இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ??
ஆம் “ஹாக்கி” எனப்படும் “ வளைதடிப் பந்தாட்டம்.”
ஹாக்கியை தவிர பல விளையட்டுகள் இந்தியாவில் விளையாட படுவது நாம் எல்லோரும் அறிந்ததே.
ஆனால்....
விளையாட்டு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கிரிகெட் மட்டுமே.யாரைப்பார்த்தாலும் கிரிகெட் பற்றியே பேச்சு.தினசரி செய்தி பத்திரிக்கையில் பெருமளவு பகுதி கிரிகெட்டுக்கே ஒதுக்கப்படுவது என்று இந்தியாவின் தேசிய விளையாட்டை மாற்றிவிட்டார்களே என்று எண்ண வைக்கும் அளவுக்கு அதற்கு முக்கியத்துவம்.
இதை தவிர கிரிக்கெட் வீரர்களுக்கு விளம்பரங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.அவர்களை தவிர ஏதோ ஒன்றிரண்டு வேறு விளையாட்டு வீரர்களே விளம்பரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த மாதிரி கிரிக்கெட்டுக்கு முக்கியதுவம் கொடுத்துவிட்டு அவர்கள் நன்றாக ஆடி ஜெய்க்கும் பொழுது அவர்களை தலையில் தூக்கி உட்காரவைத்துக்கொண்டு வாழ்த்துவது! அவர்கள் சரியாக ஆடவில்லை என்றால் கீழே தள்ளி விமர்சிப்பது என்பதும் எனக்கும் சரியாக படவில்லை.(சே.குமார் சொல்லியிருப்பது போல்.)

100 கோடிக்கும் மேலான ஜனத்தொகை கொண்ட நாட்டில் எத்தனையோ1000 விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும்.தேசிய விளையாட்டான ஹாக்கி,மற்றும் தடகள விளையாட்டுகள்,நீச்சல்விளையாட்டுகள்,டென்னிஸ்,பேட்மிட்டன், கால் பந்து,கூடை பந்து,வாலிபால்,துப்பக்கி சுடுதல்,மேலும் பல.....இவற்றில் யாராவது ஜெயித்து பதக்கம் பெறும்போது மட்டுமே பத்திரிக்கை செய்திவரும். மற்ற சமயங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறதா என்று கூட நமக்கு தெரியாது.
சரி கடந்த வருடம் காமன்வெல்த்
விளையாட்டு போட்டிகள் நடந்ததே என்றால் அது ஆரம்பிப்பதற்கு முன்னும், நடந்து முடிந்த பிறகும் நடந்த கூத்து நாடறிந்ததே..விளையாட்டுகளில் போட்டி இருக்கலாம்.அது ஆரோகியமானதுதான். ஆனால் நம் நாட்டில் ஊழல் செய்வதில்தான் போட்டி இருக்கிறது.
![]() |
| குத்துச்சண்டை வீரர் அகில் குமார்.காமன்வெல்த் போட்டிகளின் போது. |
| தீபிகா குமாரி..காமன்வெல்த் போட்டிகளின் போது |
![]() |
| நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டி வீரர்கள். |
கிரிக்கெட்டும் ஒரு நல்ல விளையாட்டுதான் ஆனால் அதற்கு தரப்படும் ஆதீத முக்கியத்துவத்தை குறைத்து மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியவத்துவம் தர வேண்டும் என்பதே தாழ்மையான கருத்து.
------------------------------------------------------------------------------------------------------------


40 கருத்துகள்:
”கிரிக்கெட்டும் ஒரு நல்ல விளையாட்டுதான் ஆனால் அதற்கு தரப்படும் ஆதீத முக்கியத்துவத்தை குறைத்து மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியவத்துவம் தர வேண்டும் என்பதே தாழ்மையான கருத்து.”
நானும் இதை ஒத்துக் கொள்கிறேன்.
நல்ல பகிர்வு.
நல்ல கருத்து ராம்வி! பலரின் வெகு நாளைய ஆதங்கமும் இது தான்.
வாங்க ஆதி.கருத்துக்கு நன்றி.
//Rathnavel சொன்னது…
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//
வாங்க ஐயா கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க மனோ மேடம். கருத்துக்கு நன்றி.
உங்கள் ஆதங்கம் நியாயமானது. திறமைசாலிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் அரசு செய்ய வேண்டும்... ஆனால் அவர்களுக்கு இதில் எல்லாம் அவ்வளவு நாட்டமில்லை. நேரமுமில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.
நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்கள் கருத்தை நான் ஒத்துக் கொள்கிறேன் சகோதரி .
பகிர்வுக்கு நன்றி.
வாங்க வெங்கட். நீங்க சொல்லுவது முற்றிலும் சரி.அரசுக்கு நாட்டமில்லை என்பது வருந்ததக்க விஷயம்தான்.
வாங்க ரமேஷ். கருத்துக்கு நன்றி.
கிரிக்கெட் வளர முக்கிய காரணம்; விளம்பரத்திற்க்கு கிடைக்கும் லாபத்துக்காக தொலைக்காட்சி நிறுவனங்கள் வளர்த்து விட்டதுதான் இந்த கிர்க்கெட்.
தங்களின் கருத்துதை ஏற்றுக்கொள்கிறேன் சகோ..,
நல்ல பகிர்வு.. நன்றி சகோ..
அனைத்து விளையாட்டுகளுக்கும் அரசாங்கத்தால் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளம்பரமும், புகழும், பாராட்டுக்களும் கிடைக்க வழி வகைகள் செய்யத்தான் வேண்டும்.
எல்லோர் மனதிலும் உள்ள நல்லதொரு மிகவும் நியாயமான எதிர்பார்ப்பு தான்.
பதிவுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.vgk
வாங்க ராஜா. உங்க கருத்துக்கு நன்றி.
வாங்க வை.கோ.சார். உங்க கருத்துக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி.
வளை தட்டி பந்தாட்டம். நல்லா இருக்கே.பலருக்கும்
புரியனுமே.
ஆம் அம்மா ஹாக்கியை தமிழில் இவ்வாறு சொல்ல வேண்டும்.
உங்க கருத்துக்கு நன்றி அம்மா.
நன்று சொன்னிர்கள் ரமாஜி,
இது குறித்த என் கருத்துகளை "உலக கோப்பையும், நானும்" என்ற என் பழைய பதிவினை பார்க்கவும்.
ஒரு நாள் விஜய் டிவி யில் ஏதோ நக்ஷத்திர கிரிக்கெட் நடந்து கொண்டிருந்தது. என் மகள் கேட்டாள்,"ஏம்மா சினிமா நடிகர்கள் எல்லாம் கிரிக்கெட் ஆடுகிறார்கள்?"
நான் சொன்னேன், "கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்கிறார்கள் அல்லவா, அது போல் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்." என்று.
என்ன நான் சொல்வது சரி தானே?
வாங்க தா.தலைவி.நீங்க சொன்னது முற்றிலும் சரிதான்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
வாங்க மாலதி.நன்றி கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.
//வளைதடிப் பந்தாட்டம்//
முதன்முறையாக் கேள்விப்படுகிறேன். நன்றி.
கிரிக்கெட் மேலே வெறுப்பே வந்துடுச்சு இப்பலாம்.
வாங்க ஹுஸைனம்மா. ஹாக்கிக்கான தமிழ் சொல்.
நன்றி உங்க கருத்துக்கு.
தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.
இதோ தொடர்புடைய இடுகை.
http://gunathamizh.blogspot.com/2009/06/36.html
கருத்துக்கு நன்றி குணசீலன்.
உங்கள் இடுகைக்கு சென்று பார்த்தேன்.பழங்காலத்தில் விளையாடப்பட்டு தற்போது மறந்து போய்விட்டிருக்கின்ற விளையாடிடுகளை பற்றிய அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.
நல்ல பதிவு.
தங்கள் கருத்தை நான் ஒத்துக்கொள்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
MANASU S.Kumar
http://vayalaan.blogspot.com
வாங்க குமார்,கருத்துக்கு நன்றி.
i agreed ur words. but now a days cricket changed from sport mind into business mind. i think govt only take steps to give importance to other games.
இந்த ஆதங்கம் எனக்கு வெகு நாட்களாக உண்டு
மிக அழகாக விளக்கமாக பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்
சிந்திக்கத் தூண்டிச் செல்லும் தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல கருத்துதான். ஆனால் கிரிக்கெட் தான் பெரும்பான்மை மக்களை ஆட்டுவிக்கிறது.
நன்றி குணசேகரன்.
வணக்கம் ரமணி சார்.கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
>>கிரிக்கெட்டும் ஒரு நல்ல விளையாட்டுதான் ஆனால் அதற்கு தரப்படும் ஆதீத முக்கியத்துவத்தை குறைத்து மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியவத்துவம் தர வேண்டும்
good one
கருத்துக்கு நன்றி செந்தில்குமார்.
கிரிக்கெட் Vs ஹாக்கி குறித்து ஒரு பதிவு விலாவாரியாக எழுத வேண்டும் என்கின்ற ஆதங்கத்தில் பாதியினை இப்பதிவு நிவர்த்தி செய்துவிட்டது. காமன் வெல்த் வீரர்களை அறிமுகப்படுத்தியமை அருமையிலும் அருமை! மக்கள் ஊடகங்கள் அனைத்தும் வணிக மயமாகிப் போனதால் தான் கிரிக்கெட் பின் ஓடுவதோடின்றிப் ஒரு வித போதையையும் மாயையும் ஏற்றுகின்றனர். காலம் மாறினால் இதே கிரிக்கெட்டை புறந்தள்ளிவிட்டு வேறொன்றின் பின்னே மக்களை வசியப்படுத்த வரிந்து கட்டுவர். அதற்கு சாட்சி: இங்கிலாந்து கிரிக்கெட்டில் நம்மை மட்டையாக்க... ஊடகங்களெல்லாம் உடனே அதற்கு முக்கியத்துவம் தராது அன்ன ஹசாரேவிற்கு தந்து விட்டனர். மக்களை பரபரப்பாக்கி அதில் காசு பார்ப்பது தான் தற்போதைய ஊடக உத்தி.
குறிப்பு: தங்களுடைய பதிவுகளுக்கு பல முறை பின்னூட்டமிடுவதில் சிக்கல் எழுகின்றது. என்னுடைய கூகுள் மின் அஞ்சல் முகவரி வாயிலாக பின்னூட்டமிட அனுமதி மறுக்கின்றது. தங்களைப் போலவே ஒருசிலரின் வலைப்பூக்கள் அனுமதிப்பதில்லை. இக்குறையினை நிவர்த்தி செய்யவும்.
--
Best Regards,
P. Moorthy
நெல்லி. மூர்த்தி
வணக்கம் மூர்த்தி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தாங்கள் சுட்டி காட்டியுளள் குறையை நிவர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறேன். நன்றி.
கிரிக்கெட்டும் ஒரு நல்ல விளையாட்டுதான் ஆனால் அதற்கு தரப்படும் ஆதீத முக்கியத்துவத்தை குறைத்து மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியவத்துவம் தர வேண்டும் //
அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.
கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
இந்த நாட்டுல எல்லாருக்கும் கிரிக்கட் பைத்தியம் பிடிச்சிருக்கு.120 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் முக்காவாசி பேரு இதைதான் விரும்புகிறார்கள்.அப்புறம் எப்படி? அரசியல் அமைப்பு சரியில்லை
வணக்கம் கோவை நேரம். உங்க கருத்துக்கு நன்றி.
இந்த விஷயமாக பலருக்கும் இருக்கும் ஆதங்கத்தை ( என்னையும் சேர்த்து)
மிகச் சரியாக பதிவிட்டிருக்கிறீர்கள்.பாராட்டப் பட வேண்டிய விஷயம்
கருத்துரையிடுக