தெய்வ தரிசனம் எல்லாம் முடித்துக்கொண்டவுடன்,CITY OF PALACES என்று அழைக்கப்படும் மைசூர்..
மைசூர் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அந்த பிரம்மாண்டமான அரண்மனை,கே.ஆர்.எஸ்.அணை, இரண்டும் தான்.
கே.ஆர்.எஸ்.என்று அழைக்கப்படும் கிருஷ்ணராஜசாகர் அணை சுமார் 90 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.இந்த அணை கட்டப்பட்டதிலிருந்து திறக்கப்படும் வரை கட்டுமான பணிகளில் முக்கிய பங்கு வகித்தவர்
மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரைய்யா,இந்தியவின் தலை சிறந்த பொறியாளர்..இவர் 1912 முதல் 8 வருடங்கள் மைசூர் அரசின் திவானாக பணியாற்றினார்.இவர் திவானாக பணி புரிந்த காலத்தில் மைசூரின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தார்.இதனால் இவர் “மாடர்ன் ஸ்டேட் ஆஃப் மைசூர்” இன் தந்தை எனவும் சொல்லப்படுகிறார்.
கே.ஆர்.எஸ்.அணையின் அருகில் உள்ள “ பிருந்தாவன் கார்டன்” எனப்படும் தோட்டம் உள்ளது. இது 10 வருடங்களுக்கு முன் இருந்த மாதிரி இப்பொழுது இல்லை.தோட்டத்தின் எழில் மிக குறைந்து விட்டது. அதன் அளவையும் பாதியாக குறைத்து இருந்தார்கள் சுமார் 2 வருடங்களுக்கு முன் நாஙகள் சென்றிருந்த போது. ஆனால் அங்கு நடத்தப்படுகிற (“dancing fountain show" ) நடனமாடுகிற நீர்விழுச்சி காட்சி மிகவும் அருமையாக உள்ளது. இசைக்கு ஏற்ப அசையும் நீர்விழுச்சி மிகவும் அழகாக உள்ளது.
மைசூர்... city of palaces என்று சொல்லுவதர்க்கு ஏற்ற மாதிரி பல கட்டிடஙகள் அமைந்துள்ளன.
 |
| Mysore city corporation |
 |
Mysore DC office
|
 |
Mysore station
|
 |
mysore law courts
|
 |
| crawford hall |
மைசூர் அரண்மனை மிகவும் அழகும் கம்பீரமும் வாய்ந்தது..தற்போதுள்ள அரண்மனை 1897ல்கட்ட தொடங்கி 1912ல் முடிக்கப்பட்டது. விலை உயர்ந்த தேக்கு மற்றும் பெல்ஜியம் கண்ணாடிகள் உபயோகி்த்து கட்டப்பட்டுள்ளது.முகப்பு பகுதியில் உள்ள தர்பார் மண்டபம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
அரண்மனையின் உள்ளே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ஒவியங்கள் கண்ணை கவரும் வண்ணம் உள்ளது. அரசர்களின் சிம்மாசனங்கள், தசரா சமயத்தில் அவர்கள் உலாவரும் பல்லக்கு எல்லாம் பார்வைக்கு உள்ளது(அரண்மனை உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை நாம் கொண்டு செல்லும் புகைபட கருவிகளுக்கு தனி லாக்கர் உள்ளது .அதில் வைத்துவிட்டு செல்லவேண்டும்.)
அரண்மனையின் உள்ளேயே பல கோவில்கள் கட்டப்பட்டு இருக்கிறது.ஆஞ்ஜனேயஸ்வாமி கோவில், கணேசர் கோவில்,லக்ஷ்மிநாராயணஸ்வாமி கோவில்....................
 |
| Lakshminarayanaswamy temple. |
 |
Prasanna krishnaswamy temple
|
 |
| Varahaswamy temple |
தசரா சமயத்தில் ஊர் முழுவதும் திருவிழா கோலம்தான். தினசரி கலைவிழாக்கள் ஊர்வலங்கள் என்று அமர்க்களமாக இருக்கும்.
 |
| main entrance of palace at the time of dasara |
 |
| Mysore palace at the time of Dasara. |
 |
அரண்மனையி உள்ளே உள்ள கோவில்
|
அடுத்ததாக புகழ்பெற்ற மைசூர் zoo .white tiger என்கிற வெள்ளை நிற புலி இந்தியவில் சில உயிரியல் பூங்காக்களில்தான் பாதுகாக்கப்படுகிறது.அந்த சிறப்பு மைசூருக்கும் உண்டு.
இதை தவிர மேலும் பல காட்டு விலங்குகள், பறவைகள்,யானை காண்டா மிருகம் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம்..
மைசூர் நகரை சுற்றிபார்த்துவிட்டு அடுத்து செல்லவேண்டியது அருகில் இருக்கும் சாமுண்டி ஹில்ஸ். இங்கு சிறு மலைமேல் உள்ள சாமுண்டி தேவி கோவிலை பார்த்துவிட்டு கீழே இறங்கி வரும் போது புகழ் பெற்ற மிகப்பெரிய நந்தியை காணலாம்.
 |
| சாமுண்டி தேவி கோவில் |
இந்த நந்தி இந்தியாவிலேயே 3 வது பெரிய நந்தியாகும்.
முந்திய பதிவுகளில் நான் எழுதிய கோவில்கள் மற்றும் மைசூர் அகியவற்றை 2 அல்லது 3 நாட்களில் சென்று ரசிக்கலாம்.வாரக்கடைசியில் உல்லாசத்திற்க்கும் தெய்வ தரிசனத்துக்கும் ஏற்ற இடம் மைசூர்.
இத்தனை பதிவுகளில் என்னுடன் சேர்ந்து மைசூரை சுற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி..
----------------------------------------------நிறைவு---------------------------------------------------
33 கருத்துகள்:
மைசூர்ப்பாக்
>>இத்தனை பதிவுகளில் என்னுடன் சேர்ந்து மைசூரை சுற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி..
அண்ணிக்கு லொள்ளு ஜாஸ்தி தான்.. இவங்க சுத்தி பார்த்ததும் இல்லாம நம்மையும் கடுப்படிக்கறாங்களே? அவ்வ்வ்வ்வ்
அருமை சகோ
பைசா செலவில்லாமல் சுற்றி காண்பித்து விட்டீர்கள்
நன்றி ,படங்கள் அருமை ,நேரில் பார்த்தது போல் உள்ளது .
அருமையான பதிவு .எத்தனை தரம் பார்த்தாலும் mysore சலிக்கவே சலிக்காது .ரங்கன்னதிட்டு sanctuary போனீங்களா ரமா .
எங்களை மீண்டும் மைசூர் அழைத்து சென்றதுக்கு நன்றி .
சிறு வயதில் மைசூர் சென்றபிறகு இப்போது தான் நன்றாக சுற்றிப் பார்த்தேன் - உங்கள் பகிர்வு மூலம்.
மிக்க நன்றி சகோ... சீக்கிரமாகவே முடிந்துவிட்டது என்ற ஆதங்கமும் மனதின் ஒரு ஓரத்தில் :)
ஆமாம் மைசூர்பாக்தான்.
வாங்க M.R கருத்துக்கு நன்றி..
வாங்க angelin .சில இடங்களை எவ்வளவு முறை பார்த்தாலும் அலுப்பதில்லை.மைசூரும் அப்படிபட்ட இடம்தான்.
ரங்கன் திட்டு எப்போதோ ஒரு முறை போயிருக்கிறேன். மறுபடியும் போக வேண்டும்..
வாங்க வெங்கட். நிறைய பதிவு தொடர்ந்தால் சுவாரசியம் போய்விடும் என்பதால் முடித்துக்கொண்டேன். கருத்துக்கு நன்றி...
ஹை நான் யூகேஜ் படிச்ச மைசூர். அந்த நந்திகிட்ட நின்னு ஸ்கூல் யூனிபமில் போட்டோ இருக்கு குட்டைப்பாவாடையும் உச்சிகுடுமியும்.இப்ப பார்த்தாலும் சிரிப்பு வரும். நல்லபகிர்வு..
வாங்க மலிக்கா, அந்த போட்டோவ நாங்களும் பார்க்கிறோம் பதிவுல போடுங்க....
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
அன்பு சகோதரி followers widget இணைக்கவில்லையா , உங்கள் படைப்பு அருமை இது போல பயண கட்டுரை எழுதும் பிளாக் அட்ரெஸ் இருந்தால் கொடுங்களேன்,.
மைசூர் பார்த்தாச்சு உங்க புண்ணியத்துல ..அடுத்த ஊரு....?
நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..
karthi, followers widget இணைக்க முடியவில்லை,என் பதிவில் அதற்கான option வரவில்லை.
உஙகள் கருத்துக்கு நன்றி..
பதிவு உலகில் நிறைய பேர்கள் பயண கட்டுரைகள் எழுதுகிறார்கள். தமிழ் மணத்திற்க்கு சென்று பாருங்கள் கார்த்தி.
வாங்க ஆதி.அடுத்தது பற்றி இனிதான் யோசிக்க வேண்டும்.
அருமையான தகவல்கள் அத்தை... படங்கள் சூப்பர்... :)
நன்றி அஸ்வின்.. நீ எப்ப எழுத ஆரம்பிக்கப்போகிறாய்???
மைசூரில் நல்லதொரு ஆன்மீக பயணம்
“ பிருந்தாவன் கார்டன்” ல தானே நமது பழைய கதாநாயகர்களும் ,கதாநாயகிகளும் டூயட் பாடுவார்கள்.....
வாங்க மாய உலகம்,கருத்துக்கு நன்றி.
ஆமாம் பிருந்தாவன் கார்டன் நிறைய சினிமாவில் நடித்திருக்கிறது...
உங்களோட ஒவ்வொரு பதிவும்..ஒவ்வொருவரின் பதிவு செய்யப் படவேண்டியவை ஹார்ட் டிஸ்கிலும்.. நிச்சயம் பயன்படும். நன்றி இந்த பதிவிற்கு..
நன்றி குணா உங்கள் அன்பான கருத்துக்கு..
ரங்கப்பட்டிணம் வழியா பெருமாளை சேவிச்சுட்டு திப்புசூல்தான் விஷயங்களையும் அப்பிடியே காதுல போட்டுண்டு மைசூர் அரண்மணையோட அழகான காட்சிகளை எல்லாம் பாத்துட்டு சாமுண்டி தேவியை தரிசனம் பண்ணிட்டு நந்திதேவருக்கும் ஒரு நமஸ்காரம் பண்ணியாச்சு!!...:))
ஓ எல்லாம் ஆச்சா தக்குடு? ரொம்ப சந்தோஷம்..
மழலைப்பிராயத்தில் என்னவென்றே முழுதும் அறியாமல் சுற்றிய இடங்களை இன்று என் கண் முன்னே விரிகின்றது. இம்முறை விடுமுறைக்கு வரும்போது எப்படியாவது மைசூர்க்கு ஒரு உலா போக வேண்டும் எனும் உந்துதலை தருகின்றது.
வாங்க மூர்த்தி.. என் பதிவிர்க்கு வரவேற்கிறேன்.
போய் பாருங்க , மைசூர் நன்றாக இருக்கும்...
வணக்கம் ரமா,
மாற்றிவிட்டேன் இப்போது பார்க்கலாம். கமெண்ட் பாக்ஸ் காணாமல் போய் விட்டது. இப்போது கிடைத்து விட்டது.என்னவென்றே புரியாமல் ஏதேதோ கிளிக் செய்து வைத்து வகையாக மாட்டிகொண்டு விட்டேன். வெளியில் வர இத்தனை நாட்கள் ஆகி விட்டன.
வாங்க தா. தலைவி, மாற்றிவிட்டீங்களா? இப்ப வந்து பார்க்கிறேன் உங்கள் பதிவை.நன்றி..
படங்கள் அருமை. பதிவும் சூப்பர். மைசூர் போகும்போதெல்லாம் அந்த நந்தி கோவில் கிட்ட உக்காந்துதான் எப்பவுமே சாப்பிடுவோம்.
வாங்க கோபி. கருத்துக்கு நன்றி
உங்கள் பயணக் கட்டுரைகள் பற்றி இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_09.html
கருத்துரையிடுக