வாழ்கையில் சில மனிதர்களினால் அல்லது சில நிகழ்வுகளினால் நாம் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். அப்படி ஒரு நல்ல விஷயத்தை அன்று நான் அலமேலு அம்மாவிடமிருந்து தெரிந்து கொண்டேன்......அது ......
கொதிப்படந்த நிலையில் அந்தப்பெண் அப்படி பேசியதும், நாங்களெல்லாம் சிரித்ததை பார்த்தும், அலமேலு அம்மா ஏதும் பேசவில்லை.அவர் ஒன்றும் பேசாமல் இருந்தவுடன், அவரை எதிர்த்து பேசியதற்கு சிரித்து விட்டோமே என்று பயம் வந்து எங்கள் சிரிப்பு அடங்கிவிட்டது. திரும்பவும் அமைதி.அலமேலு அம்மா மெதுவாக நாற்காலியைவிட்டு எழுந்தார். எங்களைப்பார்த்து, இப்ப மணி 8 அகிவிட்டது உங்கள் இரவு உணவு நேரம் இது,நீங்கள் எல்லோரும் போய் சாப்பிடுங்கள். சாப்பிட்ட பிறகு 9 மணிக்கு இங்கு வாருங்கள் உங்களுடன் பேசுகிறேன் என்றார். பிறகு அந்த பெண்னைப்பார்த்து நீயும் போய் சாப்பிட்டுவிட்டு வாம்மா என்று மெதுவாக கூறினார். பிறகு அவரும் காப்பாளரின் அறைக்கு சென்றுவிடவே நாங்களும் மேற்கொண்டு என்ன நடக்கும் இந்தப்பெண் எப்படியோ தப்பிச்சுட்டாளே? என்று எங்களுக்குள் பேசிய படியே உணவருந்தச்சென்றோம்.
ஒரு மணி நேரம் கழித்து திரும்பவும் கூட்டத்திற்கு சென்று அமர்ந்தோம். அலமேலு அம்மா மறுபடியும் வந்தார். கூடவே அந்தப்பெண்ணும் வந்தாள். காப்பாளர் அறையில் தனியாக அவளுடன் பேசியிருக்கிறார். நிதானமாக எங்களைப் பார்த்து எல்லோரும் சாப்பிட்டீர்களா என்று கேட்டுவிட்டு தொடர்ந்து பேச ஆரம்பித்தார். இந்தப்பெண் என்னை எதிர்த்துப் பேசும் பொழுது நான் ஏன் பேசாமல் இருந்தேன் என்று உங்களுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்திருக்கும். என்னுடைய விடுதியை சேர்ந்த பெண் தவறு செய்கிறாள் என்ற கோபத்தில் நான் அவளை கடிந்து கொண்டேன். ஆனால் அவளோ மரியாதை இல்லாமல் பேசி விட்டாள். நானும் கோபத்தில் இருந்தேன் அவளும் உணர்ச்சி வசப்பட்டிருந்தாள். சார் என்று அவள் சொன்னது, என் கணவரை. அவருடன் நான் சினிமாவிற்கு போவது தவறில்லை என்கிற சின்ன விஷயத்தினை கூட அவளால் யோசிக்க முடியவில்லை. அப்பொழுது நான் தொடர்ந்து அவள் தவறினை சுட்டிக்காட்டி திட்டி இருந்தால் அவள் கோபம் அதிகமாகுமே தவிர குறையாது. என் மேல் உள்ள கோபத்தில் யோசிக்கும் தன்மையைனை இழந்து அவள் மீண்டும் தவறு செய்ய துணிவாள். அதனால் நான் பேசாமல் இருந்து விட்டேன். சிறிது நேரம் கழிந்து அவளுடைய கோபம் தணிந்ததும் அவள் கட்டாயம் தான் செய்தது சரியா என்று யோசிப்பாள். அவள் தன் தவறை அப்போது உணர்ந்து கொள்ள தவறினாலும், மீண்டும் பேசும் பொழுது நாம் சொல்லவருவதை காது கொடுத்துதாவது கேட்பாள் என்கிற காரணத்தினால் நான் உங்களை எல்லாம் கலைந்து போகச்சொல்லி விட்டேன்.
அதே போல் அந்தப்பெண்ணை சாப்பிட்டு வரச்சொல்லிவிட்டு தனிமையில் அவள் செய்தது தவறு என்று சொல்லி சில புத்திமதிகள் கொடுத்திருக்கிறேன். அவள் நான் சொன்னதை கேட்டுக்கொண்டாள். அவளுக்கு அவளுடைய செய்கையின் விளைவுகளை சொல்லி திருந்துவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளேன். அவள் திருந்தி சரியாக ஒழுக்கமாக இருந்தால் இங்கே தொடர்ந்து தங்கலாம். இது அவளுக்கு மட்டுமல்ல உங்கள் எல்லோருக்கும் பொருந்தும். என்றவர், தொடர்ந்து...
இரண்டு பேர் கோப வசமாக வாக்குவாதம் செய்யும் பொழுது நம்முடைய கருத்தை திணிக்க முயலுவது சரியாக இருக்காது.ஒருவர் பேசாமல் இருந்துவிட்டு சிறிது நேரம் கழிந்து அந்த கோபம் தணிந்ததும் நமது கருத்தை சொன்னால் அதற்கு கட்டாயம் வரவேறப்பு இருக்கும். பிரச்சனைகள் வந்து, கோபமாக இருக்கும் பொழுது நான் கடைபிடிக்கும் யுக்தி. இதில் பெரும்பாலும் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இங்கு உள்ள 200 பேர்களில் 20 பேர்களுக்காவது இது புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.அப்படி புரிந்து கொண்டால் நல்லது, என சொல்லி தமது பேச்சை முடித்து கொண்டு எங்களை கலைந்தும் போகச்சொல்லி விட்டார்.
அங்கு யார் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை எனக்கு நன்றாக புரிந்தது. அன்று அலமேலு அம்மாவிடம் நான் தெரிந்து கொண்ட இந்த விஷயத்தினை இன்றுவரை என் வாழ்கையில் கடைபிடித்து வருகிறேன். என் கணவரோ பெண்களோ அல்லது குடும்பத்தினரோ கோபமாக இருக்கும் பொழுது என் கருத்துக்களை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன். சில நிமிடங்களோ அல்லது சில மணி நேரம் கழித்துத்தோ (பிரச்சனையின் தீவிரத்திற்கு தகுந்தற் போல்) என் கருத்துக்களை மெதுவாக சொல்லி அவர்களை யோசிக்க வைத்து முடிவு எடுக்க சொல்லுவேன். அலமேலு அம்மாவைப்போலவே இது என் வாழ்க்கையில் பிரச்சனைகளின் பொழுது கைகொடுக்கும் ஒரு முக்கிய யுக்தியாகி விட்டது. மகளிர் விடுதியில் முதல் நாளே நல்லதொரு விஷயத்தினை தெரிந்து கொண்டேன்.
அன்று சரி சரி என்று கேட்டுக்கொண்ட அந்தப் பெண் திருந்தவில்லை. மறுபடியும் தவறுதான் செய்தாள்.பள்ளிக்கூடத்திற்கு கூட போகாமல் வெளியில் சுற்றிக்கொண்டிருந்ததால் ,அவளின் தாயாரை வரவழைத்து விடுதியிலிருந்து திருப்பி அனுப்பப் பட்டுவிட்டாள்.
இது நடந்து முடிந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது.அதன்பிறகு நான் அங்கு இருந்த 1-1/2 வருடங்களில் ஒரிரு முறைதான் அலமேலு அம்மாவை பார்த்தேன்.அவருடன் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் அமையவில்லை. இருந்தாலும் என்னைக் கவர்ந்த ஒரு சிலரில் அலமேலு அம்மா முக்கியமானவர்.
அன்புடன்,
ரமாரவி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------