வியாழன், ஜூன் 30, 2011

என் மக்கள்...


”அம்மா.”.!!...

பெரியதாக சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்...

எதிரில் என் சின்ன பெண் இடுப்பில் கைவைத்தபடி என்னை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்..

  “என்ன நிந்துண்டே கனவா???”

  “அப்பா கூப்பிடறா பாரு” என்றாள்.

  “எதுக்கு டீ கூப்பிடறா”

  “என்ன மா நீ அப்பா சாப்பிட உட்கார்ந்துண்டு இருக்கா நீ என்னடன்னா தட்டுல சாதத்தை போட்டுட்டு இங்க வந்து கனவு காண்டுண்டு இருக்க?? போ போய் மீதிய கவனி”..

அதற்குள் உள்ளே வந்த என் பெரிய பெண்
  “அம்மா நானும் உன்னை கூப்பிட்டு பார்த்தேன், நீ என்னன்னு கேட்கலே அதனால , அப்பாக்கு நானே குழம்பும் காயும் எடுத்துண்டு போய்ட்டேன்.”
என்றவள்

 தங்கையை பார்த்து, “அப்பா பச்சடி கேட்கிறா பாரு எடுத்துண்டு போ”
என்றாள்.
பிறகு என்னிடம் திரும்பி,

  “ ஏம்மா!! உனக்கு என்ன ஆச்சு, இரண்டு மூன்று நாளாகவே ஒரு மாதிரி இருக்க எதையோ யோசிச்சுண்டே இருக்க”???  என்றாள்.

என்னிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றவுடன் மறுபடியும்

“என்னம்மா ஆச்சு” என்றாள்.

அதற்குள் திரும்பி வந்த என் சின்ன பெண்ணும் “என்ன ஆச்சு”என்று கேட்க

பதில் சொல்லிதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட நான்
கொஞ்சம் அசட்டு சிரிப்புடன்,

   “ஒண்ணும் இல்லடி பசங்களா புதுசா Blog ஆரம்பித்து எழுதுகிறேன் இல்லையா அதுதான் வித்யாசமா என்ன எழுதுவதுன்னு யோசிசுண்டு இருந்தேன்”... எனறவுடன் இரண்டு பேரும் ஆரம்பித்துவிட்டார்கள்..

பெரியவள்:  “என்னம்மா நீ வேலையெல்லாம் இல்லாம ஃப்ரியா இருக்கச்சே யோசிக்க கூடாதா? அப்பாவ பத்திதான் தெரியுமே சரியா கவனிக்கலைன்னா கோவம் வந்துடுமே” என்றாள்..

சின்னவள் (கொஞ்சம் நக்கல் party): “ நன்னா யோசிச்ச போ ...ஒன்ணு பண்ணு தினமும் கார்த்தால ‘ பார்க்’ க்கு walking போவ பாரு அப்ப யோசிச்சுண்டே நட உனக்கு நடக்கற சிரமம் தெரியாது. அதோட யோசிசுண்டே உனக்கே தெரியாம இன்னும் ஒரு 3 அ 4 சுத்து ஜாஸ்தியா சுத்தினினாக்க உடம்பாவது சீக்கிரம் இளைக்கும்”  என்று தாக்கினாள்.

 நான் பதில் பேச தோன்றாமல் நிற்க என் நிலமையை பார்த்து என் பெரிய பெண்(எப்போதும் அவள்தான் ஆபத்பாந்தகி) சின்னவளிடம்

 “போடீ வாயாடி, அம்மா பாவம் இப்பொழுதுதான் புதுச எழுத ஆரம்பிச்சு இருக்கா அப்படிதான் இருக்கும்” என்றாள்..

ஆனாலும் சின்னவள் விடாமல், “ அம்மா வித்யாசமா எழுதணும்னு யோசிக்க எல்லாம் வேண்டாம். இப்ப நீ இப்படி நிந்துண்டே யோசிச்சத பத்தி எழுது போதும்.எல்லோரும் சிரிப்பார்கள்”  என்றாள் நக்கலுடன்.

நான் பே!!!! என்று விழித்த நேரத்தில் “அங்க என்ன பேச்சு?? மோர் எடுத்துண்டு வா” என்ற என் கணவரின் குரலை கேட்டவுடன்-----
எல்லோரும்;   “escapeeeeeeeee”
-------------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு: பதிவுக்கு தலைப்பு என் மக்கள் என்று வைத்து விட்டேன் அனால் அது பதிவில் எங்கும் வரவில்லையே?? என்ன செய்வது?? ம்ம்ம்???அதனால்

இப்படி கஷ்டபட்டு யோசித்து, பதிவு நன்றாக வந்து, பதிவுலக மக்களிடமிருந்து நல்ல comments  வர வேண்டுமென்றால் என் மக்கள் இடமிருந்து இப்படி பட்ட நக்கல்களையெல்லாம் பொருத்துகொண்டுதான் ஆக வேண்டும்...

ஆ தலைப்பு வந்து விட்டது....



செவ்வாய், ஜூன் 28, 2011

எங்க ஊர்.....


fort St-George

angelin  எங்க ஊர்... பற்றிய தொடர் பதிவிர்க்கு அழைத்திருக்கிறார்.  என்ன எழுத வேண்டுமோ என்ற பயம், ‘ எங்க ஊர்’ என்ற தலைப்பை பார்த்ததும், போயே போச்சு..

பின்ன என்ன சொந்த ஊரை பற்றி என்றால் பேசிக்கொண்டே போகலமே!!!!!!!!! அதுவும் நான் பிறந்து வளர்ந்த ஊரை பற்றி என்றால் கேட்கவே வேண்டாம்...

எந்த ஊர் ??அது ரொம்ப் புகழ் பெற்ற நகரம் .  அட.. நம்ப சென்னை தான்...

பொதுவாக எல்லோருக்கும் சொந்த ஊர் ஒரு கிராமமாக இருக்கும். ஆனால் எனக்கு சென்னைதான் சொநத ஊர். சிறு வயதில் என் அப்பாவிடம் இது பற்றி நான் கேட்ட போது அவர் தன்னுடைய அப்பா LME  என்கிற டாக்டர் படிப்பு படிப்பதற்காக 1920க்கு முன்னலேயே சென்னைக்கு வந்து விட்டதாகவும், தானும் சிறு வயது முதலே செனனையில் படித்து வந்ததாகவும் அதனால் நமக்கெல்லாம் சென்னைதான் என்று கூறினார். என் தாயாரும் சென்னைதான். அவருடைய தந்தை சென்னை AG's office ல் வேலை பார்த்ததால் அவரும் சிறு வயது முதல் சென்னை தான்.

ஆதலினால்,, எல்லோருக்கும் தெரிந்த சென்னையை பற்றி என்ன எழுதுவது?
நான் என்ன எழுதினாலும் அது யாருக்கும் புதியதாக இருக்காது..

அதனால் சென்னை சிறு வயது முதல் என் பார்வையில் எப்படி இருந்தது என்று சொல்லுகிறேன். உங்களுக்கு பிடிக்கிறதா என்று சொல்லுங்கள்..

 சென்னை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மெரினா பீச். எனக்கு 5அ 6 வயது முதல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குடும்பத்துடன் செல்லும் இடம். அப்பொழுது எங்கள் வீடு மேற்கு மாம்பலத்தில் இருந்தது.புகழ்பெற்ற சீனிவாசா தியேட்டர் அருகில். எஙகள் வீட்டு வாசலிலேயே பேருந்து நிறுத்தம். 11B  busல் ஏறினால் நேர மெரினா பீச்தான் கடைசி நிறுத்தம். அப்பா எங்களை ஒரு ஞாயிற்றுக்கிழமை அழைத்துக்க்கொண்டு செல்வார். பீச் நிறுத்தம் வந்தது பேருந்திலிருந்து குதித்து ஓட்டம் தான் நானும் என் தம்பியும். செருப்பை கையில் எடுத்துக்கொண்டு மணலில் கால் பதிய வேகமாக நடக்க முயல்வோம்.நிமிர்ந்து அலையை பார்தவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ள யார் முதலில் செல்வது என்ற போட்டி வேறுMarina Beach

.  அலைக்கருகில் சென்று ஆசை தீர நீரில் விளையாடுவோம். பின்னர் திரும்பி வரும்பொழுது பாட்டியின் பஜ்ஜி கடைக்கிட்ட நின்று கொள்வோம். அப்பா வந்து ப்ஜ்ஜி வாங்கி கொடுப்பார். ((சாப்பிட்டு முடித்தப்பிறகும் நகராமல் நிற்போம். பாட்டியை சீண்டும் விடலை பசங்களை அவர்,”கடங்காரா அதைதொடாதேடா இதை தொடதேடா” என்று திட்டுவதை கேட்டுவிட்டுதான் நகருவோம்.அவர் அப்படி பேசுவதை கேட்பது எங்களுக்கு ஒரு குஷி))
அங்கிருந்து அண்ணா சமாதி பார்த்துவிட்டு நேராக
பார்தசாரதியை பார்க்க திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில்.பெருமாளை சேவித்துவிட்டு நேரே வீட்டிற்க்கு.




மாதத்திற்க்கு ஒரு முறை பனங்கல் பார்க், ரங்கநாதன் தெரு. பனங்கல் பார்க்கிர்க்கு ரங்கநாதன் தெரு வழியாகதான் செல்வோம். அப்பொழுதெல்லாம் இவ்வளவு பெரிய கடைகளோ கும்பலோ இருக்காது. பார்க்கில் உட்கார்ந்து கொண்டு கொறிப்பதர்க்கு சுவீட் மிக்ச்ர் எல்லாம் உண்டு. அங்கு வைக்கபட்டிற்க்கும் வானொலி பெட்டியில் வரும் ஒலி எங்கிருந்து வருகிறது என்று பார்க்க அந்த மண்டபத்தை சுற்றி சுற்றி வருவோம். “அதுக்குள்ள யாரவது உட்கார்ந்து கொண்டு பேசுவாடி!!”என்று தம்பி சொல்ல.அவனை விட( ஒன்றறை வயதே)பெரியவள் என்பதால் ரொம்ப தெரிந்தவள் என்பதை காட்டிக்கொள்ள போடா அதோ அஙக ஒரு ரூம் இருக்கு பாரு அங்கிருந்து பேசுவார்கள் அது இங்கே கேட்க்கும் .” என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது.

அடுத்து அஷ்ட லக்‌ஷ்மி கோவில் பெசண்ட் நகரில் உள்ளது. அங்கு போக வேண்டுமென்றால் கோவிலுக்கு போகிறோம் என்பதைவிட பீச் இருக்கும் என்ற சந்தோஷம் நிறைய இருக்கும்.Ashtalakshmi Temple

அதன் பிறகு சற்று பெரியவர்கள் ஆனவுடன் பீச்,பார்க் ஆர்வமெல்லாம் குறைந்து புத்தகம் படிக்கும் ஆசை வந்தது. என் தம்பி கிரிகெட் விளையாட்டு என்று சென்றுவிட நான் புத்தகம் படிக்க தொடங்கினேன். அப்பொழுது கன்னிமேரா நூலகம் பற்றி கேள்வி பட்டு அங்கு போக ஆரம்பித்தேன் என் தங்கையையும் கூட அழைத்து கொண்டு(அம்மா தனியாக போகவிடமாட்டர்கள்) ரொம்ப வருடங்கள்.. அங்கு சென்று படிப்பது காலேஜீக்கு நோட்ஸ் எடுப்பதர்க்கு எல்லாம் கன்னிமேரா தான்.Guseums Museum
என்றாவது படிப்பதர்க்கு சரியாக கிடைக்கவில்லை என்றால் பக்கத்தில் உள்ள மியுசிம் செல்வோம், அந்த பெரிய திமிங்கலத்தின் எலும்புகூடை பார்க்க..

வேலைக்கு போக ஆரம்பித்ததும் பிராட்வே.. இந்த பெயரை கேட்டாலே ஏதோ வெளிநாட்டில் இருப்பது போல தோன்றி ஒரு கிளுகிளுப்பை எற்படுத்தியது. ஆனால் அநத கும்பல்,பரபரப்பான வியாபாரம், பேருந்துகள், ஹைகோர்ட்  ஆகியவையாலும், தொடர்ந்து ஒரே இடதுக்கு சென்றதாலோ என்னமோ கொஞ்ம் நாட்களில் சாதாரணமாகிவிட்டது

.தலைமை செயலகம்  அலுவலக வேலை விஷயமாக அங்கு செல்ல நேரிடும் போதெல்லாம் பேருந்தைவிட்டு இறங்கியவுடன் சாலையை கடக்காமல் சிறிது நேரம் நின்று அதன் கம்பீரத்தை ரசிப்பேன்.(என் தோழிகளிம் கேலிபேச்சையும் பொருட்படுத்தமல்)

வேலைக்கு செல்லும் வழியில் பேருந்தில் உட்கார்ந்து கொண்டு மவுண்ட் ரோடு வழியாக செல்லுகையில் அந்த பழைய ஸ்டேட் பாங்க் கட்டிடம், எல் ஐ சி கட்டிடம் ஆர்ட்ஸ் காலேஜ்  எல்லாம் பார்த்துக்கொண்டு செல்லும் போது தலை நகரில் இருக்கிறோம் என்கிற கர்வத்தை தவிர்க்க முடிந்ததிலை.

எக்மோர் ஸ்டேஷன்,செண்ட்ரல், ரிப்பன் கட்டிடம், சென்னை பல்கலைகழகம்,  பிரசிடென்சி காலெஜ்,குயின் மேரீஸ், சாந்தோம் சர்ச்.. அகியவற்றை அவைகளுடைய" HERITAGE BEAUTY" யை இப்பொழுது சென்றாலும் ரசிக்காமல் வருவதில்லை.

முக்கியமாக இந்த இடங்களுக்கு நான் சென்று ரசிக்க துணையக இருந்த,இருக்கி்ற ,இருக்கப்போகிற நம் PTC ... (என்னதான் பெயர் மாற்றிவிட்டாலும் எனக்கு இன்னுமும் (பல்லவன்) PTC தான் திருவள்ளுவர் BUS STAND  தான்.) மறுக்க,,மறக்க முடியுமா???அப்பறம் நம் யுனிட் ட்ரைன்....

இப்படி நான் எழுதிக்கொண்டே போகலாம்.ஆனால் பதிவு முடிவிற்க்கே வராதே அதனால் மீதி இடங்களை நீங்களே நினைவு கூர்ந்து பார்த்துகொள்ள விட்டுவிடுகிறேன்.

எனக்கு பரிச்சயமானவர்களின் எனக்கு அடுத்து ஜீனியர் குணா என்பதாலும்,மற்ற சீனியர்களை தொந்தரவு செய்யாலமா கூடாதா என்று தெரியாததாலும்

இந்த என்னுடைய பதிவை தொடர  இக்கரையும்...அக்கரையும்.. குணசேகரன் 
http://zenguna.blogspot.com அவர்களை தொடர அழைக்கிறேன்.



சனி, ஜூன் 25, 2011

ஆறு.....அதிர்ச்சி...(நிறைவு)


சிறிது தூரதிலேயே மணற்பாங்கான இடம் வந்தது.  அப்பொழுதுதான் ஏதோஆறு என்று சொன்னாரே என்று நினைவுக்கு வர என்ன ஆறு ஓடுகிறது என்று கேட்டேன். என் கணவர்  ”கூவம் ஆறு ”என்று சொல்லிவிட்டு மணல் மேட்டிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார். மேட்டிலிருந்து இறங்க தொடங்கிய நான் கூவம் என்ற பெயரை கேட்டவுடன் அப்படியே அதிர்ந்து போய்  நின்றுவிட்டேன். என்ன இவர் கூவம் என்று சொல்லிவிட்டு அதில் இறஙக ஆரம்பித்து விட்டரே என்று குழப்பம் வேறு வந்தது. அவர் வேறெதாவது பெயரை சொல்லி நாந்தான் சரியாக கேட்டுக்கொள்ளவில்லையோ என்று, மறுபடியும் அவரிடம் சற்று உரத்த குரலில் என்ன பெயர் இந்த ஆற்றிக்கு என்று நான் கேட்க அவரும் மறுபடியும் கூவம் என்று சொல்லிவிட்டு என்னை திரும்பி பார்க்க நான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. உடனே அவர் என் அருகே வந்து ’ஏன் நின்று விட்டயாய்? வா போகலாம் ’என்றார். நான் உடனே ’என்ன நீஙகள் ??கூவம் ஆற்றில் இறங்குவதா!!! முடியவே முடியாது!!!’என்று  சொன்னேன்.

    ’நீ  என்ன சென்னையில் உள்ள கூவம் என்று நினைத்துக்கொண்டயா? ஆமாம் இது அதேதான்’ எனறார். எனக்கு மேலும் அதிர்ச்சி... இதில் போய் இறங்க சொல்லுகிறீர்களே என்று நான் கேட்க. ’ இதோ பார் அந்த மாதிரி சாக்கடை தண்ணியாக இருந்தா அப்பா என் தம்பி எல்லாம் இறங்கி போயிருப்பார்களா?? உன்னை அழைத்துதான் வருவோமா?? நீ கீழே இற்ங்கி பார்’ என்றார்.அப்பொழுதுதான் பார்தேன் என் மாமனார்,மச்சினர் அந்த மூட்டைக்காரர் எல்லோரும் அந்த பக்கம் உள்ள மணல் மேட்டில் எறிக்கொண்டு இருப்பதை !! சரி என்று நானும் அருகில் போய் பார்க்க, கரை ஓரத்தில் சிறிதள்வு தெளிவான நீர் தெரிந்தது. அப்பொழுதும் என் அதிர்ச்சி போகவில்லை.

என் கணவர் கூவம் ஆறு நம் ஊரை அடுத்துள்ள கூவம் என்கிற ஊரிலிருந்து உற்பத்தியாகி வருகிறது. அங்கு புகழ் பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது என்று விளக்கி கூறினார். அதுமட்டுமல்ல இந்த பகுதியில் உள்ள ஊர்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் எல்லவற்றிர்க்கும் பயன்படுகிற்து என்றார். கூவம் என்றால் சாக்கடை என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.மேலும் இப்பொழுது மழை குறைந்து விட்டதால் ஆற்றில் நீர் இல்லை என்றும்,17/18 வருடங்களுக்கு முன் (அதாவது இபொழுக்கு 40 வருடஙகளுக்கு முன்பு)  அவருக்கு 10 வயது இருக்கும் போதெல்லாம் மழை காலங்களில் முட்டிவரை தண்ணீர் வரும் என்றும் நண்பர்களுடன் நீச்சல் அடித்ததை பற்றி எல்லாம் கூறினார்.

அதன் பிறகு நான் நம்பிக்கை வந்து ஆற்றில் இறங்கினேன். தண்ணீர் அதிகம் ஒடவில்லை ஓரத்தில் சிறிது ஒடிக்கொண்டு இருந்தது. மற்றபடி ஆங்காங்கே தேங்கியிருந்தது. நீரில் கால் வைத்தவுடன் சில்லென்று இருந்தது. மனதில் இருந்த அதிர்ச்சி போகாமலேயே சிறிது நேரம் தண்ணீரில் நின்று விட்டு கிராமத்துக்கு போனோம். அங்கிருந்த புராதனமான பெருமாள் கோவிலுக்கு போய் பெருமாளை சேவித்துவிட்டு வீட்டிற்கு போனோம்.பிறகு என்மாமனாரின் மூதாதயர்களின் வயல்களை பார்த்துவிட்டு என் மாமனார் அப்பொழுது பயிறிடப்படும் முறைகளை கூற கேட்டு அறிந்துகொண்டேன்.

மாலையில்  திரும்பி கூவம் ஆற்றை தாண்டி வந்த பொழுது இப்படி பல கிராமங்களில் பல 100 மக்களின் வாழ்வின் ஜீவாதாரமாக உள்ள நதியை எப்படி பாழ்படுத்திவிட்டோம் என்கிற கனத்த உள்ளதோடு திரும்பி வந்தேன்.
அதன் பிறகு 2 -3 வருடங்கள்  கழித்தே ஊருக்கு மறுபடியும் போக முடிந்தது.
ஆனால் முதல் முறை நான் போனபொழுது இருந்தளவுகூட தண்ணீர் இல்லை. அதன் பிறகு நான் போனபோதெல்லாம் தண்ணீரே பார்க்கமுடியவில்லை. வெறும் மணல்தான்..............


நிறைவு..

ஆறு......அதிர்ச்சி...

1989 செப்டம்பரில் எனக்கு திருமணமான புதிதில்.....


திருமணம் முடிந்து என் கணவரின் வீட்டிற்க்கு சென்ற 2/3 நாட்களில், என் மாமியார் என் கணவரிடம் என்னை அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்து போக சொன்னார்.உடனே என் மாமனாரும் நாளைக்கே போகலாம் எல்லோரும் கார்த்தால 6 மணிக்கு கிளம்பிவிடவேண்டும் என்று கூறினார். நானும் என் மாமியரிடம் dress எல்லாம் எடுத்துவைத்து கொள்ளட்டுமா என்று கேட்க, அவர் ஊருக்கு என்றவுடன் ரொம்ப தூரம் என்று நினைத்துவிட்டயா.? இங்கு தான் திருவள்ளுர் பக்கதுலதான் கார்தால போனாக்க சாயங்காலம் வந்து விடலாம் என்று கூறினார்.

மறுநாள் 6 மணிக்கு நான்,என் கணவர், என் மாமனார் மற்றும் என் மச்சினர் (என் அவரின் தம்பி) எல்லோரும் கிளம்பி பெரம்பூர் அருகில் உள்ள loco works station க்கு train எறுவதர்க்கு வந்தோம். நான் என் கணவரிடம்.ஊருக்கு எப்படி போக வேண்டும் என்று கேட்க அவரும், இங்கிருந்து train ல திருவள்ளுரை அடுத்து 2 வது station  கடம்பத்துரில் இறங்கி அங்கிருந்து bus ல் 5 கிலோ மீட்டர் போய் பிறகு ஒரு ஆற்றை தாண்டி போக வேண்டும் என்றும்,அது ஒரு சிறிய அழகான் கிராமம் என்றும்,அங்கு அவர்களுக்கு இருந்த நிலஙகளின் விவரங்களையும்  கூறினார்.  நான் chennaiலேயே பிறந்து வளர்ந்தவள்.அதனால்
கிராமம் என்றவுடன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். ஆறு என்று கூறினாரே என்ன ஆறு என்று நான் கேட்பதர்க்குள் train வந்துவிடவே கேட்க்காமல் விட்டுவிட்டேன். 1 மணி நேர பயணத்திற்கு பிறகு கடம்பத்தூரை அடைந்தோம்.அங்கு இறங்கி bus stand க்கு சென்றோம்

           . சிறிது நேரத்தில் ஏக கும்பலோடு படிக்கட்டிற்கு வெளியே தொங்கும் மக்களேடு bus  வந்தது. நான் எப்படி இதில் ஏறுவது என்ற கவலையோட என்னவரை பார்க்க அவர் கவலை படாதே இப்பொழுது எல்லோரும் இறங்கிவிடுவர்கள் ஓரளவு காலியகிவிடும் என்று கூறினார். அது போலவே ஆக, நாங்களும் ஏறிக்கொண்டோம். எனக்கு உட்கார இடம் கிடைத்தது. நானும் உட்கார்ந்து கொண்டு இயற்கையை ரசிக்க ஆரம்பித்தேன். பசுமையான வயல்வெளிகள்,பெரிய மரங்கள், ஆங்காங்கே வீடுகள் (குடிசை &; ஒட்டு வீடுகள் சில செங்கல் வீடுகள்) சென்னைக்கு அருகில் இவ்வளவு பசுமயா? என்கிற ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு வந்தேன்.15 -20 நிமிடங்களில் நாஙகள் இறங்குமிடம் வந்து இறங்கினோம். என் மாமனார்,தலையில் பெரிய மூட்டை வைத்துக்கொண்டிருந்த ஒருவருடன் பேசிக்கொண்டே வேகமாக நடந்து சென்றுவிட்டர்.

    அப்பா யாரோடு பேசுகிரார்? என்று நான் கேட்க என் கணவர் அதுதான் பொத்தாரு மணி நம் நிலத்தில் பயிற் செய்பவர் என்றார். ஒ குத்தகை காரரா (எதோ எனக்கும் தெரியும்னு காட்டிக்கொள்ள) என்று நான் கேட்க இல்லை நிலங்களை குத்தகைக்கு விடவில்லை அது வாரத்துக்கு பயிற் செய்கிறோம் என்றார்.எனக்கு தெரிந்த ஒரே வார்தையான ’குத்தகை ’இல்லை என்றவுடன் நான் புரியாமல் முழிப்பதை பார்த்து  விளக்கம் கொடுத்தார்.அதாவது நிலம் நம்முடையது,உழைப்பு விவசாயினுடையது. விதை,மருந்து,எரு எல்லா செலவும் பாதி,பாதி. அது போல கிடைக்கும் அறுவடையும் பாதி பாதி பிரித்து கொள்வார்கள். (இது பற்றிய விவரம் என்மாமனார் குடும்பம் பற்றிய விவரம் வேறு பதிவில் ஏழுதுகிறேன்.)
சரி எனறு மெள்ள நடக்க தொடங்கினோம்.

மன்னிக்கவும். பதிவு பெரியதாகிவிட்டது.
அடுத்த பதிவில் தொடருகிறேன்.
நன்றி.




வியாழன், ஜூன் 23, 2011

சந்தோஷம்.. கஷ்டம்...

என்ன சந்தோஷம் என்ன கஷ்டம்???

நானும் ஒரு பதிவு ஆரம்பித்து எனக்கு தெரிந்ததை ஏதோ கிறுக்கி வைக்க, அதையும் மதித்து படித்து கருத்து கூற சில நல்ல உள்ளங்கள் இருக்கிறது என்கிற சந்தோஷம் -----எனக்கு.

என்னடா இவள் கிறுக்குவதை படிக்க வேண்டி இருக்கிறதே என்கிற கஷ்டம்---- உங்களுக்கு....

எனக்கு சுவையாக தோன்றுவது உங்களுக்கு அறுவையாக இருக்கலாம். நீஙகளும் சுவையாக இருப்பதாக உணர்ந்தால் சந்தோஷம். அறுவையாக இருந்தால் பொருத்துக்கொண்டு தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

என் பதிவிர்க்கு வந்து கருத்துகளை இட்டு என்னை உற்சாக படுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்கிறேன்.

திங்கள், ஜூன் 20, 2011

இல்லையா.......

என் சிறிய பெண்ணிற்கு இப்பொழுது 15 வயதாகிறது. அவளுக்கு 6/7 வயது இருக்கும் பொழுது என்ன பேசினலும் இல்லையா என்கிற வார்தையை கூட சேர்த்துகொண்டு பேசுவாள். (உம்..பால் சாப்பிடலாம் இல்லையம்மா? படிக்கலாம் இல்லையாப்பா ...). நாஙகளும் அப்படி பேசக்கூடாது என்று அவளுக்கு புரியவைக்க ரொம்ப் கஷ்டப்பட்டோம். அதை திருத்தவே முடியவில்லை.

ஒரு நாள் என் கணவர் அவளை கூப்பிட்டு அருகில் உட்கார வைத்துக்கொண்டு ரொம்ப நேரம் எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பிறகு நான் சொல்லுவது புரிகிறதா என்று கேட்டார். அவளும் எனக்கு ரொம்ப நன்றாக புரிந்துவிட்டது என்ற்வுடன். என்ன புரிந்தது என்று அவரும் கேட்க அதற்கு என் மகள் *இல்லையா சொல்லக்கூடாது இல்லையாப்பா* என்றாளே பார்க்கலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோருக்கும் சிறிப்பு அடங்க ரொம்ப நேரமானது.


அதன் பிறகு 1/2 வருடங்களில் அப்படி பேசுவது தானகவே நின்று விட்டது. இப்பொழுது நன்றாக பேசுகிறள்.