திங்கள், செப்டம்பர் 05, 2011

ரங்கமணியும்.. தங்கமணியும்..

husband-and-wife-fight.jpg

 “அப்பாடா...கால் வலி உயிர் போறது, ...அந்த பேப்பரை கொஞ்சம் இப்படி கொடுங்கோ”

என்றபடி வந்து சோபாவில் உட்கார்ந்தார்,மனைவி.

பேப்பரை எடுத்து கொடுத்த கணவன், “அடுப்புல என்ன வைச்சிருக்க ? ஏதோ தீயர மாதிரி இருக்கு.”

 “இப்பதான் பீன்ஸ் காய பாணலில போட்டு நிறைய ஜலம் விட்டுட்டு அடுப்ப சின்னதாக்கி வைச்சிட்டு வந்தேன். இன்னும் 10/15 நிமிஷமாவது ஆகும் அதுல ஜலம் குறையறத்துக்கு. என்ன நீங்க என்னை சின்ன குழந்தைன்னு நினச்சிண்டு இருக்கீங்களா? தீயரது கீயரதுன்னு!! சித்த பேசாம இருங்கோ”

கணவன் : “சரி.. இனிமே நான் ஒண்ணும் சொல்லலை! என்றபடி எழுந்து உள்ளே போனார்.

சிறிது நேரம் கழித்து.

மகள்: அம்மா அடுப்புல என்ன வைச்சிருக்க! ஏதோ தீயரது!

மனைவி:ஐய்யய்யோ! பீன்ஸ்ஸ வைச்சிட்டு மறந்து போய் பேப்பர் படிக்க உட்கார்ந்துட்டேன்” என்றபடி வேகமாக சமையலறைக்கு போனார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த கணவர்: “என்னாச்சு? ..பார்த்தையா நான் அப்பவே சொன்னேன் ஏதோ தீயரதுன்னு நீ தான் கேட்கலை.”

மனைவி: “ஆமாம் இப்ப வாங்கோ அப்ப வெறுமயாவது பய முறுத்தினேள்.!!!இப்ப நிஜமாவே தீயரச்சே வந்து சொல்லாதீங்கோ,!!!!உங்களோட இதே தொல்லையா போச்சு,பரவாயில்லை ஒரு நாள் தீஞ்சுபோன காய சாப்பிடுங்கோ!”

 “நான் என்னடி பண்ணட்டும் !!சொன்னலும் தப்பு சொல்லவிட்டலும் தப்புங்கிற”
என்றபடி நகர்ந்தார்.

சுமார் 30 வருடங்களுக்கு முன் எங்க அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நடந்த வாக்குவாதம்.

இது முந்தாநாள் அப்படியே எங்க வீட்டிலும் ரீபீட் ஆச்சு.இங்க என்னம்மா அப்பாவிற்கு பதிலா நானும் என் கணவரும்.

“சொன்னலும் தப்பு சொல்லட்டாலும் தப்பு” என்ற என் கணவரின் வார்த்தைகளை கேட்டவுடன் எனக்கு என் அம்மா அப்பா பேசிக்கொண்டது நினைவுக்கு வந்து ஏகமாக சிரிப்பு வந்து சிரிக்க ஆரம்பித்தேன்.

 “இப்ப எதுக்கும்மா சிரிக்கற பீன்ஸ் தீஞ்சு போனத்துக்கா? ”என்ற என் பெண்களின் கேள்வியை கூட சட்டைப் பண்ணாமல் சிரித்துக்கொண்டிருந்தேன்.

காலம் எவ்வளவு மாறினாலும் இந்த தங்கமணி..ரங்கமணி ..வாக்குவாதங்கள் மாறுவதே இல்லை.

சற்று நேரத்தில் என் சிரிப்பு அடங்கியதும்,என் கணவர் பெண்களிடம், “உங்கம்மா இப்ப எதுக்கு சிரிச்சா?” என்றார்.

அதுக்கு என் சின்ன பெண், “அப்பா ....இப்ப கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டா 2 நாள் கழிச்சு “பிளாக்” ல பாரு உனக்கு ஏன் சிரிச்சன்னு தெரிஞ்சுடும்”

நான் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தேன்........




45 கருத்துகள்:

Lakshmi சொன்னது…

ஆஹா, ப்ளாக் எழுதுவதில் என்னல்லாம் வசதி இல்லியா ரமா?

RAMVI சொன்னது…

//Lakshmi சொன்னது…
ஆஹா, ப்ளாக் எழுதுவதில் என்னல்லாம் வசதி இல்லியா ரமா?//

ஆம் அம்மா. நன்றி தங்களின் கருத்துக்கு.

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

angelin சொன்னது…

//காலம் எவ்வளவு மாறினாலும் இந்த தங்கமணி..ரங்கமணி ..வாக்குவாதங்கள் மாறுவதே இல்லை.//

அதுதான் உண்மை .ஆனா (நாமதான் உண்மைய ஒத்துக்கறதே இல்லையே )

suryajeeva சொன்னது…

எத்தனை காலம் ஆனாலும் வாழ்க்கை என்றும் சக்கரம் போல் தான் சுற்றும் போலிருக்கு

கார்த்தி கேயனி சொன்னது…

யதார்த்தமான பதிவு. பகிர்வுக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//அதுக்கு என் சின்ன பெண், “அப்பா ....இப்ப கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டா 2 நாள் கழிச்சு “பிளாக்” ல பாரு உனக்கு ஏன் சிரிச்சான்னு தெரிஞ்சுடும்”

நான் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தேன்........//

அருமை. நம்மை இந்த “ப்ளாக்” எவ்வாறெல்லாம் நம்மைக் கட்டிப்போட்டுள்ளது என்பதை உங்கள் மகள் அருமையாக அழகாகவே தெரிந்து வைத்துக்கொண்டு சொல்லியுள்ளாள். அவளுக்கு என் அன்பான பாராட்டுக்களும் ஆசிகளும்.

பதிவிட்ட உங்களுக்கும் சேர்த்து தான்.
vgk

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

முதல் படம் சூப்பராக அமைந்துள்ளது.

RAMVI சொன்னது…

//Rathnavel சொன்னது…
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//

நன்றி ஐயா,தங்களின் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.

RAMVI சொன்னது…

//angelin சொன்னது…
//காலம் எவ்வளவு மாறினாலும் இந்த தங்கமணி..ரங்கமணி ..வாக்குவாதங்கள் மாறுவதே இல்லை.//

அதுதான் உண்மை .ஆனா (நாமதான் உண்மைய ஒத்துக்கறதே இல்லையே )//

உண்மைதான் angelin நாமதான் ஒத்துக்கறதே இல்லை.நன்றி தங்களின் கருத்துக்கு.

RAMVI சொன்னது…

//suryajeeva சொன்னது…
எத்தனை காலம் ஆனாலும் வாழ்க்கை என்றும் சக்கரம் போல் தான் சுற்றும் போலிருக்கு//

நன்றி சூர்யஜீவா தங்களின் கருத்துக்கு.

RAMVI சொன்னது…

//கார்த்தி கேயனி சொன்னது…
யதார்த்தமான பதிவு. பகிர்வுக்கு நன்றி//

நன்றி கார்த்தி கேயனி,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…//

நன்றி ஐயா தங்களின் வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும்.

M.R சொன்னது…

ஹா ஹா

காய்கறிகள் விளைந்தால் சந்தைக்கு வந்தாகணும் .

அழுகினால் குப்பைக்கு போயாகணும்

அதுபோல பதிவரின் மனதில் என்ன இருக்குன்னு பதிவு பார்த்தால் தெரிஞ்சிக்கலாம் .

தங்கள் குழந்தைகளின் வார்த்தை உண்மைதானே சகோதரி

RAMVI சொன்னது…

// M.R கூறியது...
ஹா ஹா //

ஆம் ரமேஷ், அனுபவங்களையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளத்தானே பதிவுகள்.

நன்றி தங்களின் அன்பான கருத்துக்கு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை....

பெரும்பாலான குடும்பங்களில் இது தான் நிலை.....

சுவையாக பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள்...

ராக்கெட் ராஜா சொன்னது…

//மனைவி: “ஆமாம் இப்ப வாங்கோ அப்ப வெறுமயாவது பய முறுத்தினேள்.!!!இப்ப நிஜமாவே தீயரச்சே வந்து சொல்லாதீங்கோ,!!!!உங்களோட இதே தொல்லையா போச்சு,பரவாயில்லை ஒரு நாள் தீஞ்சுபோன காய சாப்பிடுங்கோ!”//

யதார்த்தமான பதிவு

ஸ்ரீராம். சொன்னது…

:))

காலங்கள் மாறினாலும் மாறாத காட்சிகள்! வாழ்க்கைச் சக்கரம்!! புரியாத வாழ்க்கைத் துணையும் அறிந்த குழந்தைகளும்!!!

கவிநயா சொன்னது…

//அதுக்கு என் சின்ன பெண், “அப்பா ....இப்ப கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டா 2 நாள் கழிச்சு “பிளாக்” ல பாரு உனக்கு ஏன் சிரிச்சன்னு தெரிஞ்சுடும்”//

ரசித்தேன் :)

RAMVI சொன்னது…

// வெங்கட் நாகராஜ் கூறியது...
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை....//

ஆமாம் வெங்கட். தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.

RAMVI சொன்னது…

//ராக்கெட் ராஜா கூறியது...யதார்த்தமான பதிவு//

நன்றி ராஜா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//காலங்கள் மாறினாலும் மாறாத காட்சிகள்! வாழ்க்கைச் சக்கரம்!! புரியாத வாழ்க்கைத் துணையும் அறிந்த குழந்தைகளும்!!!//

நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்துக்கு.

RAMVI சொன்னது…

//கவிநயா கூறியது...ரசித்தேன்//

நன்றி கவிநயா..தங்களின் கருத்துக்கு.

மஞ்சுபாஷிணி சொன்னது…

ஹாஹா ராம்வி அசத்திட்டேள் போங்கோ....

தங்கமணி ரங்கமணி நம்மாத்துலயும் நடக்கறதே.... அதை நினைச்சு நானும் சிரிச்சுண்டுட்டேன்....

எப்படி எப்படி?? காலம் மாறினாலும் நம்ம கோலங்களும் வாக்குவாதங்களும் மட்டும் மாறதேல்ல....

உங்காத்துக்காரர் என்னம்மா என்னன்னு கேட்டா சிரிச்சுண்டே இருந்தது பெரிசில்ல... ஆனா உங்க கொழந்தே சொன்னா பாருங்கோ...

அப்பா இப்ப ஒன்னும் கேட்ராதே... ரெண்டு நாள் கழிச்சு ப்ளாக்ல பாருன்னு...

மகிழ்ந்து ரசித்து சிரித்தேன் ராம்வி... வீடு கோகுலம்லயா? அங்க சில நாட்கள் ஊடலும் சில நாட்கள் கூடலும் இல்லன்னா வாழ்க்கை கூட போரடிச்சுடுமோல்லயோ??

மனசு ரிலாக்ஸ் ஆச்சு கண்மணி....சாரி ராம்வி....

இப்பவே என் மெயில் ஐடியை உங்களதுல சேர்த்துடறேன்...

RAMVI சொன்னது…

//மஞ்சுபாஷிணி சொன்னது…

ஹா ஹா ராம்வி அசத்திட்டேள் போங்கோ....//
ஆமாம் மஞ்சு, நீங்க சொல்லரது சரி வீடு கோகுலம்தான்

நன்றி தங்களின் அன்பான கருத்துக்கு

Thanai thalaivi சொன்னது…

அடடா ! எல்லா வீட்லயும் இதே கதை தானா.................!?

RAMVI சொன்னது…

//Thanai thalaivi கூறியது...
அடடா ! எல்லா வீட்லயும் இதே கதை தானா.................!?//

ஆமாம் தா.தலைவி.
எல்லா வீட்டிலேயும் இதே கதைதான்.
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

Ramani சொன்னது…

அசத்தல் பதிவு
உங்கள் பெண்ணும் இருபது வருடம் கழித்து
இதைப் போலவே நினைத்து நினைத்து
சிரிக்கும் படியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்
ஏனெனில் சில விஷயங்கள் எத்தனை யுகங்கள்
ஆனாலும் மாறுவதே இல்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கோவை2தில்லி சொன்னது…

உங்கள் மகள் சொன்னதை கேட்டு நானும் சிரித்து விட்டேன். யதார்த்தமாக இருந்தது.

நல்ல பகிர்வு .

RAMVI சொன்னது…

//Ramani சொன்னது…//
அசத்தல் பதிவு
உங்கள் பெண்ணும் இருபது வருடம் கழித்து
இதைப் போலவே நினைத்து நினைத்து
சிரிக்கும் படியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்
ஏனெனில் சில விஷயங்கள் எத்தனை யுகங்கள்
ஆனாலும் மாறுவதே இல்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்///

ஆமாம் ரமணி சார்.
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

RAMVI சொன்னது…

//கோவை2தில்லி சொன்னது…
உங்கள் மகள் சொன்னதை கேட்டு நானும் சிரித்து விட்டேன். யதார்த்தமாக இருந்தது.//

நன்றி ஆதி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

எதார்த்த எழுத்து நடையும் தகுந்த புகைப்படங்களும் ரசிக்கவைக்கிறது . பகிர்ந்தமைக்கு நன்றி

RAMVI சொன்னது…

//! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…
எதார்த்த எழுத்து நடையும் தகுந்த புகைப்படங்களும் ரசிக்கவைக்கிறது . பகிர்ந்தமைக்கு நன்றி//

வணக்கம் சங்கர் சார்.என் பதிவிர்க்கு தங்களை வரவேற்கிறேன்.
தங்களுடைய அன்பான கருத்துக்கு நன்றி.

அப்பாவி தங்கமணி சொன்னது…

ha ha ha.. super ragalai... unga kutti ponnu sonnadhu thaan highlight... :)

RAMVI சொன்னது…

//அப்பாவி தங்கமணி சொன்னது…
ha ha ha.. super ragalai... unga kutti ponnu sonnadhu thaan highlight... :)//

புவனா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அமைதிச்சாரல் சொன்னது…

தலைமுறைகள் மாறினாலும், தங்கமணி ரங்கமணிகளின் ரகளைகள் மாறுவதில்லை :-)

புதுகைத் தென்றல் சொன்னது…

ஆஹா நம்ம கூட்டணிக்கு இன்னொரு ஆள் சேர்ந்தாச்சு. சந்தோஷம். (அதாங்க தங்கமணி,ரங்கமணி பதிவுகள்)

வாழ்த்துக்கள்

RAMVI சொன்னது…

///புதுகைத் தென்றல் சொன்னது…

ஆஹா நம்ம கூட்டணிக்கு இன்னொரு ஆள் சேர்ந்தாச்சு. சந்தோஷம். (அதாங்க தங்கமணி,ரங்கமணி பதிவுகள்)வாழ்த்துக்கள்///

வாங்க தென்றல்..
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

<<>
அதுக்கு என் சின்ன பெண், “அப்பா ....இப்ப கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டா 2 நாள் கழிச்சு “பிளாக்” ல பாரு உனக்கு ஏன் சிரிச்சன்னு தெரிஞ்சுடும்”

haa haa ஹா ஹா செம காமெடி

RAMVI சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…//

//haa haa ஹா ஹா செம காமெடி//

ஆம் காமெடிதான்.நன்றி தங்களின் கருத்துக்கு.

சின்னதூரல் சொன்னது…

காலம் எவ்வளவு மாறினாலும் இந்த தங்கமணி..ரங்கமணி ..வாக்குவாதங்கள் மாறுவதே இல்லை.

-நல்லா சொல்லிருகிங்க.... வாழ்த்துக்கள்

Gopi Ramamoorthy சொன்னது…

:-)

மாய உலகம் சொன்னது…

உங்க கணவர் பிளாக்கை படித்து விட்டாரா.. ஹா ஹா

RAMVI சொன்னது…

//மாய உலகம் சொன்னது…//

படிச்சுட்டார்,ராஜேஷ்.

மோகன் குமார் சொன்னது…

Very interesting narration.