
புதியதாக குடியேறிய குடியிருப்பில் பக்கத்தில் உள்ளவர்களிடம் அறிமுக படுத்திக்கொண்டோம்.அவர்கள் கன்னடகாரர்கள்.
குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி பேச்சு வந்த பொழுது அவர் :
“எங்களுக்கு உங்க மாதிரி தமிழ் பேசுபவர்கள்தான் நிறைய நண்பர்களாக இருக்காங்க,என் கணவர் ----பி.யூ.சி. காலேஜ்ல பிரின்சிபலா இருந்தாரு.கல்லூரியிலும் சரி வெளியேயும் சரி என் கணவருக்கு தமிழ்காரங்கத்தான் அதிக பழக்கம்.என் கணவர் சொல்லுவாரு தமிழ் காரங்க ரொம்ப புத்திசாலி, எனக்கு ஏதாவது பிரச்சனைனாக்க முடிவு எடுக்கும் முன் என் நண்பர்களான தமிழ் காரங்க கிட்ட ஆலோசனை கேட்டுத்தான் எடுப்பேன்னு.”
அப்படி அவர் கூறியது எனக்கு மிக ஆச்சரியமாக போய்விட்டது,பெங்களூரில் இப்படி தமிழர்களுக்கு ஆதரவு தருபவர் இருக்கிறாரா என்று?
அவர் , தொடர்ந்து, “35 வருடங்களுக்கு முன்னாடி என்னுடைய பெரிய மகன் பிறந்த சமயம் எனக்கும் ,என் கணவருக்கும் குழந்தைக்கு பெயர் வைப்பது பற்றி தகராறு ஏற்பட்டது. குழந்தை பிறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார்,அதனால் அவருடைய பெயரான ‘சங்கரன்’ வைக்க வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருக்க,தன்னுடைய தாத்தா பெயரான ‘ நாகலிங்கம்’ என்று வைக்க வேண்டும் என்று என் கணவரும் பிடிவாதம் பிடிக்க இருவரும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம்.

குழந்தை பிறந்ததை கேள்விபட்ட ஒரு தமிழ் நண்பர் குடும்பத்துடன் பார்க்க வந்தார்.எங்க வாக்குவாதத்தை பார்த்து பிரச்சனை என்ன என்று அவர் கேட்க,நாங்க விஷயத்தை சொன்னோம். அதுக்கு அவர் இதுக்கு போயா சண்டை போடரீங்க? பேசாம ‘சங்கரலிங்கம்’என்று வைத்துவிடுங்கள்.இரண்டு பெயரும் வந்து விட்டது அவரவர் இஷ்டப்படி சங்கரன் என்றும் லிங்கம் என்றும் கூப்பிட்டு கொள்ளலாம் என்றார்.அவர் உடனடியாக எங்க பிரச்சனைக்கு தீர்வு சொன்னது எங்களுக்கும் பிடித்தது அப்படியே வைத்து விட்டோம்.அவரது யோசனையினால் எங்களுக்குள் சண்டை தீர்ந்தது. அப்பத்தான் என் கணவர் சொன்னார், பார்த்தையா? தமிழர்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள் என்று,புத்திசாலிகள்,அதனால்தான் என் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் போது நான் எப்பவும் அவர்களிடம் உதவி கேட்பேன் ”
என்று சொன்னவர் மேலும் தொடர்ந்து, “இது ஒரு உதாரணம்தான், இந்த மாதிரி நிறைய விஷயங்களில் எங்க நண்பர்களிடம் கேட்டுதான் என் கணவர் முடிவு எடுப்பார் பெரும்பாலும் முடிவுகள் எங்களுக்கு நன்மையைதான் தந்திருக்கிறது.”என்று கூறி என்னை ஆச்சரியத்தில் பேசமுடியாமல் செய்தார்.



கன்னடகாரர்கள் தமிழர்களை விரோதியாக பார்ப்பார்கள்,அவர்களை தமிழ்நாட்டுக்கே ஓட்டிவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம்தான் நான் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் கடந்த 10 வருடங்களில் எனக்கு அம்மாதிரி எந்த ஒரு கசப்பான அனுபவமும் ஏற்பட்டதில்லை.என்னை பொருத்தவரையில் கன்னடகாரர்கள்,மிகுந்த தெய்வபக்தி மிக்கவர்கள்,மரியாதை தெரிந்தவர்கள்.ஆனால் அவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிரார்களோ தெரியாது.
இந்த பெண்ணும் அவர் கணவரும் தமிழர்களை பற்றி பேசுவதை கேட்டவுடன் என்னுடைய பெருமைக்கும், சந்தோஷத்திற்கும் எல்லையே இல்லை..
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.....................
40 கருத்துகள்:
//தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.............//
எங்க மேடம் இதை இப்பசொல்லமுடியுது எங்கள் ஊரில் எல்லாம் சொல்லவே முடியாது.
வணக்கம்
இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் இனி தொடர்ந்து வருவேன்
உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளன வாழ்த்துக்கள்
இன்று என் கடையில்(பகுதி-7)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாதபாடசாலைநாட்கள்+சரண்யா புள்ள மீதான உத்தியோக பூர்வ காதல் அறிவிப்பும் அஞ்சலியிடம் இருந்து விலகலும்
http://cricketnanparkal.blogspot.com/2011/09/7.html
ஆஹா கேட்கும்பொழுதே சந்தோசமாக இருக்கே .
சந்தோசத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி
///K.s.s.Rajh சொன்னது…//
நன்றி ராஜ் தங்களின் வருகைக்கும் கருத்துக்கு.
உங்களின் வலைப்பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி.
//M.R சொன்னது…//
நன்றி ரமேஷ் தங்களின் கருத்துக்கு..
உண்மையிலேயே நாம் மிகவும் பெருமை பட்டுக்கொள்ளக்கூடிய அருமையான பதிவாகக் கொடுத்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
[நம்மளைப் பற்றி நம் ஆளுங்க என்ன நினைத்துக்கொண்டாலும், வேற்று மொழிக்காரர்கள் பாராட்டுவது என்பது, மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.]
//வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…//
நன்றி ஐயா தங்களின் அன்பான கருத்துக்கு..
இந்த விஷயத்தில் மட்டும் அல்ல, பல விஷயங்களில் அரசியல் நமக்குள் பிரிவினையை உண்டு பண்ணியே வைத்திருக்கிறது..
பீகார் காரர்கள் கொலைக்கு அஞ்சா பாதகர்கள்...
உண்மையில் அவர்களை போல் தங்கமான மனிதர்களை பார்ப்பது அரிது...
ஆந்த்ரா காரர்கள் கோபக் காரர்கள்...
உண்மையில் அவர்களை போல் பணத்தை மதிக்காதவர்கள் எவரும் கிடையாது..
பாகிஸ்தான் காரர்களுக்கு இந்தியர்களை பிடிக்காது..
உண்மையில் இந்திய படத்தை விரும்பி பார்ப்பவர்கள் பாகிஸ்தானியர்கள்..
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்,
அரசு மருத்துவமனைகள் மோசமானது,
bsnl சேவை மிகவும் மோசம்..
என்று கூறுபவர்கள் முக்கால்வாசி பேர் அரசு மருத்துவமனைக்கே போயிருக்க மாட்டார்கள்..
என்றாவது ஒரு நாள் bsnl இல் பிரச்சினையை அனுபவித்திருப்பார்கள்...
எவரோ சொல்வதை வைத்து எடை போடுவதில்லை என்றோ முடிவுக்கு வந்து விட்டேன்..
உங்கள் பதிவும் அதை மற்றவர்களுக்கு உணர்த்தினால் நன்று..
//suryajeeva சொன்னது…//
ஆம் சூர்யஜீவா.நீங்கள் சொல்லுவது சரி.தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.
நல்ல பதிவு.
அரசியல்வாதிகளும், செய்திப்பத்திரிக்கைகளும் தான் பரபரப்பையும், பிரிவினையும் உண்டாக்குகின்றன.
வாழ்த்துக்கள்.
//Rajavel சொன்னது…//
நன்றி Rajavel தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
உண்மைதாங்க... கன்னடக்காரர்களுக்கும் தமிழர்களுக்கும் கர்னாடகாவில் பிரச்சனை உள்ள சமயம்... தமிழர்கள் வசிக்கும் ஒரு பகுதியில்...இனி இங்கு வசிப்பது ஆபத்து என தமிழ் குடும்பங்கள் தங்களின் இருப்பிடங்களை காலி செய்துக்கொண்டு புறப்பட ஆயுத்தமானர்... இதைக்கேள்விப்பட்ட அந்த ஏரியா கன்னடக்காரர்கள்... ஏன் காலி செய்து கிளம்புகிறீர்கள்... உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்... அவர்கள் வந்தால் முதலில் எங்களை தாக்கிவிட்டு வேண்டுமானால் உங்களிடம் வரட்டும்... என சொல்ல அவர்களின் பாசத்தில் யாரும் காலி செய்யாமல் அங்கேயே இருந்துவிட்டனர்... இது நான் கேள்வி பட்ட விசயம்..தங்களிடம் பகிர்ந்து கொண்டேன்...எல்லா நாட்டிலும், நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள் இதை அடையாளம் காணுவது தான் கடினம்... நாம் கேள்விப்பட்டோ அல்லது யூகம் செய்தோ ஒருவரையோ அல்லது ஒரு பிரிவினரையோ நாம் சந்தேகபடுகிறோம்...அப்படி நாம் செய்யும் யூகம் சில நேரம் சரியாக அமைந்துவிடலாம்...சில நேரம் நாம் நினைத்ததற்கு நேர்மாறாக அமைந்துவிடும்.....தமிழின் பெருமை திருக்குறள் ஒன்றே மிக உயரிய இடத்திற்கு கொண்டு சென்று விட்டது அந்த இடத்தை வேறு ஒன்றால் பிடிக்க இயலாது... தமிழ் இன்ப உயிருக்கு நேர்.... அழகான அனுபவங்களுடன் அடுத்தவர்களை பாராட்டி சொல்லிய பதிவுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள்....
மிக அழகாக எழுதி இருக்கீங்க ரமா . தமிழ் திரட்டி உங்கள் இன்னொரு வலைபூவா ?.
நல்ல பகிர்வு...
தமிழ்க்காரர்கள் மேல இவ்வளவு அபி
மானம் வைத்திருப்பது நல்ல விஷயம்.
கேக்கவே சந்தோஷமா இருக்கு.
//மாய உலகம் சொன்னது…//
நன்றி ராஜேஷ்.நீங்க கூறியிருப்பது முற்றிலும் உண்மை..
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//angelin சொன்னது…
மிக அழகாக எழுதி இருக்கீங்க ரமா . தமிழ் திரட்டி உங்கள் இன்னொரு வலைபூவா ?.//
angelin தங்கள் கருத்துக்கு நன்றி.
தமிழ் திரட்டியில் பதிவு செய்து கொண்டு யார் வேண்டுமானாலும் பதிவு இடலாம்.நீங்களும் பதிவு செய்து கொள்ளுங்க angelin..
//வெங்கட் நாகராஜ் சொன்னது…
நல்ல பகிர்வு...//
நன்றி வெங்கட் தங்களின் கருத்துக்கு.
//Lakshmi சொன்னது…
தமிழ்க்காரர்கள் மேல இவ்வளவு அபி
மானம் வைத்திருப்பது நல்ல விஷயம்.
கேக்கவே சந்தோஷமா இருக்கு.//
நன்றி லக்ஷ்மி அம்மா தங்களின் கருத்துக்கு.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...
கேக்கவே சந்தோஷமா இருக்கு.
திரட்டியில் இணைக்கும் முறை
இந்த முறையில் இணைந்தால் உங்கள் தளத்திற்கும் traffic கூடும்.
//சே.குமார் சொன்னது…
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...
கேக்கவே சந்தோஷமா இருக்கு.//
ஆம் குமார். நன்றி தங்களின் கருத்துக்கு.
//தமிழ் வண்ணம் திரட்டி சொன்னது…
திரட்டியில் இணைக்கும் முறை
இந்த முறையில் இணைந்தால் உங்கள் தளத்திற்கும் traffic கூடும்.//
தகவலுக்கு நன்றி.
ஆஹா! தமிழனுக்கு பெருமை சேர்க்கும் சம்பவம்..
ஆம் செந்தில்குமார், நன்றி தங்களின் கருத்துக்கு.
மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் தங்கள் லாபத்துக்கு பூசல் கிளப்புவது. உங்கள் பதிவைப் படித்த போது மகிழ்ச்சி ஏற்பட்டது.
//ஸ்ரீராம். சொன்னது…//
நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்துக்கு.
அக்கா, பாக்-இந்தியா, ஹிந்து-முஸ்லிம், கன்னடர்-தமிழர் என்று இது எல்லாமே அரசியல்வாதிகளும், சில மீடியாக்களும் தங்கள் சுய லாபத்திற்காகச் செய்வது. மற்றபடி, சாதாரண பொதுஜனங்கள் எந்த ஒரு வேற்றுமையும் பார்ப்பதில்லை.
அடேயப்பா ஒரு பதிவில் தமிழர்களை எல்லாம்
உச்சானிக் கொம்பில் உட்கார வைத்துவிட்டீர்கள்
அர்த்தோடு படங்கள் வரைந்த பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk
//ஹுஸைனம்மா சொன்னது…//
ஆம் ஹுஸைனம்மா,நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//Ramani சொன்னது…//
நன்றி ரமணி,தங்களின் அன்பான கருத்துக்கு.
//வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk//
நன்றி ஐயா தங்களின் பாரட்டுகளுக்கும்,வாழ்த்துகளுக்கும்.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
நன்றி ராஜேஷ்.
படிச்சதுமே எனக்கும் சர்க்கரை தூக்கலா சேர்த்த இனிப்பான பாயாசம் குடிச்சது போல இருந்திச்சு ராம்வி...
நாம் வாழும் இடத்தை விட்டு பிழைக்க வேறு வழி இல்லாம இன்னொரு இடத்திற்கு போகிறோம்...
அங்க சௌகரியங்களை விட அசௌகரியங்கள் தான் அதிகம் ஏற்படுகிறது... இது என் அனுபவத்தில் சொன்னதுப்பா...
ஆனால் தமிழரை இத்தனை மரியாதையாக நடத்தினது மட்டுமில்லாம தமிழர்களிடமே யோசனை கேட்கும் நல்ல உள்ளங்களும் இருக்குன்னு கேட்கறச்சே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...
வறச்சே என்ன கொண்டு வந்தோம் கொண்டு போக? ஆனா அன்பை அளவில்லாம எல்லோரிடமும் பகிரலாமே.... அந்த அன்பு தானே மனசை கனியவைப்பதும் கருணையா நம்மை பார்க்கவைப்பதும்....
உலகமே இப்படி மாறிடுத்துன்னா சண்டை சச்சரவுக்கு இடமே இல்லாம போய்ரும்...
நேத்து ஒரு மலையாளி ஏஜெண்ட் வந்து என்னிடம் சொன்னார்... மேடம் எங்க கல்யாணம் முடிஞ்சு கும்பகோணம் போய் கோவில்கள் எல்லாம் தரிசித்தோம்.. சென்னையில் 5 நாட்கள் தங்கினோம்... ஜனங்க என்ன ஒரு உபசரிப்பு என்ன ஒரு அன்பு எத்தனை சுத்தம்...
இப்படி அவர் சொல்லி கேட்டப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது... மனம் நிறைந்து மற்றரை வாழ்த்தும் மனப்பக்குவம் கூட கண்டிப்பா எல்லாருக்குமே இருக்கணும்...
அருமையான பகிர்வு ராம்வி.... அன்பு நன்றிகள்பா..
//மஞ்சுபாஷிணி சொன்னது…
வறச்சே என்ன கொண்டு வந்தோம் கொண்டு போக? ஆனா அன்பை அளவில்லாம எல்லோரிடமும் பகிரலாமே.//
சரியாக சொன்னீங்க.எல்லோரிடமும் அன்பாக இருந்தாலே போதும் உல அமைதிக்காக யாரும் போராடவே வேண்டாம் அது தானே கிடைத்துவிடும்.
நன்றி மஞ்சு தங்களின் வருகைக்கும்,அழகான கருத்துக்கும்.
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல விஷயம்.
நல்ல பகிர்வு.
//கோவை2தில்லி சொன்னது…
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல விஷயம்.
நல்ல பகிர்வு.//
நன்றி ஆதி தங்களின் கருத்துக்கு.
கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.. நிறைய விஷயங்கள்ல இப்படித்தான் தவறான தகவல்கள் பரப்பப் பட்டு விடுது..
பதிவை படிக்கற எல்லார் தலையும் நிமிரும் கட்டாயமா.
சூர்யஜீவா சார்!உங்க பதிலை நான் அப்டியே ரிப்பீட்டுகிறேன்
கருத்துரையிடுக