பாகவே இருக்கும்.//
மிக அருமையான மன இயல சம்பந்த பதிவு வாழ்த்துக்கள்...
என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (2/11/11 -புதன் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/
நல்லதொரு பதிவு.பகிர்தலுக்கு நன்றி
கருத்துரையிடுக