”அம்மா.”.!!...
பெரியதாக சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்...
எதிரில் என் சின்ன பெண் இடுப்பில் கைவைத்தபடி என்னை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்..
“என்ன நிந்துண்டே கனவா???”
“அப்பா கூப்பிடறா பாரு” என்றாள்.
“எதுக்கு டீ கூப்பிடறா”
“என்ன மா நீ அப்பா சாப்பிட உட்கார்ந்துண்டு இருக்கா நீ என்னடன்னா தட்டுல சாதத்தை போட்டுட்டு இங்க வந்து கனவு காண்டுண்டு இருக்க?? போ போய் மீதிய கவனி”..
அதற்குள் உள்ளே வந்த என் பெரிய பெண்
“அம்மா நானும் உன்னை கூப்பிட்டு பார்த்தேன், நீ என்னன்னு கேட்கலே அதனால , அப்பாக்கு நானே குழம்பும் காயும் எடுத்துண்டு போய்ட்டேன்.”
என்றவள்
தங்கையை பார்த்து, “அப்பா பச்சடி கேட்கிறா பாரு எடுத்துண்டு போ”
என்றாள்.
பிறகு என்னிடம் திரும்பி,
“ ஏம்மா!! உனக்கு என்ன ஆச்சு, இரண்டு மூன்று நாளாகவே ஒரு மாதிரி இருக்க எதையோ யோசிச்சுண்டே இருக்க”??? என்றாள்.
என்னிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றவுடன் மறுபடியும்
“என்னம்மா ஆச்சு” என்றாள்.
அதற்குள் திரும்பி வந்த என் சின்ன பெண்ணும் “என்ன ஆச்சு”என்று கேட்க
பதில் சொல்லிதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட நான்
கொஞ்சம் அசட்டு சிரிப்புடன்,
“ஒண்ணும் இல்லடி பசங்களா புதுசா Blog ஆரம்பித்து எழுதுகிறேன் இல்லையா அதுதான் வித்யாசமா என்ன எழுதுவதுன்னு யோசிசுண்டு இருந்தேன்”... எனறவுடன் இரண்டு பேரும் ஆரம்பித்துவிட்டார்கள்..
பெரியவள்: “என்னம்மா நீ வேலையெல்லாம் இல்லாம ஃப்ரியா இருக்கச்சே யோசிக்க கூடாதா? அப்பாவ பத்திதான் தெரியுமே சரியா கவனிக்கலைன்னா கோவம் வந்துடுமே” என்றாள்..
சின்னவள் (கொஞ்சம் நக்கல் party): “ நன்னா யோசிச்ச போ ...ஒன்ணு பண்ணு தினமும் கார்த்தால ‘ பார்க்’ க்கு walking போவ பாரு அப்ப யோசிச்சுண்டே நட உனக்கு நடக்கற சிரமம் தெரியாது. அதோட யோசிசுண்டே உனக்கே தெரியாம இன்னும் ஒரு 3 அ 4 சுத்து ஜாஸ்தியா சுத்தினினாக்க உடம்பாவது சீக்கிரம் இளைக்கும்” என்று தாக்கினாள்.
நான் பதில் பேச தோன்றாமல் நிற்க என் நிலமையை பார்த்து என் பெரிய பெண்(எப்போதும் அவள்தான் ஆபத்பாந்தகி) சின்னவளிடம்
“போடீ வாயாடி, அம்மா பாவம் இப்பொழுதுதான் புதுச எழுத ஆரம்பிச்சு இருக்கா அப்படிதான் இருக்கும்” என்றாள்..
ஆனாலும் சின்னவள் விடாமல், “ அம்மா வித்யாசமா எழுதணும்னு யோசிக்க எல்லாம் வேண்டாம். இப்ப நீ இப்படி நிந்துண்டே யோசிச்சத பத்தி எழுது போதும்.எல்லோரும் சிரிப்பார்கள்” என்றாள் நக்கலுடன்.
நான் பே!!!! என்று விழித்த நேரத்தில் “அங்க என்ன பேச்சு?? மோர் எடுத்துண்டு வா” என்ற என் கணவரின் குரலை கேட்டவுடன்-----
எல்லோரும்; “escapeeeeeeeee”
-------------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு: பதிவுக்கு தலைப்பு என் மக்கள் என்று வைத்து விட்டேன் அனால் அது பதிவில் எங்கும் வரவில்லையே?? என்ன செய்வது?? ம்ம்ம்???அதனால்
இப்படி கஷ்டபட்டு யோசித்து, பதிவு நன்றாக வந்து, பதிவுலக மக்களிடமிருந்து நல்ல comments வர வேண்டுமென்றால் என் மக்கள் இடமிருந்து இப்படி பட்ட நக்கல்களையெல்லாம் பொருத்துகொண்டுதான் ஆக வேண்டும்...
ஆ தலைப்பு வந்து விட்டது....
8 கருத்துகள்:
தலைப்பு வந்ததற்குப் பாராட்டுக்கள்.
நன்றி இராஜராஜேஸ்வரி..
புதுசு கண்ணா புதுசு....வாருங்கள் ....
கோவை நேரம், என் பதிவிர்க்கு வரவேர்க்கிறேன்.
நன்றி..
சின்ன பெண்ணின் வாக்கிங் கிண்டல் சூப்பரா இருந்தது.
வாங்க ஆதி, அவ எப்பொதுமே இப்படிதான், டைமிங்கா ஜோக்கடிப்பா!!!
romba naal kazhithu varugiren atharkul neengal niraya pathivugal pootu vitergal. nandraga irukindrana. todarungal. ennamo theriyavillai en blogil tamil fonts option varaveillai. ezhutha mudiyamal tavikiren.
வாங்க தா.தலைவி. NHM WRITER download செய்து கொள்ளவும்.இதில் தமிழ் டைப் செய்வது சுலபம்..
கருத்துரையிடுக