------------------------------------------------------------------

ஒரு விடுமுறை நாளில் வீட்டில் தொலைகாட்சியில் இராமாயணம் தொடர் பார்த்துக்கொண்டிருந்தோம். இராமர் குரு குலத்தில் கல்வி கற்பது,வில்வித்தை பயில்வது ஆகியவற்றை பார்த்து
என் மகள் கேட்டாள்:
“எம்மா
அந்த காலத்தில் இப்படி oral ஆ( வாய்மொழியாக) தான் எல்லாம் கத்துக்கணுமா? இப்ப....
அவளை முடிக்கவிடாமல் நான் உடனே :
“ஆமாம், ஓலைசுவடிகள் உபயோக படுத்தபட்டதற்க்கு முன்னாடி குரு சொல்லி கொடுப்பதை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும் எழுதிவைப்பதெல்லாம் கிடையாது.அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி நன்றாக இருந்தது. ஒரு முறை சொல்லி கொடுப்பதை பல முறை திருப்பி திருப்பி சொல்லி பழகி கொள்ள வேண்டும்.எழுதி வைத்து கொண்டு படிப்பதறக்கெல்லாம் வசதி கிடையாது.புத்தகம் பேப்பர் எல்லாம் இப்ப 150/200 வருஷங்களாகத்தான் இருக்கு.
இப்ப நீங்க பள்ளிகூடத்தில் கொடுக்கும் வீட்டு பாடங்களை சுயமா சிந்தித்து எங்க எழுதுரீங்க ??வீட்டுக்கு வந்த உடனே கணணி முன்னாடி உட்கார்ந்து கூகிள் பண்ணி எழுதி எடுத்துக்கொண்டு போயிடுரீங்க.!
இராமாயணம,மஹாபாரதம் எல்லாம் ஸ்லோகங்களாக சொன்னதுதான்.அந்த காலத்தில் எழுத்து வசதிகள் இல்லாத போதும் வாய்மொழியாகவே சொல்லி சொல்லி காப்பற்றி வந்தார்கள்.”
ஒரே மூச்சில் பேசிவிட்டு நான் நிறுத்த,
என் பெண்:
“பேசி முடிச்சியா? நான் என்ன கேட்க போறேன்னு முதல்ல கவனி அப்பறமா நீ பதில் சொன்ன போதும்”. என்றாள்.
நான் :
“சரி என்ன கேக்கப்போற”?
அவள்:
“ ராமர், கிருஷ்ணர் அப்பறம் மற்ற அவதார பெருமாள் எல்லாம் குருகுலத்துக்கு போய் வில்வித்தை, வேதம்,இன்னும் பல விஷயம் கத்துண்ட மாதிரி கல்கி அவதார பெருமாள் யுனிபார்ம் போட்டுண்டு, ஐ-பாட், லாப் டாப் எல்லாம் எடுத்துண்டு ஸ்கூலுக்கு போவாரா?
நான்:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவள் தொடர்ந்து:
"கல்கி பெருமாள் பெர்முடாஸ் டீ ஷர்ட் எல்லாம் போட்டுண்டு போறதை நான் கட்டாயம் பார்க்கணும்மா!"

44 கருத்துகள்:
இந்தக்கால குழந்தைகள் பிறக்கும்போதே மிகவும் புத்திசாலித்தனத்துடனே பிறக்கிறார்கள். அவர்கள் கேட்கும் விசித்திர கேள்விகள் நம்மை பிரமிக்க வைக்கும். நம்மால் சிலவற்றிற்கு பதிலேதும் சொல்ல முடியாது. உங்கள் குழந்தை இது போல கேட்டதில் ஆச்சர்யமே இல்லை. குழந்தைக்கு என் அன்பான வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், ஆசிகள். அவள் மிகப்பெரிய ஆளாக வருவாள். அன்புடன் vgk
என்னதோர் கற்பனை.... நானும் கற்பனை செய்து பார்த்தேன்.... :)
கற்பனை சிரிக்க வைத்தது... ஒரு வேளை வருங்காலத்தில் ஏழைகளே இல்லை என்றால் பணக்காரர்கள் என்ன செய்வார்கள் என்று சிந்தித்து பார்த்தேன், நீங்களும் கற்பனை செய்து பாருங்கள்...
//வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…
இந்தக்கால குழந்தைகள் பிறக்கும்போதே மிகவும் புத்திசாலித்தனத்துடனே பிறக்கிறார்கள். அவர்கள் கேட்கும் விசித்திர கேள்விகள் நம்மை பிரமிக்க வைக்கும். நம்மால் சிலவற்றிற்கு பதிலேதும் சொல்ல முடியாது. உங்கள் குழந்தை இது போல கேட்டதில் ஆச்சர்யமே இல்லை. குழந்தைக்கு என் அன்பான வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், ஆசிகள். அவள் மிகப்பெரிய ஆளாக வருவாள். அன்புடன் vgk//
வாங்க வை.கோ.சார். உங்க கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
வாங்க வெங்கட்,கருத்துக்கு நன்றி.
வாங்க சூரியஜீவா, உங்க கருத்துக்கு நன்றி.
I already told that your kids are very sharp and intelligent..All credit is going for your attitude. nice post. conversion gives real feeling to us.thanks for ur comments for my today's post.
நல்ல கேள்விகளை கேட்டு இருக்காங்க
நீங்க என்ன பதில் சொன்னீங்க சகோ...
வாங்க குணசேகரன்.நன்றி கருத்துக்கு.
வாங்க ரமேஷ், என்னால் ஒன்றும் பதில் சொல்லமுடியவில்லை.
அருமையான கேள்வி தான் அத்தை... தலைப்பை பார்த்தவுடன் பெர்முடா அருகே ஏதேனும் பெருமாள் இருக்கிறாரோ என தோன்றியது... :)
தேனாலிராமனையே மலைக்க வைத்தன குழந்தைகள், இப்போது உள்ள குழந்தைகள் அதை விட நூறு மடங்கு மேல்.
அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
akka...
avanga kettathu nalla kelvithaan....
sinthikka vendiya visayam.
vazhththukkal...
-S.Kumar (MANASU)
வா அஸ்வின். நீ எப்ப எழுத ஆரம்பிக்க போற?.
வாங்க கார்த்தி. கருத்துக்கு நன்றி.
வாங்க குமார். நன்றி கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.
கற்பனை பிரமாதமா இருக்கு. அப்படி வந்தா சூப்பராத் தான் இருக்கும்.
என்னுடைய வலைப்பதிவு வருகைக்கு நன்றி. Followers Widget இணைக்கவில்லையா?
இந்த லிங்க் கிளிக் செய்து விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.
http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=141483
வாங்க ஆதி.கருத்துக்கு நன்றி.
வாங்க சித்ரா.நன்றி.
நீங்கள் முதலில் குழந்தை என்ன சொல்லுதுனு கவனிக்கனும், அதுக்கு அப்பறம் பேசனும், குழந்தை என்ன பேசுதுன்னே தெரியாம இப்படி பொரிஞ்சு தள்ளுனா என்ன அர்த்தம்?
-ஆஷிக்
ஹா..ஹா...
பல சமயம் அவர்கள் என்ன கேட்கப் போகிறார்கள் என்பதை அறியாமல் அவசரமாக 'சொல்லிக் கொடுப்பது' இப்படித்தான் ஆபத்தில் முடியும் போலேருக்கு!
உங்கள் குழந்தை புத்திசாலி...(இந்த இடத்தில்) நீங்கள் உடனே பதில் சொன்னவுடன் பொருமையா இருந்து பேசி முடிச்சுட்டியா.... என்று தனது கேள்வியை முழுமையாக கேட்டவிதம் ஹா ஹா அருமை... கல்கி அவதாரம் லேப் டாப் சகிதமா ஸ்கூலுக்கு போவுமா? இந்த இடத்தில் அதிபுத்திசாலி.... அடுத்து பர்மடாஸ் டீ சர்ட் போட்டுட்டு போறத பாக்கனும்மா.... ஹா ஹா ஹா உண்மையில் இந்த கால ஜெனரேசன் நம்மைவிட பலமடங்கு புத்திசாலிங்க ... உங்களை புத்திசாலிதனமா கேள்விகேட்ட உங்க மகளுக்கும் இந்த பதிவை பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் பாராட்டுக்கள் சகோதரி
வாங்க ஆஷிக். கருத்துக்கு நன்றி.
வாங்க ஸ்ரீராம். கருத்துக்கு நன்றி.
வாங்க மாய உலகம். கருத்துக்கும் பாரட்டுக்களுக்கும் நன்றி.
ஹா ஹா செம டைட்டில்.. அதை நியாயப்படுத்த உங்க வாரிசின் வாய்த்துடுக்கு அட்டகாசம்.!!!!!!!!!!!!!!!
இந்தப்பதிவை இன்னும் கொஞ்சம் நீட்டி முழக்கி இருக்கலாம், பொசுக்குனு முடிஞ்சுடுச்சு. ஆனா அமரர் சுஜாதா சொல்படி ஒரு நல்ல படைப்பு வாசகனிடம் அட இன்னும் கொஞ்சம் இருக்கக்கூடாதா? என ஏங்க வைப்பதில் தான் அதன் வெற்றி என்றார்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ
வாங்க செந்தில்குமார். நன்றி.
வாங்க ரமேஷ் நன்றி.
ரமா குழந்தைகள் இப்பல்லாம் அதி புத்திசாலிகளாகவே
இருக்காங்க.கேள்விகள் கேக்கும் குழந்தைகள் ரொம்ப
புதிசாலிகளாக வருவாங்க.அவங்க எப்ப என்ன கேள்வி கேப்பாங்கன்னு தான் தெரியாது. நாம தான் நிறையா படிக்கணும் போல இருக்கு.
சுட்டிப்பொண்ணு :)
குழந்தையின் கற்பனை பிரமாதம்!
நேத்து நான் போட்ட கமெண்ட் எங்க போச்சு ரமா?
புத்திசாலிக் குழந்த என்னமா மடக்கீட்டா!............
அப்புடியே தலையக் குனியுறது.குழந்தைகளிடம்
வம்பு பண்ணாதீக ஹி.......ஹி......ஹி.......................
வழமைபோன்று என்னத்த சொல்ல அருமையா
இருக்குங்க உங்கள் ஆக்கம் வாழ்த்துக்கள் சோ....
இன்றும் ஒரு வித்தியாசமா ஆக்கம் என் தளத்தில்
உங்கள் மேலான கருத்தினை எதிபார்க்கின்றேன்...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....
வாங்க லக்ஷமி அம்மா.இண்டர்நெட் சரியாக வேலை செய்யாததால் பார்க்க முடியவில்லை. இப்பொழுது பார்த்துவிட்டேன். கருத்துக்கு நன்றி அம்மா.
வாங்க முத்துலெட்சுமி. கருத்துக்கு நன்றி.
வாங்க ஜனா. கருத்துக்கு நன்றி.
வாங்க அம்பாளடியாள். நன்றி கருத்துக்கு.
ஹஹஅஹா காலையில் பெருமாள் தரிசனம். அப்புறம் உங்கள் மகளின் சுட்டித்தனம் ... குழந்தைக்கு என் ஆசிகள் . சுத்தி போடுங்க
வாங்க எல்.கே. கருத்துக்கு நன்றி.
நாம் சாமி மீது உள்ள பயத்தின் காரணமாகவோ
அல்லது ஓரளவுக்குமேல் யோசிக்க முடியாததாலோ
குழந்தைகள் போல் மிகச் சரியாக
போலித்தனம் இல்லாமல் சிந்திக்க முடிவதில்லை
குழந்தைக்கு திருஷ்டி சுற்றிப்போடுங்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி சார். உங்க கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
கருத்துரையிடுக