
இராஜராஜேஸ்வரி மேடம் நண்பர்கள் பற்றி எழுதும்படி கேட்டிருந்தார்.நன்றி மேடம்..
நான் சாதாரணமாக நன்றாக கலகல என்று பேசி பழகும் பழக்கம் உள்ளவள். அதனால் எனக்கு தோழிகள் நிறைய பேர் உண்டு. ஆனால் ஆப்தமான நட்பு என்றால் சில பேர்கள் தான் அவர்கள்:
என்னுடைய முதல் தோழி சாந்தி.அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடு. இருவரும் வேறு வேறு பள்ளியில் படித்தோம்.பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் உடனே நாங்கள் விளையாட ஆரம்பித்தால் அவ்வளவுதான் நேரம் போவதே தெரியாது,பக்கத்து வீடு... பெரியவர்களும் நண்பர்கள் என்பதால் நாங்கள் விளையாடுவதற்க்கு தடையே கிடையாது. அவளின் தம்பியும் என் தம்பியும் நண்பர்கள் அதனால் நாங்கள் நால்வரும் மற்றும் தெருவில் இருந்த மற்ற சிறுவர் சிறுமியருடன் விளையாட ஆரம்பித்தால் தெருவே கல கலத்து போய்விடும்
5 வயதில் ஆரம்பித்த அவள் நட்பு 13 வயதுவரை தொடர்ந்தது. பிறகு அவர்கள் வீடு மாற்றி சென்றுவிட்டார்கள்.

தி.நகர்,பர்க்கிட் ரோடு சாரதா வித்யாலயா பள்ளியில் படிக்கும் போது 6ம் வகுப்பில் எனக்கு அறிமுகம் ஆனவள் ரோஸலீன் என்பவள்..10ம் வகுப்பு வரையில் நாங்கள் இருவரும் இணை பிரியாமல் இருந்தோம். நான் சாரணியர் இயக்கத்தில் சேர்ந்து பேட்ரோல் லீடராக இருந்தேன், அவள் மிகவும் தைரியமானவள் அவளை வற்புறுத்தி மாணவியர் தலைவி ஆக்கிவிட்டோம்.நானும் லீடர் அவளும் மாணவியர் தலைவி என்பதால் ஒன்றாகவே இருப்போம்.
பள்ளியில் அப்பொழுதெல்லாம் வாரத்தில் 2 நாட்கள் கொடியேற்றம் இருக்கும்.காலையில் தலைமைஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் யாராவது கொடி ஏற்றுவார்கள்.எனக்கு சாயந்திரம் வேளைகளில் கொடியை மடிக்கும் பணி ரொம்ப் பிடிக்கும். நமது தேசிய கீதம் பாடிமுடிக்கப்பட்டவுடன் மாணவர் தலைவி கொடியிறக்கம் செய்துவிட்டு இன்னுமொரு மாணவி எதிர்ப்பக்கம் பிடித்துக்கொள்ள அந்த கொடியை மடிக்க வேண்டும். கட்டாயம் அந்த இன்னொரு மாணவி நானாகதான் இருப்பேன். எனக்கு பிடிக்கும் என்பதனால் வேறு யார் கேட்டாலும் விடாமல் என்னை மட்டுமே அழைத்து செல்வாள்..அப்படி பட்ட நட்பு..
10வது முடித்த பிறகு +1 க்கு நாங்கள் இருவரும் வேறு வேறு பள்ளிகளுக்கு சென்றபிறகு அவளை பார்க்க முடியவில்லை...

+1 வந்த பிறகு நிறைய தோழிகள் கிடைத்தார்கள்..யாமினி, கீதா சுமதி, மாலதி, ஜெயலஷ்மி இன்னும் பலர் ஆனால் நெருக்கம் வருவதற்க்குள் பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி படிப்பு தொடங்கிவிட்டது.
கல்லூரி காலங்களில் நாங்கள் 10 பேர்கள் ஒரு கூட்டமாக இருப்போம் அதில் நான்,சுதா,கலா,சுவர்ணமாலா ஆகிய நால்வரும் ரொம்ப நெருக்கம். யூனிவர்சிடிக்கு போவது, நூலகத்துக்கு போவது,என்று ஒன்றாகவே இருப்போம். இதில் சுதாவும் நானும் பேசிக்கொண்டே இருப்போம். வகுப்பில் குறிப்பு எடுக்கும் போதும் கைகுட்டையை வாயருகில் மூடினால் போல் வைத்துக்கொண்டு ஆசிரியருக்கு தெரியாமல் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டோம். ஆனால் அதே சமயத்தில் சரியாக குறிப்பும் எடுத்துக்கொண்டு விடுவோம். எங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் என் வகுப்புத் தோழி கீதா என்பவள் நாங்க பேசுவதை கேட்டுக்கொண்டு குறிப்பு எடுக்க முடியாமால் விட்டுவிட்டு பிறகு எங்களிடமிருந்து பார்த்து எழுத்திக்கொள்வாள். அவள் எப்பொழுதும் எங்களிடம் கேட்கும் கேள்வி “ அதெப்படி நீங்க மட்டும் பேசிண்டே நோட்ஸ் ம் எழுதரீங்க” என்பதுதான். அதற்க்கு பதில் எங்களிடமிருந்து சிரிப்புதான் வரும்..

பிறகு எனக்கு வேலை கிடைத்த பிறகு அலுவலகத்தில் எனக்கு கிடைத்த தோழி பத்மஜா. இவளை பற்றி சொல்லவேண்டுமானால் திருவள்ளுவரை தான் மேற்கோள் காட்டவேண்டும.
முகம்நக நட்பது நட்பன்று: நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதம் நட்பு.
நட்பு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது அவளுடைய நட்பு. எனது சுகம் ,துக்கம், சந்தோஷம், கஷ்டம் எல்லாவற்றிலும் இருந்தாள்.இன்னும் இருக்கிறாள், இனியும் இருப்பாள்..
ஆம் அடுத்த வருடம் எங்கள் நட்பு வெள்ளி விழா காண்கிறது.
அன்பு தோழி பத்மஜா இது உனக்காக.....

இப்பொழுது பதிவுலகம் எனப்படுவது எனக்கு நட்பு உலகமாக தெரிகிறது.
முன் பின் அறிமுகம் இல்லதாவர்கள் கூட எழுத்தின் மூலம் அறிமுகமாகி சிறந்த நண்பர்களாகி, மூத்தவர்,இளையவர் என்று பாரபட்சம் பார்க்காமல்,கர்வம் ஏதுமில்லாமல் பழகும் தமிழ் நட்பு....
இந்த நட்பு இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்....
-------------------------------------------------------------------------------------------------------------
25 கருத்துகள்:
அழகான படங்களோடு அருமையான பதிவு ரமா .
//இப்பொழுது பதிவுலகம் எனப்படுவது எனக்கு நட்பு உலகமாக தெரிகிறது.//
அதே அதே அதே ரிபீட் !!
நட்பைப்பற்றி அழகான தகவல்களை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள். படங்களும் அருமையாகவே உள்ளன.
//இப்பொழுது பதிவுலகம் எனப்படுவது எனக்கு நட்பு உலகமாக தெரிகிறது.
முன் பின் அறிமுகம் இல்லதாவர்கள் கூட எழுத்தின் மூலம் அறிமுகமாகி சிறந்த நண்பர்களாகி, மூத்தவர்,இளையவர் என்று பாரபட்சம் பார்க்காமல்,கர்வம் ஏதுமில்லாமல் பழகும் தமிழ் நட்பு.... //
ஆம். தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
முன்பின் அறிமுகமில்லாமல் இன்று நமக்கு எத்தனை நண்பர்கள். இது இப்படியே என்றும் தொடர வாழ்த்துக்கள். அன்புடன் vgk
நல்லதொரு பதிவு, அனைவரும் படிக்க வேண்டிய பதிவு, படங்கள் அருமை. அதைவிட உமது எழுத்து ஆளுமை. தொடர்கிறேன் சகோதரி............
உண்மையான கருத்து ராம்வி
இப்பொழுது பதிவுலகம் எனப்படுவது எனக்கு நட்பு உலகமாக தெரிகிறது.
முன் பின் அறிமுகம் இல்லதாவர்கள் கூட எழுத்தின் மூலம் அறிமுகமாகி சிறந்த நண்பர்களாகி, மூத்தவர்,இளையவர் என்று பாரபட்சம் பார்க்காமல்,கர்வம் ஏதுமில்லாமல் பழகும் தமிழ் நட்பு....
எனக்கும் இது பிடித்துள்ளது .
ப்ளாகர் நட்பு அனைவரும் போற்றும் நட்பு
ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் பொழுது அவர்களையே பார்ப்பது போல் மனதில் ஒரு சந்தோசம் .
ப்ளாக்கர் எனும் வீட்டினுள் நாமெல்லாம் ஒரு குடும்பம் .நன்றி
படங்களும் அதிலுள்ள வரிகளும் அருமை
angelin வாங்க,கருத்துக்கு நன்றி..
வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா, உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி..
வாங்க கார்த்தி, கருத்துக்கு நன்றி.
//ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் பொழுது அவர்களையே பார்ப்பது போல் மனதில் ஒரு சந்தோசம் //
ஆம் ரமேஷ், நீங்க சொல்லுவது உண்மை.கருத்துக்கு நன்றி..
இது இப்படியே என்றும் தொடர
என் வாழ்த்துக்கள்...........
வாங்க மகாராஜன், கருத்துக்கு நன்றி..
உங்களது நட்பு பல வெள்ளிவிழா கொண்டாட வாழ்த்துக்கள்...
//இப்பொழுது பதிவுலகம் எனப்படுவது எனக்கு நட்பு உலகமாக தெரிகிறது.//
நட்பு உலகம் அதிகமாவதால் தான் பதிவுலகமே பிடித்திருக்கிறது.....
இங்கே திருக்குறளை சுட்டிக்காமித்தமைக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
வாங்க மாய உலகம், கருத்துக்கு நன்றி..
வாங்க ஐயா, வழ்த்துக்களுக்கு நன்றி...
இந்த நட்பு இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்....
படங்களும் பகிர்வும் மனம் கொள்ளைகொள்ளச் செய்துவிட்டது தோழி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
வாங்க இராஜராஜேஸ்வரி மேடம். கருத்துக்கு நன்றி.
>>>>நான் சாதாரணமாக நன்றாக கலகல என்று பேசி பழகும் பழக்கம் உள்ளவள்
அண்ணி சொல்றாங்க ”கலகல” டைப்னு
அண்ணன் சொல்றாரு லக லக லக டைப்னு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாங்க செந்தில்குமார். கருத்துக்கு நன்றி.(ஹா..ஹா.)
தொடர்பதிவுக்கு தொந்திரவு செய்தால் பரவாயில்லை என்று சொன்னீங்களே, இப்பொழுது மூன்று முடிச்சு தொடர்பதிவுக்கு உங்களை அழைத்திருக்கிறேன்,நேரம் கிடைக்கும் போது தொடரவும்.
மிக அருமையான பதிவு ரமா ! பதிவுலகின் தொடர்பால் உங்களை போல் நல்ல தோழிகளை பெற்றுள்ளேன். இது தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். ஏன் என்னையெல்லாம் தொந்தரவு செய்ய மாட்டீர்களா ?
வாங்க தா.தலைவி. நன்றி.
தொந்தரவு செய்யக்கூடாது என்பதெல்லாம் இல்லை, அடுத்த பதிவில் உங்களை அழைக்கலாம் என்றிருந்தேன்.
உணர்வுப்பூர்வமான நட்பின் பதிவு... அருமை நட்பே...! வாழ்த்துக்கள்...
வாங்க சித்திரன், என் பதிவிர்க்கு வரவேற்கிறேன். கருத்துக்கு நன்றி.
நட்பை பற்றியும் தோழிகளை பற்றியும் அழகா சொல்லியிருக்கீங்க.
உங்கள் நட்பு வட்டம் தொடர வாழ்த்துகள்.
கருத்துரையிடுக