என்னுடைய “ தாய் மொழி” என்கிற பதிவுக்கு “ சங்கப்பலகை” பதிவு திரு அறிவன் என்பவர் கருத்தில் கீழ்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
//நீங்கள் வசிப்பது எங்கு என்று தெரியவில்லை.. இந்தியாவில் தமிழத்தில் தான் என்றால் இப்பதிவை விட நகைமுரணான விதயம் எதுவும் இருக்காது.. இந்தியாவுக்கு வெளியில் என்றாலும் தமது சொந்த மொழியைப் பயிற்றுவிப்பதையும் படிக்க வைப்பதையும் ஒரு முயன்று செய்யும் செயலாகப் பார்க்கும் மனநிலை தமிழர்களின் அறிவு வெறுமையைத்தான் சுட்டுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. தாய்மொழியைக் கற்காதவன் முகவரியற்றவன் போன்றவன் என்பது பொதுநோக்கு. வருத்தப் பட வைப்பதற்காக எழுதவில்லை..வருந்தப்பட்டிருப்பதால் எழுதுகிறேன்..
//நீங்கள் வசிப்பது எங்கு என்று தெரியவில்லை.. இந்தியாவில் தமிழத்தில் தான் என்றால் இப்பதிவை விட நகைமுரணான விதயம் எதுவும் இருக்காது.. இந்தியாவுக்கு வெளியில் என்றாலும் தமது சொந்த மொழியைப் பயிற்றுவிப்பதையும் படிக்க வைப்பதையும் ஒரு முயன்று செய்யும் செயலாகப் பார்க்கும் மனநிலை தமிழர்களின் அறிவு வெறுமையைத்தான் சுட்டுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. தாய்மொழியைக் கற்காதவன் முகவரியற்றவன் போன்றவன் என்பது பொதுநோக்கு. வருத்தப் பட வைப்பதற்காக எழுதவில்லை..வருந்தப்பட்டிருப்பதால் எழுதுகிறேன்..
அவருடைய கருத்தை வெளியிட்டுவிட்டு கருத்துக்கு நன்றி என கூறிவிட்டு நான் செல்ல விரும்பவில்லை.
நான் சொல்லவந்த விஷயம் என்னவென்றால்,
இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் ஆங்கில வழி கல்வியைதான் விரும்புகின்றனர்.வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் அவர்களும் வளர ஆங்கிலம் அவசியமாகும். இது அவர்களுடைய எதிர்காலத்திற்க்கு நல்லது என்கிற எண்ணத்தினால் பெற்றோராகிய நாமும் அவர்களை ஆங்கில வழி கல்வி கற்க வைக்கிறோம். இப்படிபட்ட சூழ்நிலையில் அவர்கள் ஆங்கிலத்தையே தாய்மொழியாக்கி கொண்டுவிடுகிறார்கள்.இத்தகைய நிலையில் அவர்களுக்கு பெற்றோராகிய நாம்தாம் அவர்களுக்கு எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும்.
அதைதான் நானும் செய்தேன்.
என் பெரிய பெண்ணுக்கு 8 வயதும்,சிறியவளுக்கு 2 வயதும் ஆன சமயத்தில் நான் என் கணவரின் வேலை மாற்றல் காரணமாக சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்துவிட்டேன்.இங்கு அவர்களை பள்ளியில் சேர்த்தபொழுது கர்நாடகா பள்ளிகளில் கன்னடம் கட்டாய பாடம் என்பதால் அதுவும்,இரண்டாம் மொழியாக ஹிந்தியும் எடுத்துக்கொள்ள் வேண்டிய இருந்ததால்(இங்கு பள்ளிகளில் தமிழ் பாடம் சொல்லிக்கொடுப்பது இல்லை) அவ்விரண்டு மொழிகளுமே படிக்க வைக்க வேண்டியதாயிற்று. இங்கு கர்நாட்டகாவில் இருப்பது போல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியைதான் கற்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கூட பாடம், வீட்டு பாடம் அதைதவிர பெற்றோர்கள் வேலை இதற்கு நடுவில் அவர்களுக்கு தம் தாய்மொழி கற்க வேண்டியதின் அவசியத்தை புரிந்து கொள்ளும் பக்குவத்தை அவர்கள் அடைய 10 வயதாவது ஆக வேண்டும்.இப்பொழுதுள்ள தலைமுறையினரிடம் மேற்கத்திய மோகத்துக்கு நடுவில் தாய்மொழியினுடைய அருமையை புரிய வைக்க பிரயத்தப்படதான் வேண்டும.
. திரு அறிவன் அவர்கள் வருத்தப்பட்டது போல் தாய்மொழியை கற்க வைப்பது ஒரு முயன்று செய்யும் செயலாக ஆகிவிட்டதே என எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது.
24 கருத்துகள்:
வருந்த தக்க விஷயம் என்பது உண்மைதான் சகோதரி
கர்நாடகா பள்ளிகளில் கன்னடம் கட்டாய பாடம் என்பதால் அதுவும்,இரண்டாம் மொழியாக ஹிந்தியும் எடுத்துக்கொள்ள் வேண்டிய இருந்ததால்(இங்கு பள்ளிகளில் தமிழ் பாடம் சொல்லிக்கொடுப்பது இல்லை) அவ்விரண்டு மொழிகளுமே படிக்க வைக்க வேண்டியதாயிற்று. இங்கு கர்நாட்டகாவில் இருப்பது போல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியைதான் கற்க வேண்டும்.
அன்பு நண்பி தங்களின் வருத்தம் நீங்கள் சொல்லும் போது தெரிகிறது, உங்கள் குழந்தைகளின் தமிழ் மொழிஆர்வத்தை ஊக்குவித்து , தமிழ் புலமையை வளர்க்க வேண்டியது பெற்றோர்களாகிய உங்களின் பொறுப்பு, அதை மறந்துவிட வேண்டாம்.
உங்கள் பதிவுகள் மிகச்சிறப்பாக பல தகவல்கள் அளிப்பதாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து
சந்திப்போம்.
.இப்பொழுதுள்ள தலைமுறையினரிடம் மேற்கத்திய மோகத்துக்கு நடுவில் தாய்மொழியினுடைய அருமையை புரிய வைக்க பிரயத்தப்படதான் வேண்டும.//
என் அனுபவமும் இதுதான்.
தமிழ் நாட்டில் பிறந்தாலும் தமிழ் தடுமாட்டம்தான். முயன்று பிரயத்தப்பட்டுதான் விதைக்கவேண்டி இருக்கிறது தமிழை.
பகிர்வுக்கு நன்றி.
ஆஹா ! இந்த விஷயத்தை ஆரம்பித்தால் நான் டென்ஷன்னாகி விடுவேன். தமிழ் நாட்டில் இருந்து கொண்டே பலருக்கும் தமிழில் எழுத படிக்க தெரிவதில்லை. இது மட்டும்தானா இன்னும் பல விஷயங்கள் இப்படித்தான். அப்பபோ பதிவில் தவணை முறையில் டென்ஷன்னாகிறேன்.
வாங்க ரமேஷ்,கருத்துக்கு நன்றி.
//!! அய்யம்மாள் !! சொன்னது…
அன்பு நண்பி தங்களின் வருத்தம் நீங்கள் சொல்லும் போது தெரிகிறது, உங்கள் குழந்தைகளின் தமிழ் மொழிஆர்வத்தை ஊக்குவித்து , தமிழ் புலமையை வளர்க்க வேண்டியது பெற்றோர்களாகிய உங்களின் பொறுப்பு, அதை மறந்துவிட வேண்டாம்.//
வாங்க அய்யம்மாள், நான் இந்த மாதத்தில் 22ம் தேதி வெளியிட்டுள்ள “தாய் மொழி” பதிவில் என் குழந்தைகளை தமிழ் மொழி ஆர்வத்தை வளர்க்க நான் செய்வதை பற்றி கொடுத்துள்ளேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வாங்க வித்யா மேடம், என் பதிவிர்க்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கருத்து சொன்னதர்க்கு நன்றி.
வாங்க இராஜராஜேஸ்வரி மேடம். கருத்துக்கு நன்றி.
வாங்க தா.தலைவி, கருத்துக்கு நன்றி.
//(இங்கு பள்ளிகளில் தமிழ் பாடம் சொல்லிக்கொடுப்பது இல்லை)//
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சகோதரி நன்றாக விசாரித்து பாருங்கள் பெங்களூரில் கணிசமான தமிழ் பள்ளிகள் உண்டு......
கர்நாடகா பள்ளிகளில் கன்னடம் கட்டாய பாடம் என்பதால் அதுவும்,இரண்டாம் மொழியாக ஹிந்தியும் எடுத்துக்கொள்ள் வேண்டிய இருந்ததால்(இங்கு பள்ளிகளில் தமிழ் பாடம் சொல்லிக்கொடுப்பது இல்லை) அவ்விரண்டு மொழிகளுமே படிக்க வைக்க வேண்டியதாயிற்று. இங்கு கர்நாட்டகாவில் இருப்பது போல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியைதான் கற்க வேண்டும். vethanai
வாங்க பொன்சிவா,என் பதிவிர்க்கு வரவேற்கிறேன்.
தகவலுக்கு நன்றி.விசாரித்து பார்க்கிறேன்.
ஆனால் இப்பொழுது என் பெண்கள் இருவரும் கல்லூரி படிப்புக்கு வந்துவிட்டதால், நானே வீட்டில் அவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிறேன்.
வாங்க மாலதி, என்ன செய்வது வேதனைதான்..
வருந்ததக்க விஷயம் என்பது உண்மைதான். வேதனை.
// திரு அறிவன் அவர்கள் வருத்தப்பட்டது போல் தாய்மொழியை கற்க வைப்பது ஒரு முயன்று செய்யும் செயலாக ஆகிவிட்டதே என எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. //
இப்பவே இப்படி இருந்தா.. இன்னும் 10-15 வருஷம்
கழிச்சி என்ன ஆகுமோ.. கவலையா இருக்கு..!
//Rathnavel சொன்னது…
நல்ல பதிவு.//
வாங்க ஐயா, கருத்துக்கு நன்றி.
//90bc5e8c-b1c5-11e0-8e97-000bcdca4d7a சொன்னது…
வருந்ததக்க விஷயம் என்பது உண்மைதான். வேதனை.//
வணக்கம் உங்கள் பெயர் விவரம் தெரியவில்லையே!
கருத்துக்கும் நன்றி.
வாங்க வெங்கட், கருத்துக்கும் நன்றி
அதுக்குதான் குழந்தைகளை தமிழ் படிக்க சொல்லி ஊக்கவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
திரு அறிவன் அவர்கள் வருத்தப்பட்டது போல் தாய்மொழியை கற்க வைப்பது ஒரு முயன்று செய்யும் செயலாக ஆகிவிட்டதே என எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. //
என்னத்தை சொல்ல, நம் வாழ்க்கை இப்பிடி இருக்கேன்னு வருத்தபடுரதை தவிற.....!!!!
வாங்க மனோ, பதிவிர்க்கு வரவேற்கிறேன்.கருத்துக்கு நன்றி.
நான் பிள்ளைகளுடன் வீட்டில் தமிழில் உரையாட முக்கிய காரணம், தமிழ் மட்டுமே அறிந்த அவர்களின் பாட்டிகள். தாத்தா- பாட்டிகள் பேரக்குழந்தைகளுடன் சகஜமாகப் பேச முடியாததுபோல கொடுமை எதுவுமில்லை!!
>>வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…
உங்கள் பதிவுகள் மிகச்சிறப்பாக பல தகவல்கள் அளிப்பதாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து
சந்திப்போம்.
மோதிரக்கையே சொல்லியாச்சு , அப்புறம் நாங்க சொல்ல என்ன இருக்கு?
///சி.பி.செந்தில்குமார் சொன்னது…
>>வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…
உங்கள் பதிவுகள் மிகச்சிறப்பாக பல தகவல்கள் அளிப்பதாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து
சந்திப்போம்.
மோதிரக்கையே சொல்லியாச்சு , அப்புறம் நாங்க சொல்ல என்ன இருக்கு?///
நன்றி செந்தில்குமார்.
கருத்துரையிடுக