அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
சில சொந்த வேலைகளின் காரணமாகவும்,மங்களூர்,உடுப்பி சுற்றுலா சென்று வந்ததாலும் பதிவு பக்கம் வர முடியவில்லை.ரொம்ப நாட்களாக உடுப்பி கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்று ஆவலாக காத்திருந்தது, நிறைவேறியது.
--------------------------------------------------------------------------------------------------------------------
மங்களூர்....
சென்ற மாத கடைசியில்,ஒரு வியாழக்கிழமை இரவு மங்களூருக்கு கிளம்பினோம்.மங்களூர் கர்நாடக மாநிலத்தின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் சிறிய நகரம்.பெங்களூரிலிருந்து சுமார் 330 கி.மீ.தொலைவில் உள்ளது. பெங்களூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை -48 ல் பயணம் மேற்கொள் வேண்டும்.பெங்களூரிலிருந்து வெளிவந்து தேசிய நேடுஞ்சாலையில் திரும்பியவுடன்,சுமார் 100 கி.மீ வரை சாலை மிகப்பிரமாதமாக அமைத்திருக்கிறார்கள்.4 வழி பாதை ,நடுவில் மிளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு விமானப்பாதை மாதிரியான அமைப்பில் இருக்கிறது.அதன் பிறகு ஹாசன்,மற்றும் பேலூர் வரையிலும் பாதை நன்றாக இருக்கிறது.ஆங்காங்கே சாலையை விரிவு படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.பேலுரிலிருந்து சிறிது தூரத்திலேயே மலைவழி பாதை தொடங்கி விடுகிறது. மலைப்பாதை மிகச் சுமாராக இருக்கிறது,அங்காங்கே பள்ளம்.... சுமார் 3 மணி நேரம் மலை பாதையில் பயணப்பட்டு விடியற்காலையில் மங்களூரை அடந்தோம்.
(இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டதால்,வழியில் வரும் இடங்களை சரியாக காண முடியவில்லை. திரும்பும் பொழுது பகலில் வந்தோம்,அப்பொழுது இடங்களையும் சாலைகளையும் நன்றாக பார்க்க முடிந்தது.)
முதலில் காலை உணவை முடித்துக்கொண்டு மங்களூருக்கு அருகில் பிலிகுலா நிசார்க தாமா (pilikula Nisarga Dhama) என்கிற மிருககாட்சி பூங்காவிற்கு சென்றோம்.
துளூ மொழியில் பிலி என்றால் புலி என்றும்,குலா என்றால் குட்டை என்று அர்த்தமாம். அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு தண்ணீர் குடிக்க காட்டு பகுதியிலிருந்து புலிகள் வந்து சென்றதால் அந்த இடத்திற்கு பிலிகுலா என்றுபெயர் வந்தது. தற்போது அந்த இடத்தில் தேசிய பூங்கா அமைத்துள்ளார்கள். சிறிய குன்று பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது இந்தப் பூங்கா.
பூங்காவில் எடுத்த சில படங்கள்...
பிறகு நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, TAJ GATE WAY HOTEL லில் check in செய்து விட்டு,ஹோட்டல் நிர்வாகத்தினால் மங்களூர் நகரை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 1/2 நாள் சுற்றுலாவிற்கு தயாரானோம்.
மங்களூரில் நாங்கள் தங்கியிருந்த Taj Gate Way Hotel.
மங்களூர் சுற்றுப்பயணம் தொடரும்.....
------------------------------------------------------------------------------------------------------------------

31 கருத்துகள்:
நாங்க படிக்கும்போது இருமுறை மங்களூர் சென்றிருக்கிறோம் .
அழகான இடம் அல்லவா .இப்ப படங்கள் பார்க்கும்போது changes நிறைய தெரிகிறது .தொடருங்கள் .தொடர்கிறேன்
2010 டிசெம்பர் 28ம் தேதியில் எனக்கு உடுப்பி கிருஷ்ண தரிசனம் கிடைத்தது.
புகப்படங்கள் சூப்பர்.அதுக்குள்ளயும் தொடரும் போட்டுவிட்டீங்களே!மேலும் உடுப்பி ஹோட்டல்னுதான் இதுவரை கேள்விப்பட்டிருக்கேன்.உடுப்பி என்பது ஊரின் பெயர் என்று இப்பதான் தெரிந்துகொண்டேன்.தொடருகிறேன்.
அசத்தல் படங்கள் அருமையான விளக்கங்கள்
நாங்களும் உங்களுடன் பயணிப்பது போலிருந்தது
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
அழகான தெளிவான படங்கள் ,மற்றும் விளக்கங்கள் அருமை சகோதரி
நேரில் பார்ப்பது போல் உள்ளது
சுவாரசியமாக ஆரம்பித்து இருக்கிறது பயணம்.... புகைப்படங்களும் அருமை....
தொடருங்கள்....
அருமையான பதிவு.
அற்புதமான படங்கள்.
தொடருங்கள்.
வாழ்த்துகள்.
அருமையான படங்களும் விளக்கங்களும்..
காசேயில்லாம நாங்களும் கூட வந்துட்டோமுல்ல. எப்புடி..ஹா ஹா
வாழ்த்துகள்..
மங்களூரில் நிறைய இடங்கள் சுற்றிப்பார்த்தோம் நாங்களும்..
கண்ணுக்குள் நிறைந்து மனதை மலரவைத்த அருமையான படங்களுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
மங்களூர் சுற்றுலாவுக்கு எங்களையும் கூட்டிபோவதுபோல
இருக்குது சகோதரி..
அழகான அனுபவப் பகிர்வுகளுக்கு நன்றிகள் பல.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பிலி என்றால் புலி, குலா என்றால் குளம். இதில் இருந்து என்ன தெரிகிறது. துளுவும் தமிழின் ஒரு குழந்தை என்பது தான். எப்படி நம்ம ஆராய்ச்சி ?! நீங்க இன்னும் நிறையா எழுதுங்க, படிக்க காத்திருக்கிறோம். அப்புறம் புலி குகைக்கு போனீங்களா?
மங்களூர்ப் பயணக் கட்டுரைக்கு நன்றி படங்கள் சற்றே மங்கலாக இருக்கின்றனவோ....! எனினும் நாங்களும் கூட வந்த உற்சாகம்.
படங்கள் தெளிவு.
//angelin கூறியது...//
நன்றி angelin தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//Madhavan Srinivasagopalan கூறியது...//
நன்றி மாதவன்,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//thirumathi bs sridhar கூறியது//
ஆம் ஆச்சி உடுப்பி கிருஷ்ணர் கோவில் மிகவும் பிரசிதி பெற்றது.
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கு.
//Ramani கூறியது...//
நன்றி ரமணி சார், தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
// M.R கூறியது...//
நன்றி ரமேஷ் வருகைக்கும் தங்களின் கருத்துக்கும்.
// வெங்கட் நாகராஜ் கூறியது.//
நன்றி வெங்கட்,வருகைக்கும் தங்களின் கருத்துக்கும்.
//Rathnavel கூறியது...//
நன்றி ஐயா,தங்களின் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.
//அன்புடன் மலிக்கா கூறியது..//
நன்றி மலிக்கா,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
// இராஜராஜேஸ்வரி கூறியது.//
நன்றி மேடம் தங்களின் வருகைக்கும், கருத்துக்கும்.
//மகேந்திரன் கூறியது...//
நன்றி மகேந்திரன்,தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்.
// Thanai thalaivi கூறியது...//
ஆம் தா.தலைவி.உங்க ஆராய்ச்சி நல்லாயிருக்கு. எல்லா மொழிகளுக்குமே ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதுதான்.
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
// ஸ்ரீராம். கூறியது...//
காமிராவை விட்டுட்டு போயவிட்டோம், அதனால செல் போனில் எடுத்த படங்களைத் தான் கொடுத்திருக்கிறேன்.
மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//சி.பி.செந்தில்குமார் கூறியது...//
மிக்க நன்றி செந்தில்குமார்,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
திருமணம் ஆன புத்தில் தேனிலவுக்காக மங்களூர் போனது.
மங்களூர்பற்றிய தகவல்களும் படங்களும் நல்லா இருக்கு.
//ரொம்ப நாட்களாக உடுப்பி கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்று ஆவலாக காத்திருந்தது, நிறைவேறியது.
//
மிக்க மகிழ்ச்சி. மங்களூர் பயணக் கட்டுரையும், படங்களும் கண்ணுக்கு விருந்தளிப்பதாக உள்ளன.
கணினிக்கு இந்த வருட ஆரம்பத்தில் பல நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனே வரமுடியவில்லை. தாமதம் ஆகிவிட்டது. இன்று தான் இதைப் படிக்க முடிந்தது. அடுத்த பகுதியையும் சேர்த்து படித்து விட்டேன்.
உலக அழகி ஐஸ்வர்யா பிறந்த ஊர் ஆச்சே மங்களூர்..அருமை .நானும் சென்று இருக்கிறேன்.அதிகம் நேரம் செலவிட முடியாதாதால் மங்களூர் பத்தி தெரியவில்லை
தங்கள் பயணத்தை-1- இன்று வாசித்தேன் தொடருவேன். படங்கள் நல்ல விளக்கம் தருகிறது. நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com.
கருத்துரையிடுக