புதன், செப்டம்பர் 07, 2011

கடை நிலை ஊழியர்கள் - (தொடர் பதிவு)



பதிவர் தானை.தலைவி அவர்கள்,தம்முடைய கடைநிலை ஊழியர்கள் பற்றிய பதிவை தொடர்ந்து எழுதி நிறைவு செய்யுமாறு கோரியுள்ளார்(.மேடம் உங்க பதிவுக்கு பெயர் வைக்கவில்லையே அது ஏன்?? பெயர் சூட்டுவிழா நடத்த வேண்டாமா??)

என்னை தொடர் பதிவிர்க்கு அழைத்தமைக்கு நன்றி.

முதலில் தெருக்களில் குப்பையை சேகரிப்பவர்கள் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணியில் உள்ளவர்கள்..



இவர்கள்,தங்களது பணியினை சரியாக செய்யாமல் போனால்?? என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறோமா?

 என்ன ஆகும்?? தெருவெல்லாம் குப்பைமயமாக இருக்கும்,கழிநீர் சரிவர செல்லாது......என்ன இது சின்ன குழந்தைக்கு சொல்லுவது போல இருக்கிறதா? இல்லை பள்ளிக்கூட கட்டுரை மாதிரி இருக்கிறதா? இருந்தாலும் பரவயில்லை யோசித்து பார்க்கலாம்......



நாமாவது நம் வீட்டைதான் சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம்,அவர்கள் நம் தெருவை,ஊரை,நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறார்கள்.

வீட்டில் வாசலில் குப்பைதொட்டியை வைத்துவிட்டு அதை எடுக்க அவர்கள் வரவில்லை என்றால்,  “வாசல்ல இரண்டு நாளா குப்பை அப்படியே இருக்கு,ஒரே நாத்தமா இருக்கு,எங்க போனான் இந்த குப்பை வண்டிக்காரன்,எடுத்துண்டு போக கூடாதா?” என்று புலம்பித்தள்ளிவிடுவோம்.

ஒரு நாள் அவர் வராமல் போனாலே நாற்றம் அடிக்கும் குப்பை!!ஆனால் அவர்களோ தினம் தினம் இந்த நாற்றத்தில்தான் பணி புரிய வேண்டும். எவ்வளவு கஷ்டம்?

அடுத்து அலுவகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள்.அவர்கள் கோப்புகளை கொண்டுசெல்ல உதவுவதுடன்,நமக்கு சரியான நேரத்தில் காபி,டீ டிபன் வாங்கி வந்து உதவுகிறார்கள்.

the peon

அலுவலக வேலைக்கு நடுவில் தலைவலியா?உடனே கூப்பிடு அவரை, “தலைவலி அதிகமாக இருக்கு கொஞ்சம் போய் தைலமும் மாத்திரையும் வாங்கி வருகிரீர்களா” என்றால் உடனே உதவிக்கு ஓடி வருகிறார்கள்.

அவர்களும் மனிதர்கள்தான் ஆனால் நம்மைவிட ஒரிரண்டு நிலை கீழே பணிபுரிவதால் அவர்களை விரட்டி வேலை வாங்க வேண்டும் என்று கூறுபவர்களை பார்த்தால் எனக்கு கோபமாக வரும்.

நான் பணியில் இருந்த சமயம்,அலுவலகத்தில் சமவயது உள்ளவர்களை பெயர் சொல்லியும், பெரியவர்களை சார், மேடம் என்றும் அழைப்பேன்.அதே மாதிரி அலுவலக உதவியாளர்களில் வயதானவர்களை சார் என்று கூப்பிடுவேன்.

அதற்கு ஒரு உதவியாளர் “என்னம்மா நீங்க என்னப்போய் சார்ன்னு சொல்லரீங்க நான் பியூன் தான்” என்றார். நான் அவரிடம் “பாருங்க அந்த உதவி இயக்குனர் என் சம வயது உடையவர்தான் ஆனால் அவரை சார் என்றுதான் கூப்பிடுவேன் ஏன் என்றால் அவருடைய பதவிக்கு நாம் தரும் மரியாதை.அதே மாதிரி நீங்க பியுனாக இருந்தாலும் வயதில் மூத்தவர்.அதனால் சார்” என்றவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சியை என்னால் உணரமுடிந்தது.



அடுத்து நம் வீடுகளில் வேலை செய்பவர்கள்.இவர்களை பற்றி கூறவே வேண்டாம் அவர்கள் இல்லை என்றால் நமக்கு ஒரு கை இல்லாத மாதிரியே இருக்கும்.அதிலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் பல வீடுகளில் அவர்களது தேவை அத்தியாவசியமான ஒன்றாக இருக்கு.

நான் இதுநாள் வரை வீட்டு வேலைக்கு யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. தற்சமயம் கடந்த ஒரு மாதமாகத்தான் ஒருவர் எனக்கு உதவியாக வீடு பெருக்கி துடைத்து கொடுத்துவிட்டு செல்கிறார்.

அவர் பெயர்,“ரத்னா”. சுத்தமாக வேலை செய்வார். பளிச்சென்று உடையுடன் வருவார். எது சொன்னாலும் சரி என்று கேட்டுக்கொண்டு அந்த வேலையை செய்து முடித்து கொடுப்பார்.

இவர்களை தவிர பள்ளிக்கூடங்கள்,ஆஸ்பத்திரிகளில் வேலை செய்யும் ஆயா அவர்கள், கட்டிடங்களில் வேலைபார்க்கும் வாட்ச்மேன் போன்றோர்,என கடைநிலை ஊழியர்கள் நிறைய பேர்கள்..

அவர்கள் தொடர்ந்து வேலை செய்யும் போது நாம் அவர்களைப்பற்றி நினைப்பதே இல்லை.ஆனால் ஒருநாள் இவர்களில் யாராவது வராமல் போனால் நாம் எவ்வளவு அவதி படுகிறோம்.இந்த அவதியை நாம் எல்லோரும் உணர்ந்திருப்போம்.

கடைநிலை ஊழியர்தானே என்று பார்க்காமல் அவர்களால் நடத்திக்கொடுக்கப்படும் மேன்மையான வேலைகளை பார்த்தோமானால் அவர்களையும் மேல்நிலை ஊழியர்களே என்று சொல்லலாம்.
--------------------------------------------------------------------------------------------------------

54 கருத்துகள்:

குறையொன்றுமில்லை. சொன்னது…

கடை நிலை ஊழியர் என்றாலும்
அவர்களும் ஆசா பாசங்கள் நிறைந்த
மனிதர்கள் தானே. சார்னு கூப்பிடுவ்தில் தப்பே இல்லைதான். பார்க்கப்போனா அவர்களுக்கு நாம மறியாதை கொடுப்பதுதான் மனிதப்பண்பு.

M.R சொன்னது…

உண்மைதான் சகோதரி .

தங்கள் கருத்து ஏற்கக்கூடியதே .

பகிர்வுக்கு நன்றி

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//Lakshmi சொன்னது…//

நன்றி அம்மா,தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

// M.R கூறியது...//

நன்றி ரமேஷ் தங்களின் கருத்துக்கு.

ஹுஸைனம்மா சொன்னது…

கடைநிலை ஊழியர்கள் இன்றியமையாதவர்கள் சமூகத்திற்கு.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//ஹுஸைனம்மா கூறியது...
கடைநிலை ஊழியர்கள் இன்றியமையாதவர்கள் சமூகத்திற்கு//

ஆம் ஹுஸைனம்மா. நன்றி தங்களின் கருத்துக்கு.

மகேந்திரன் சொன்னது…

இன்றைய கடைநிலை ஊழியர்கள் இல்லையென்றால்
நாடு குப்பைக்காடாகிவிடும்.
சுத்தம் என்பதற்காக மெனக்கிட்டு வேலை பார்ப்பவர்கள் அவர்கள் தான்.
அவர்களுக்கு சிம்மாசனம் தரவில்லை எனினும்
குறைந்தபட்சம் மரியாதையாவது தரவேண்டும்.
சில பல தெற்காசிய நாடுகள், மத்திய மேற்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில்
அதிகபட்ச சம்பளம் வாங்குபவர்கள் சாலையை பெருக்குபவர்கள் தான்..
ஏன் இங்கே சொல்லிக்கொள்ளும் சம்பளம் கூட இல்லை,
சிந்திக்க வேண்டும் அரசு...
பதிவு அருமை சகோதரி.

இன்று முதல் உங்கள் பதிவுகளை
வாசிக்கும் பெருமை பெறுகிறேன்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//மகேந்திரன் சொன்னது…//

நன்றி மகேந்திரன் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு. அவர்கள் இல்லையென்றால் நாமெல்லாம் என்னாவோம் என்று தெரியாது.

அவர்களும் மனிதர்கள் தானே மரியாதையுடன் தான் நடத்த வேண்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

உயர் பதவியில் இருப்பவர் எவ்வளவு சிறியவராக இருப்பினும், சார் போட்டு அழைப்பது தானே வழக்கம்.

அதுபோலவே, நம் கீழே வேலை செய்பவர் எவராக இருந்தாலும், சிறியவரோ, பெரியவரோ வாங்க, போங்க என்று மரியாதை கொடுத்து பேசுவது தான் என் வழக்கம்.

வாடா, போடா, வாய்யா, போய்யா என்ற அதிகாரமெல்லாம் அவர்கள் மனதில் நம் மீது ஒருவித வெறுப்பைத் தான் உண்டாக்கும்.

நான் இந்த விஷயத்தை என்னுடைய ஒரு சில சிறுகதைகளில் கூட கொண்டு வந்துள்ளேன். ஆனால் அவற்றை வலைப்பூவில் இதுவரை வெளியிடவில்லை.

நல்லதொரு பதிவு கொடுத்துள்ளீர்கள், மேடம்.

நன்றி, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…//

நன்றி ஐயா தங்களின் விரிவான கருத்துக்கு.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//கோவை2தில்லி சொன்னது…//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி.

SURYAJEEVA சொன்னது…

மனிதனை மனிதனாய் பார்ப்பதே மனிதனாய் வாழ்வதின் உண்மை நிலை..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//suryajeeva சொன்னது…
மனிதனை மனிதனாய் பார்ப்பதே மனிதனாய் வாழ்வதின் உண்மை நிலை..//

நன்றி suryajeeva தங்களின் கருத்துக்கு.

Angel சொன்னது…

கடைநிலை ஊழியர்கள் இல்லையென்றால் அவ்வளவுதான் .நம்மூர்ல அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்குதான்னு தெரியாது but
இங்கெல்லாம் அவங்களுக்கு high wages கிடைக்குது .எல்லாரையும் சக மனிதராய் மதித்து மரியாதை தருவது நல்ல பண்பு

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//angelin சொன்னது…//

angelin. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஸ்ரீராம். சொன்னது…

அவர்களும் மனிதர்கள்தானே...வயதில் பெரிய கடைநிலை ஊழியர்களுக்கு மரியாதை கொடுத்துதான் நானும் பேசுவது வழக்கம்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//ஸ்ரீராம். சொன்னது…// ஆம்.
நன்றி ஸ்ரீராம் உங்க கருத்துக்கு.

தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…

கடை நிலை ஊழியர்களில் எனக்கு பிடித்தவ்ர் தபால்காரர். வருடா வருடம் "ஸார் ஒரு நல்ல டைரி இருக்குமா? என்று பணிவோடு கேட்பார் நானும் அவருக்காகவே தனியாக வந்த டைரியில் நல்லதாக எடுத்து வைத்துவிடுவேன்.என் மனைவி அவருக்கு மோர் அல்லது டீ கொடுப்பார். இப்பட்யே நல்ல நண்பனாக ஆகி விட்டார்.என் மகள் கல்யாணத்துக்கு அவரை வீட்டுக்குள் அழைத்து பத்ரிகையை நானும் மனைவியும் கொடுத்தவுடன் உணர்ச்சிவசப்பட்டார்.நான் நங்க நல்லூரை விட்டு வந்து 10 வருஷம் ஆகிவிட்டது இன்னமும் எனக்கு வரும் கடிதங்களை என் மாமனார் வீட்டில் கொடுத்து விடுவார். நமது வாழ்க்கையில் தேவையான நண்பர்கள்.அதே மாதிரி நான் கை ஒடிந்து ஆஸ்பத்ரியில் இருந்தபோது எங்கள் வீட்டில் வேலை செய்யும் "தாயி" 2 வாழிப்பழங்களோடு வந்து பார்த்தபோது அதை வாங்கி நான் ஒரு கையால் சாப்பிடுவதை பார்த்து கலங்கிவிட்டாள். ந்ல்ல சிந்திக்க வைக்கும் பதிவு நன்றி.நான் எழுதியது அதிகமாகத் தோன்றினால் பதிவிட வேண்டாம்

S Maharajan சொன்னது…

//கடைநிலை ஊழியர்தானே என்று பார்க்காமல் அவர்களால் நடத்திக்கொடுக்கப்படும் மேன்மையான வேலைகளை பார்த்தோமானால் அவர்களையும் மேல்நிலை ஊழியர்களே என்று சொல்லலாம்.//
நல்லதொரு பதிவு கொடுத்துள்ளீர்கள்
எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒன்று

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பதவியில் எந்த நிலையில் இருந்தாலும், வயசுக்கு கண்டிப்பா மரியாதை கொடுக்கணும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் கருத்து ஏற்கக்கூடியதே.

Vazhththukkal.

பெயரில்லா சொன்னது…

அவர்களையும் மேல்நிலை ஊழியர்களே என்று சொல்லலாம்---

சரியாக சொன்னீர்கள்...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…//

அதிகமெல்லாம் இல்லை சார். மிகவும் அருமையாக எழுதியிருக்கீங்க. தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//S Maharajan சொன்னது…//
நல்லதொரு பதிவு கொடுத்துள்ளீர்கள்
எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒன்று///

ஆம் மாகராஜன்.தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//அமைதிச்சாரல் சொன்னது…
பதவியில் எந்த நிலையில் இருந்தாலும், வயசுக்கு கண்டிப்பா மரியாதை கொடுக்கணும்.//

நன்றி அமைதிச்சாரல் ஐயா,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//சே.குமார் சொன்னது…
தங்கள் கருத்து ஏற்கக்கூடியதே.//

நன்றி குமார் கருத்துக்கு.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//ரெவெரி சொன்னது…
அவர்களையும் மேல்நிலை ஊழியர்களே என்று சொல்லலாம்---//

ஆம் ரெவெரி. நன்றி தங்களின் கருத்துக்கு.

சுசி சொன்னது…

அருமையான பதிவு ரமாஜி !, அவர்களுக்கு நாம் சம்பளம் மட்டும் தான் கொடுக்கிறோம் (அலுவலகத்தில் அதுவும் இல்லை, முதலாளி தான் நமக்கும் அவர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறார்.) ஆனால் அவர்கள் நம் மீது எதிர்பார்பில்லாத அன்பினை பொழிகிறார்கள். நாம் தான் அதை புரிந்து கொள்ளவேண்டும்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//Thanai thalaivi சொன்னது…//

வாங்க தானை தலைவி.நன்றி தங்களின் அருமையான கருத்துக்கு.

Yaathoramani.blogspot.com சொன்னது…

படங்களுடன் மிக அழகான விளக்கங்களுடன்
பதிவைத் தந்துள்ளீர்கள்
தரமான பதிவு
வாழ்த்துக்கள்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

// Ramani கூறியது...
படங்களுடன் மிக அழகான விளக்கங்களுடன்
பதிவைத் தந்துள்ளீர்கள்
தரமான பதிவு
வாழ்த்துக்கள்//

நன்றி ரமணி சார், தங்களின் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.

Rathnavel Natarajan சொன்னது…

கடைநிலை ஊழியர்தானே என்று பார்க்காமல் அவர்களால் நடத்திக்கொடுக்கப்படும் மேன்மையான வேலைகளை பார்த்தோமானால் அவர்களையும் மேல்நிலை ஊழியர்களே என்று சொல்லலாம்.

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் அம்மா.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//Rathnavel சொன்னது…//

நன்றி ஐயா தங்களின் அன்பான கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஓணம் நல்வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நல்ல பகிர்வு. கருத்துக்கள் இனிமை. பாராட்டுக்கள்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//இராஜராஜேஸ்வரி சொன்னது…//

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.தங்களின் கருத்துக்கும் நல்வாழ்த்துக்களுக்கும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>கடைநிலை ஊழியர்தானே என்று பார்க்காமல் அவர்களால் நடத்திக்கொடுக்கப்படும் மேன்மையான வேலைகளை பார்த்தோமானால் அவர்களையும் மேல்நிலை ஊழியர்களே என்று சொல்லலாம்.

உங்கள் விசால நிலை , பரந்த மனம் தெரிவிக்கும் கருத்துக்கள்..


அப்புறம் பர்சனலாஒரு கருத்து.. இந்த பிளாக் பேக் கிரவுண்ட் டிசைன் சுமார் தான், முடிஞ்சா மாற்றவும்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…//

நன்றி செந்தில்குமார்,தங்களின் கருத்துக்கு.

அம்பாளடியாள் சொன்னது…

தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ ......

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு கருத்து.... அவர்களும் மனிதர்கள் தானே... என்பது நிறைய பேருக்கு புரிவதில்லை....

என்னுடைய அலுவலகத்தில் எப்போதுமே என்னை விட வயதில் பெரியவர்களாக இருந்தால், நிச்சயம் மரியாதையோடு தான் அழைப்பேன் - அவர் எந்த வேலையில் இருந்தாலும்.....

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//வெங்கட் நாகராஜ் சொன்னது…//

நன்றி வெங்கட் தங்களின் கருத்துக்கு.

நெல்லி. மூர்த்தி சொன்னது…

வசூல்ராஜா MBBS திரைப்படத்தில் வருவது போன்று அவர்களையும் நாம் சமமாகப் பாவிக்க தவறுவோமேயாயின், மனித நேயம் என்பது நம் உதட்டில் மட்டுமே உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இப்பதிவை படிக்கும் வாசகர்களிடம் நிச்சயம் ஒரு மாற்றம் எழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ”அற்புதமான கவன ஈர்ப்பு பதிவு” என்றால் இது மிகையில்லை.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//நெல்லி. மூர்த்தி கூறியது.....//

நன்றி மூர்த்தி தங்களின் கருத்துக்கு.

கதம்ப உணர்வுகள் சொன்னது…

சிந்திக்கவைத்த பகிர்வு ராம்வி....

நம்மிடம் வேலை செய்பவர்களை என்னிக்காவது நினைச்சு பார்த்திருக்கோமா? ஆனால் அவர்கள் ஒரு நாள் வரலைன்னா நாம எத்தனை அவஸ்தை படுகிறோம்...

உண்மையே.....

நம்மை போல அவர்களும் மனிதர்கள் தான்... வருமானத்திற்காக படிப்பு குறைவு என்பதாலும் இத்தனை சிரமங்கள் படுகிறார்கள்... மற்றபடி அவர்களும் நம்மை போல வேலை செய்பவர்கள் தான்... திருடவோ ஏமாற்றவோ இல்லை.... உழைக்கிறார்கள்.... ஆனால் அதற்கு கிடைக்கும் சம்பளம் குறைவு ரொம்பவே குறைவு...

அவர்களை நாம் பார்க்கும் பார்வையே கொஞ்சம் மோசமாக கூட இருக்கும்.. அலட்சியம் தெரியும்....

ஆனால் அவர்கள் அப்படி கூனிக்குறுக வேண்டிய அவசியம் இல்லை... எல்லோரும் மதிக்கப்படவேண்டியவர்கள்... ஏன்னா நம் எல்லாத்தையும் சகித்து தூய்மை செய்பவர்கள்....அவர்கள் இல்லைன்னா நம் நிலை கண்டிப்பாக மோசமே....

எல்லோரையும் சிந்திக்கவைத்த பகிர்வு கண்டிப்பா இது....

எங்க வீட்ல பாட்டி இந்த மாதிரி ஆச்சாரம் அனுஷ்டானம் எல்லாம் பார்ப்பா... ஆனா என் அம்மா அப்படி இல்லை...

நாங்க அம்மாவையே தான் தொடர்கிறோம்...

மிக மிக மிக அருமையான பகிர்வு ராம்வி.. அன்பு நன்றிகள்பா...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//மஞ்சுபாஷிணி சொன்னது…//

வாங்க மஞ்சு. உங்க அழகான கருத்துக்கு நன்றி.

அம்பாளடியாள் சொன்னது…

என் கவிதை உங்கள் வரவிற்காகக் காத்திருக்கின்றது சகோ
முடிந்தால் வாருங்கள் ........

தக்குடு சொன்னது…

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்!!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//தக்குடு சொன்னது…
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்!!//

நன்றி தக்குடு வருகைக்கும் கருத்துக்கும்.

மாலதி சொன்னது…

அவர்களுக்கு நாம மறியாதை கொடுப்பதுதான் மனிதப்பண்பு.மிக மிக மிக அருமையான பகிர்வுஇப்பதிவை படிக்கும் வாசகர்களிடம் நிச்சயம் ஒரு மாற்றம் எழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//மாலதி சொன்னது…//

நன்றி மாலதி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

மனோ சாமிநாதன் சொன்னது…

நல்ல, அருமையான பதிவு ரமா!
இன்றைக்கு நம் தமிழகத்தில் கடைநிலை ஊழியர்களை ஒருமையில் விளித்து ஏவுகிறவ‌ர்கள் தான் அதிகம். அதுவும் அவர்களுக்கு சாப்பாடு போடுவது கூட மூன்றாம் தரத்தில் தான் இருக்கும். அப்பா, அம்மா போன்ற உயர்ந்த உறவுகளையே மோசமாக நடத்தும்போது, கடைநிலை ஊழியர்களுக்கு எங்கே மரியாதை கிடைக்கும்?

RAMA RAVI (RAMVI) சொன்னது…

// மனோ சாமிநாதன் கூறியது..//

நன்றி மனோ மேடம் தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும்.

மாய உலகம் சொன்னது…

சரியாக சொன்னீங்க... பகிர்வுக்கு நன்றி