ஞாயிறு, ஜூலை 03, 2011

மைசூர் சுற்றுலா.....1 (குழந்தை வரம் அருளும் நவநீத கிருஷ்ணர்)

நாங்கள் பெங்களுரில் இருப்பதால், ஊரிலிருந்து வரும் எங்கள் உறவினர்களை நாங்கள் முதலில் அழைத்து செல்லும் இடம் மைசூர் தான்.

மைசூர் என்றாலும் நேரடியாக மைசூர் சென்று அரண்மனை மற்றும் பிற இடங்களை சுற்றி பார்ப்பது மட்டுமல்லாது, பெங்களூரிலிருந்து கிளம்பி வழியில் உள்ள சில புராதனமான கோவில்களுக்கும் செல்லுவோம்..

அப்படி நாங்கள் வழக்கமாக செல்லும் முதல் கோவில்..

அப்ரமேய ராமசாமி கோவில்..

இது புரந்தரதாசரால் பாடல் பெற்ற கோவில்
 ( “ஜகதோதாரண”வில் அப்ரமேயர் பற்றி வரும்.)

இது பெங்களுர்-மைசூர் ஸ்டேட் ஹைவேயில் சென்னபட்டனா என்ற ஊருக்குஅருகில் உள்ள தொட்ட மல்லூர் என்ற ஊரில் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய சன்னதி அப்ரமேயர் எனப்படும் ராமசாமி சன்னதி. தாயார் அரவிந்தவல்லி தாயார்.

முதலில் தாயார் சன்னதி..

Sri Navaneetha Krishnar Temple - Dodda mallur
அரவிந்தவல்லி தாயார் தனி சன்னதியில் சதுர் புஜங்களுடன்,இரண்டு கைகளில் தாமரை புஷ்பங்களுடனும் தாமரை மலர் மீது அமர்ந்து மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.அவரை சேவித்துவிட்டு 
அப்ரமேயர் எனப்படும் ராமசாமி சன்னதிக்கு செல்வோம்..Sri Navaneetha Krishnar Temple - Dodda mallur

ராமர் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.அவருடையது சாளக்கிராம மூர்த்தி.பெருமாளும் சதுர்புஜங்களுடன் காட்சி அளிக்கிறார்.மேல் கைகளில் சங்கு,சக்கரத்துடனும், மூன்றாவது கரத்தில் கதையுடனும்,நான்காவது கரத்தில்அபய முத்திரையுடனும் அருள் பாவிக்கிறார்...

இந்த கோவிலில் முக்கிய சன்னதி அப்ரமேயரக இருந்த போதிலும், பக்தர்கள் அதிகமாக வருவது இங்குள்ள நவனீத கிருஷ்ணன் சன்னதிக்குதான்..அதற்கு ஒரு சிறப்பு காரணம் உள்ளது.Sri Navaneetha Krishnar - Dodda mallur

சாளக்கிராம மூர்த்தியாக தவழ்ந்த ரூபத்தில் கையில் வெண்ணை உருண்டையுடன் காட்சியளிக்கும் அழகான குழந்தையான நவனீத க்ருஷ்ணனிடம் குழ்ந்தை இல்லாதவர்கள் சங்கல்பம் செய்து கொண்டால் குழந்தை வரம் அருளுகிறார் குட்டி கண்ணன்...குழந்தை பிறந்ததும் வந்து இங்கு கடைகளில் விற்கப்படும் சிறிய தொட்டிலை வாங்கி க்ருஷ்ணன் சன்னிதியில் கட்டிவிட்டு செல்கிறார்கள்...

இந்த சன்னதி வேத வியாசரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லுகிறார்கள்..

இங்கு கோவில் பட்டர்கள் சன்னதியில் அழகாக தரிசனம் சைவிப்பார்கள்.. குழந்தை கிருஷ்ணரின் கொலுசு,கையில் வெண்ணை, இடுப்பில் அரைஞாண் மிகவும் அழகாக சாளகிராமதிலேயே காணப்படுவது மிகவும் சிறப்பு.

சுமார் 150 வருடங்களுக்கு முன், அச்சமயம் மைசூரின் அரசர் தம் குடும்பத்தினருடன் அப்ரமேயரை தரிசிக்க வந்தபொழுது இந்த சாளக்கிராம கிருஷ்ணரின் அழகில் மயங்கி அவரை தன்னுடைய அரண்மனைக்கு எடுத்துச்சென்றுவிட்டாராம்.அவருடைய அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காமல் எடுத்துச்சென்றிருக்கிறார்.

அன்றிரவே பெருமாள் ராஜாவின் கனவில் வந்து தன்னை திருப்பி கோவிலிலேயே வைத்திவிட வேண்டும் என்றும் இல்லவிட்டால் அரண்மணைக்கு ஆபத்து நேரும் என்று சொல்லியும் ராஜா கேட்கவில்லை..
மறு நாளே அரண்மனையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு பொருள் நஷ்டம் எற்பட்டது.

அப்பொழுதுதான் ராஜா கிருஷ்ணனுடைய மகிமையை உணர்ந்து கிருஷ்ணவிக்ரகத்தை கோவிலுக்கு திருப்பி அனுப்பியதுடன் கோவில் திருபணிகளுக்கும் பொருளுதவி செய்தார் என ஒரு கதையும் சொல்லப்படுகிறது.........

அடுத்த பதிவில் திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் மேலக்கோட்டை...



8 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>நாங்கள் பெங்களுரில் இருப்பதால்,

பியூட்டி பெண்களூர்?!!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>குழந்தை கிருஷ்ணரின் கொலுசு,கையில் வெண்ணை, இடுப்பில் அரைஞாண் மிகவும் அழகாக சாளகிராமதிலேயே காணப்படுவது மிகவும் சிறப்பு.

அண்ணி, இந்த லைன் புரியல.. சாளகிராமதிலேயே அப்டின்னா என்ன?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீங்க போன ஜென்மத்துல டூரிஸ்ட் கைடா? ஹா ஹா செம விளக்கம்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

ஆமாம் செந்தில்குமார் பெண்களூர் தான்..........

விளக்கம் எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் அமைய வேண்டுமே.அதனால் எதோ என்னால் முடிந்த அளவு சுவரசியமாக கொடுக்க முயற்சிசெய்தேன்.கருத்துக்கு நன்றி..

சாளகிராமம் பற்றி தெரியுமல்லவா?(இல்லாவிட்டால் அதற்க்கும் ஒரு பதிவு போடலாமா?)
அதில் மற்ற கற்களை மாதிரி சுலபமாக செதுக்க முடியாது.அதனால் கிருஷ்ண விக்ரஹம் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளேன்..

R. Gopi சொன்னது…

நாங்களும் மைசூர் போகும்போதெல்லாம் இந்தக் கோவிலைப் பார்த்துவிட்டுத்தான் போவோம்!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

ஆம் கோபி, மிகவும் அழகான பெருமாள்.அவரை பார்க்காமல் தாண்டி போவதர்க்கு மனமே வராது.

மாணவன் சொன்னது…

அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//மாணவன் சொன்னது…
அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!
25 ஆகஸ்ட், 2011 8:00 pm //

பதிவுக்கு நல்வரவு மாணவன்.

என்னை அறிமுகபடுத்திய திரு வைகை அவர்களுக்கும்,தகவல் தந்த உங்களுக்கு என் நன்றி.