வணக்கம்.
மறுபடியும் பதிவு எழுத ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஆன்மீகப்பதிவுடன் எழுத ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. கோடை விடுமுறையின் போது ஒரிரு கோவில்களுக்கு சென்று வந்தோம். அவற்றில் முக்கியமானதும், புராதமானதுமான பிண்டிங்கநவிலே கோவில் பற்றி தெரிந்து கொள்ளலாம்....

பிண்டிங்கநவிலே......(BINDINGNAVILE)
பெங்களூரிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் ஹாசன்,பேலூர் சேல்லும் வழியில் பேலூர் கிராஸ் என்கிற இடத்திலிருந்து சற்று உள்ளே இருக்கிறது பிண்டிங்நவிலே என்கிற இந்த ஊர். இங்கு மிகவும் பழமையான கேசவ பெருமாள் கோவில் இருக்கிறது. முக்கிய தெய்வம் கேசவ பெருமாளாக இருந்த போதிலும், இங்குள்ள கருடன் சன்னதி சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. காரணம்.......இங்கு கருடருக்கு அவருடை இரண்டு தேவியருடன், திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

சந்தன மரத்திலான கருடர்.
5 அடிக்கும் மேலே உயரமான இந்த கருடர் சந்தன மரத்தால் ஆன திருஉருவமாக இருக்கிறார். கருடர் இங்கு வந்த விவரத்தை கோவில் பட்டர் ஓரு சிறு கதையாக விளக்கினார்.

மூலவர் சென்ன கேசவப்பெருமாள்..

தாயார் சொளமியநாயகி.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன். பேலூரில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலுக்கு ஒரு கருட விக்கிரகம் தேவைபட அதற்காக காஞ்சீபுரத்திலிருந்து மரத்தால் செய்யப்பட்ட கருடனை ஏளபண்ணிக்கொண்டு வந்தனராம். அந்த நாட்களில் காடுகளின் வழியாக இரவு பயணப்படுவது சிரமம் என்பதினால் பகல் பொழுதுகளில் பிரயாணம் செய்துவிட்டு இரவுப்பொழுதுகளில் சத்திரங்களிலேயோ, கோவில்களிலேயோ தங்கி பிறகு செல்வது வழக்கம். அப்படி பேலூர் செல்லும் வழியில் பிண்டிங்கநவிலே என்கிற இந்த ஊரை அடைந்த பொழுது இரவுப்பொழுதாகிவிட்டதால் கோவிலில் தங்கியிருக்கிறார்கள்.
காலையில் எழுந்து பேலுருக்கு செல்ல ஆயத்தமான பொழுது, கருடரை தூக்க முடியவில்லையாம். எவ்வளவு முயற்சி செய்தும் கருடரை தூக்க முடியாததால் ஏதோ தெய்வக்குற்றம் ஆகிவிட்டது என்று கலங்கி நின்றார்களாம். மைசூர் ராஜ்யத்திற்கு உட்பட்ட அந்த பகுதியின் பாளைக்காரரான ஜெயதேவர் என்பவர் அங்கு வர அவரிடம் முறையிட....
அவரும், தமக்கு கனவில் பெருமாள் வந்து கருடனை இந்த கோவிலிலேயே பிரதிஷ்டை செய்யும் படி கூறியதாகவும், அதற்காகத்தான் தான் அங்கு வந்ததாகவும், மேலும் தாம் வருவதற்கு தாமதமாகிவிட்டதால் அவர்களால் கருடரை தூக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவர்கள் கருடரை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார்களாம்... பிறகு கருடருக்கு தனி சன்னதி ஏற்படுத்தி அன்றிலிருந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டதாம்.

சாதாரண மரத்தில் இருந்த இந்த கருடர் திரு உருவம்.சென்ற நூற்றாண்டில் சிதிலமடைய ஆரம்பித்த பொழுது, இந்த பகுதியை சேர்ந்த பி.வி.கருடாச்சாரிய ஐயங்கார் (BVK IYENGAR) என்பவரின் கனவில் பெருமாள் தோன்றி வேறு திரு உருவம் அமைக்க சொல்ல அவரும் பழைய திரு உருவை அகற்றிவிட்டு 1930 களில் சந்தன மரத்தை கொண்டு திரு உருவம் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இந்த கருடரின் உற்சவ மூர்த்திக்கு இரு தேவியர்கள் உண்டு. கருடருக்கு சிறப்பு பூஜையாக இரு தேவியருடன் திருக்கல்யாண உற்சவம் செய்விக்கிறார்கள். வேறு எந்த கோவிலிலும் கருடருக்கு கல்யாண உற்சவம் நடப்பதாக தெரியவில்லை.கருடரின் திருமண உற்சவமே இக் கோவிலில் சிறப்பு. திருமணம் நல்ல படியாக அமையவும்,குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இக்கோவிலில் கருடருக்கு விஷேச அர்ச்சனையோ அல்லது முடிந்தவர்கள் கல்யாண உற்சவமோ செய்து வைக்க அவர்களுடைய பிரார்தனையை நல்ல படியாக முடித்து கொடுக்கிறார் கருட பகவான்.

உற்சவ கருடர் இரு தேவியர்களுடன்.
(இவருக்குதான் கல்யாண உற்சவம்
செய்விக்கப்படுகிறது.)
இந்த கருடரைப்பற்றி சொல்லப்படும் இன்னுமொரு சிறப்பான விஷயம்... தேவலோகத்திலிருந்து (மேலக்கோட்டை பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு வரும்) வைரமுடியை கருடன் பூலோகத்திற்கு கொண்டு வந்த பொழுது இந்த இடத்தில்தான் அதனை கிருஷ்ணருக்கு அளித்தாராம்.
அடுத்தது நலம் தரும் நாகமங்கலா........
நட்புடன்
ரமாரவி..