அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

தமிழன் என்று சொல்லடா.......










புதியதாக குடியேறிய குடியிருப்பில் பக்கத்தில் உள்ளவர்களிடம் அறிமுக படுத்திக்கொண்டோம்.அவர்கள் கன்னடகாரர்கள்.

 குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி பேச்சு வந்த பொழுது அவர் :
 “எங்களுக்கு உங்க மாதிரி தமிழ் பேசுபவர்கள்தான் நிறைய நண்பர்களாக இருக்காங்க,என் கணவர் ----பி.யூ.சி. காலேஜ்ல பிரின்சிபலா இருந்தாரு.கல்லூரியிலும் சரி வெளியேயும் சரி என் கணவருக்கு தமிழ்காரங்கத்தான் அதிக பழக்கம்.என் கணவர் சொல்லுவாரு தமிழ் காரங்க ரொம்ப புத்திசாலி, எனக்கு ஏதாவது பிரச்சனைனாக்க முடிவு எடுக்கும் முன் என் நண்பர்களான தமிழ் காரங்க கிட்ட ஆலோசனை கேட்டுத்தான் எடுப்பேன்னு.”

அப்படி அவர் கூறியது எனக்கு மிக ஆச்சரியமாக போய்விட்டது,பெங்களூரில் இப்படி தமிழர்களுக்கு ஆதரவு தருபவர் இருக்கிறாரா என்று?

அவர் , தொடர்ந்து, “35 வருடங்களுக்கு முன்னாடி என்னுடைய பெரிய மகன் பிறந்த சமயம் எனக்கும் ,என் கணவருக்கும் குழந்தைக்கு பெயர் வைப்பது பற்றி தகராறு ஏற்பட்டது. குழந்தை பிறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார்,அதனால் அவருடைய பெயரான ‘சங்கரன்’ வைக்க வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருக்க,தன்னுடைய தாத்தா பெயரான ‘ நாகலிங்கம்’ என்று வைக்க வேண்டும் என்று என் கணவரும் பிடிவாதம் பிடிக்க இருவரும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம்.



 குழந்தை பிறந்ததை கேள்விபட்ட ஒரு தமிழ் நண்பர் குடும்பத்துடன் பார்க்க வந்தார்.எங்க வாக்குவாதத்தை பார்த்து பிரச்சனை என்ன என்று அவர் கேட்க,நாங்க விஷயத்தை சொன்னோம். அதுக்கு அவர் இதுக்கு போயா சண்டை போடரீங்க? பேசாம ‘சங்கரலிங்கம்’என்று வைத்துவிடுங்கள்.இரண்டு பெயரும் வந்து விட்டது அவரவர் இஷ்டப்படி சங்கரன் என்றும் லிங்கம் என்றும் கூப்பிட்டு கொள்ளலாம் என்றார்.அவர் உடனடியாக எங்க பிரச்சனைக்கு தீர்வு சொன்னது எங்களுக்கும் பிடித்தது அப்படியே வைத்து விட்டோம்.அவரது யோசனையினால் எங்களுக்குள் சண்டை தீர்ந்தது. அப்பத்தான் என் கணவர் சொன்னார், பார்த்தையா? தமிழர்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள் என்று,புத்திசாலிகள்,அதனால்தான் என் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் போது நான் எப்பவும் அவர்களிடம் உதவி கேட்பேன் ”

 என்று சொன்னவர் மேலும் தொடர்ந்து, “இது ஒரு உதாரணம்தான், இந்த மாதிரி நிறைய விஷயங்களில் எங்க நண்பர்களிடம் கேட்டுதான் என் கணவர் முடிவு எடுப்பார் பெரும்பாலும் முடிவுகள் எங்களுக்கு நன்மையைதான் தந்திருக்கிறது.”என்று கூறி என்னை ஆச்சரியத்தில் பேசமுடியாமல் செய்தார்.


                                     




 கன்னடகாரர்கள் தமிழர்களை விரோதியாக பார்ப்பார்கள்,அவர்களை தமிழ்நாட்டுக்கே ஓட்டிவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம்தான் நான் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் கடந்த 10 வருடங்களில் எனக்கு அம்மாதிரி எந்த ஒரு கசப்பான அனுபவமும் ஏற்பட்டதில்லை.என்னை பொருத்தவரையில் கன்னடகாரர்கள்,மிகுந்த தெய்வபக்தி மிக்கவர்கள்,மரியாதை தெரிந்தவர்கள்.ஆனால் அவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிரார்களோ தெரியாது.

இந்த பெண்ணும் அவர் கணவரும் தமிழர்களை பற்றி பேசுவதை கேட்டவுடன் என்னுடைய பெருமைக்கும், சந்தோஷத்திற்கும் எல்லையே இல்லை..

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.....................





சனி, ஜூன் 25, 2011

ஆறு.....அதிர்ச்சி...(நிறைவு)


சிறிது தூரதிலேயே மணற்பாங்கான இடம் வந்தது.  அப்பொழுதுதான் ஏதோஆறு என்று சொன்னாரே என்று நினைவுக்கு வர என்ன ஆறு ஓடுகிறது என்று கேட்டேன். என் கணவர்  ”கூவம் ஆறு ”என்று சொல்லிவிட்டு மணல் மேட்டிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார். மேட்டிலிருந்து இறங்க தொடங்கிய நான் கூவம் என்ற பெயரை கேட்டவுடன் அப்படியே அதிர்ந்து போய்  நின்றுவிட்டேன். என்ன இவர் கூவம் என்று சொல்லிவிட்டு அதில் இறஙக ஆரம்பித்து விட்டரே என்று குழப்பம் வேறு வந்தது. அவர் வேறெதாவது பெயரை சொல்லி நாந்தான் சரியாக கேட்டுக்கொள்ளவில்லையோ என்று, மறுபடியும் அவரிடம் சற்று உரத்த குரலில் என்ன பெயர் இந்த ஆற்றிக்கு என்று நான் கேட்க அவரும் மறுபடியும் கூவம் என்று சொல்லிவிட்டு என்னை திரும்பி பார்க்க நான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. உடனே அவர் என் அருகே வந்து ’ஏன் நின்று விட்டயாய்? வா போகலாம் ’என்றார். நான் உடனே ’என்ன நீஙகள் ??கூவம் ஆற்றில் இறங்குவதா!!! முடியவே முடியாது!!!’என்று  சொன்னேன்.

    ’நீ  என்ன சென்னையில் உள்ள கூவம் என்று நினைத்துக்கொண்டயா? ஆமாம் இது அதேதான்’ எனறார். எனக்கு மேலும் அதிர்ச்சி... இதில் போய் இறங்க சொல்லுகிறீர்களே என்று நான் கேட்க. ’ இதோ பார் அந்த மாதிரி சாக்கடை தண்ணியாக இருந்தா அப்பா என் தம்பி எல்லாம் இறங்கி போயிருப்பார்களா?? உன்னை அழைத்துதான் வருவோமா?? நீ கீழே இற்ங்கி பார்’ என்றார்.அப்பொழுதுதான் பார்தேன் என் மாமனார்,மச்சினர் அந்த மூட்டைக்காரர் எல்லோரும் அந்த பக்கம் உள்ள மணல் மேட்டில் எறிக்கொண்டு இருப்பதை !! சரி என்று நானும் அருகில் போய் பார்க்க, கரை ஓரத்தில் சிறிதள்வு தெளிவான நீர் தெரிந்தது. அப்பொழுதும் என் அதிர்ச்சி போகவில்லை.

என் கணவர் கூவம் ஆறு நம் ஊரை அடுத்துள்ள கூவம் என்கிற ஊரிலிருந்து உற்பத்தியாகி வருகிறது. அங்கு புகழ் பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது என்று விளக்கி கூறினார். அதுமட்டுமல்ல இந்த பகுதியில் உள்ள ஊர்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் எல்லவற்றிர்க்கும் பயன்படுகிற்து என்றார். கூவம் என்றால் சாக்கடை என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.மேலும் இப்பொழுது மழை குறைந்து விட்டதால் ஆற்றில் நீர் இல்லை என்றும்,17/18 வருடங்களுக்கு முன் (அதாவது இபொழுக்கு 40 வருடஙகளுக்கு முன்பு)  அவருக்கு 10 வயது இருக்கும் போதெல்லாம் மழை காலங்களில் முட்டிவரை தண்ணீர் வரும் என்றும் நண்பர்களுடன் நீச்சல் அடித்ததை பற்றி எல்லாம் கூறினார்.

அதன் பிறகு நான் நம்பிக்கை வந்து ஆற்றில் இறங்கினேன். தண்ணீர் அதிகம் ஒடவில்லை ஓரத்தில் சிறிது ஒடிக்கொண்டு இருந்தது. மற்றபடி ஆங்காங்கே தேங்கியிருந்தது. நீரில் கால் வைத்தவுடன் சில்லென்று இருந்தது. மனதில் இருந்த அதிர்ச்சி போகாமலேயே சிறிது நேரம் தண்ணீரில் நின்று விட்டு கிராமத்துக்கு போனோம். அங்கிருந்த புராதனமான பெருமாள் கோவிலுக்கு போய் பெருமாளை சேவித்துவிட்டு வீட்டிற்கு போனோம்.பிறகு என்மாமனாரின் மூதாதயர்களின் வயல்களை பார்த்துவிட்டு என் மாமனார் அப்பொழுது பயிறிடப்படும் முறைகளை கூற கேட்டு அறிந்துகொண்டேன்.

மாலையில்  திரும்பி கூவம் ஆற்றை தாண்டி வந்த பொழுது இப்படி பல கிராமங்களில் பல 100 மக்களின் வாழ்வின் ஜீவாதாரமாக உள்ள நதியை எப்படி பாழ்படுத்திவிட்டோம் என்கிற கனத்த உள்ளதோடு திரும்பி வந்தேன்.
அதன் பிறகு 2 -3 வருடங்கள்  கழித்தே ஊருக்கு மறுபடியும் போக முடிந்தது.
ஆனால் முதல் முறை நான் போனபொழுது இருந்தளவுகூட தண்ணீர் இல்லை. அதன் பிறகு நான் போனபோதெல்லாம் தண்ணீரே பார்க்கமுடியவில்லை. வெறும் மணல்தான்..............


நிறைவு..

ஆறு......அதிர்ச்சி...

1989 செப்டம்பரில் எனக்கு திருமணமான புதிதில்.....


திருமணம் முடிந்து என் கணவரின் வீட்டிற்க்கு சென்ற 2/3 நாட்களில், என் மாமியார் என் கணவரிடம் என்னை அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்து போக சொன்னார்.உடனே என் மாமனாரும் நாளைக்கே போகலாம் எல்லோரும் கார்த்தால 6 மணிக்கு கிளம்பிவிடவேண்டும் என்று கூறினார். நானும் என் மாமியரிடம் dress எல்லாம் எடுத்துவைத்து கொள்ளட்டுமா என்று கேட்க, அவர் ஊருக்கு என்றவுடன் ரொம்ப தூரம் என்று நினைத்துவிட்டயா.? இங்கு தான் திருவள்ளுர் பக்கதுலதான் கார்தால போனாக்க சாயங்காலம் வந்து விடலாம் என்று கூறினார்.

மறுநாள் 6 மணிக்கு நான்,என் கணவர், என் மாமனார் மற்றும் என் மச்சினர் (என் அவரின் தம்பி) எல்லோரும் கிளம்பி பெரம்பூர் அருகில் உள்ள loco works station க்கு train எறுவதர்க்கு வந்தோம். நான் என் கணவரிடம்.ஊருக்கு எப்படி போக வேண்டும் என்று கேட்க அவரும், இங்கிருந்து train ல திருவள்ளுரை அடுத்து 2 வது station  கடம்பத்துரில் இறங்கி அங்கிருந்து bus ல் 5 கிலோ மீட்டர் போய் பிறகு ஒரு ஆற்றை தாண்டி போக வேண்டும் என்றும்,அது ஒரு சிறிய அழகான் கிராமம் என்றும்,அங்கு அவர்களுக்கு இருந்த நிலஙகளின் விவரங்களையும்  கூறினார்.  நான் chennaiலேயே பிறந்து வளர்ந்தவள்.அதனால்
கிராமம் என்றவுடன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். ஆறு என்று கூறினாரே என்ன ஆறு என்று நான் கேட்பதர்க்குள் train வந்துவிடவே கேட்க்காமல் விட்டுவிட்டேன். 1 மணி நேர பயணத்திற்கு பிறகு கடம்பத்தூரை அடைந்தோம்.அங்கு இறங்கி bus stand க்கு சென்றோம்

           . சிறிது நேரத்தில் ஏக கும்பலோடு படிக்கட்டிற்கு வெளியே தொங்கும் மக்களேடு bus  வந்தது. நான் எப்படி இதில் ஏறுவது என்ற கவலையோட என்னவரை பார்க்க அவர் கவலை படாதே இப்பொழுது எல்லோரும் இறங்கிவிடுவர்கள் ஓரளவு காலியகிவிடும் என்று கூறினார். அது போலவே ஆக, நாங்களும் ஏறிக்கொண்டோம். எனக்கு உட்கார இடம் கிடைத்தது. நானும் உட்கார்ந்து கொண்டு இயற்கையை ரசிக்க ஆரம்பித்தேன். பசுமையான வயல்வெளிகள்,பெரிய மரங்கள், ஆங்காங்கே வீடுகள் (குடிசை &; ஒட்டு வீடுகள் சில செங்கல் வீடுகள்) சென்னைக்கு அருகில் இவ்வளவு பசுமயா? என்கிற ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு வந்தேன்.15 -20 நிமிடங்களில் நாஙகள் இறங்குமிடம் வந்து இறங்கினோம். என் மாமனார்,தலையில் பெரிய மூட்டை வைத்துக்கொண்டிருந்த ஒருவருடன் பேசிக்கொண்டே வேகமாக நடந்து சென்றுவிட்டர்.

    அப்பா யாரோடு பேசுகிரார்? என்று நான் கேட்க என் கணவர் அதுதான் பொத்தாரு மணி நம் நிலத்தில் பயிற் செய்பவர் என்றார். ஒ குத்தகை காரரா (எதோ எனக்கும் தெரியும்னு காட்டிக்கொள்ள) என்று நான் கேட்க இல்லை நிலங்களை குத்தகைக்கு விடவில்லை அது வாரத்துக்கு பயிற் செய்கிறோம் என்றார்.எனக்கு தெரிந்த ஒரே வார்தையான ’குத்தகை ’இல்லை என்றவுடன் நான் புரியாமல் முழிப்பதை பார்த்து  விளக்கம் கொடுத்தார்.அதாவது நிலம் நம்முடையது,உழைப்பு விவசாயினுடையது. விதை,மருந்து,எரு எல்லா செலவும் பாதி,பாதி. அது போல கிடைக்கும் அறுவடையும் பாதி பாதி பிரித்து கொள்வார்கள். (இது பற்றிய விவரம் என்மாமனார் குடும்பம் பற்றிய விவரம் வேறு பதிவில் ஏழுதுகிறேன்.)
சரி எனறு மெள்ள நடக்க தொடங்கினோம்.

மன்னிக்கவும். பதிவு பெரியதாகிவிட்டது.
அடுத்த பதிவில் தொடருகிறேன்.
நன்றி.