மங்களூர் சுற்றுலா--1., மங்களூர் சுற்றுலா---2.., மங்களூர் சுற்றுலா--3.
சென்ற பதிவில் ஒரு கதை சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? அது--
திம்மப்ப நாயகர் சுமார் 500 வருடங்களுக்கு முன் கர்நாடகத்தின் ஹாவேரி மாவட்டதில் உள்ள படா என்கிற கிராமத்தில் பிறந்தார்.அவர் குருபா எனப்படும் போர்வீரர்களின் பரம்பரையில் வந்ததால் சில காலம் கோட்டை காவல் பணியில் இருந்தார்.ஆனால் இயல்பாகவே கடவுள் பக்கி அதிக இருந்த காரணத்தால் அவர் குடும்ப தொழிலை விட்டுவிட்டு,வியாசராஜர் என்கிற குருவுடம் வந்து சேர்ந்துக்கொண்டார். வியாசராஜர் திம்மப்பாவிற்கு கனக தாசர் என்கிற பெயரை சூட்டினார்.
கனகதாஸர் புரந்தராஸரைப்போலவே பல நூறு பக்திப் பாடல்களை கன்னட மொழியில் பாடி இருக்கிறார். பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு அந்தந்த கோவிலில் உள்ள தெய்வங்களை பாடி மக்களிடம் பெரு மதிப்பை பெற்றார்.
அவர் அப்படி ஒரு சமயம் உடுப்பி கிருஷ்ணரை தரிசிக்க விரும்பி உடுப்பி வந்தார். ஆனால் அவருடைய ஜாதியை காரணம் காட்டி கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.அதனால் மிகவும் மன வேதனை அடைந்த கனகதாசர்,கோவிலின் பின்பக்கம் சென்று சுவற்றின் அருகே நின்று கொண்டு கிருஷ்ணனை மனமுருகி வேண்டி பாடல்களை பாட ஆரம்பித்தார்.
அப்பொழுது கனக தாசர் நின்ற இடத்தில் சுவற்றில் ஜன்னல் மாதிரி ஒரு பிளவு ஏற்பட்டு,கிழக்கு முகமாக நின்று கொண்டிருந்த கிருஷ்ணர் மேற்கு முகமாக திரும்பி நின்று கனக தாசருக்கு தரிசனம் வழங்கினார். கனகதாசரும் மனங்குளிர உடுப்பி கிருஷ்ணரை தரிசித்தார்.
இதன் காரணத்தால் உடுப்பி கோவில் சன்னதியின் முக்கிய வழி அடைக்கப்பட்டு, கனகதாசருக்கு பகவான் காட்சியளித்த அந்த இடத்தில் ஜன்னல் அமைக்கப்பட்டு அதுவழியே மட்டுமே கிருஷ்ணனை தரிசிக்க வழி செய்யப்பட்டது. அதிலிருந்து சாதாரண மக்களிலிருந்து பெரிய வி.ஐ.பி. வரையிலும், யாராக இருந்தாலும் உடுப்பி கிருஷ்ணனை கனகதாசர் தரிசித்த அந்த ஜன்னலின் வழியே மட்டுமே தரிசிக்க முடியும்..
உடுப்பி கிருஷ்ணனை தரிசித்துவிட்டு வெளியே வந்தோம்.கோவிலை சுற்றியுள்ள கடைகளில் மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் நிறைய கிடைக்கிறது. உடுப்பிக்கு செல்லுபவர்கள்,மத்து வாங்க வர வேண்டும் என்கிற ஐதிகம் உண்டாம். அதனால் சிறு மத்து,வேறு சில பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு, அடுத்து நாங்கள் சென்ற இடம், “மால்பே கடற்கரை”.
மால்பே..
இது உடுப்பிக்கருகில் அமைந்துள்ள ஒரு சிறு இயற்கைத் துறைமுகமாகும். இந்தப் பகுதியில் முக்கிய தொழில் மீன்பிடித்தல்.மீன் பிடிக்கப் பயன் படும் சிறிய மற்றும் பெரிய மோட்டார் படகுகளும் இந்த துறைமுகத்தில் கட்டப்படுகிறது.

இந்தத் துறைமுகத்திலிருந்து கடலில் சற்று தொலைவில் உள்ள st.Mary's Island என்கிற சிறு தீவுக்கு,ferry service நடத்துகிறார்கள். துறைமுகத்திற்கு நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு 30/- ரூபாய். தீவுக்கு செல்ல ஒருவருக்கு 85 ரூபாய் படகு கட்டணம்.
படகில் பயணம் செய்ய வேண்டும் என்றவுடன்,ஆஹா.. என்று எல்லோருக்கும் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு cruise ship எல்லாம் நினைவுக்கு வந்து சந்தோஷமாக படகு வருகைக்காக காத்திருந்தோம். ஆனால் வந்ததோ,10 பேர் ஏறினாலே கடலில்முழுகி விடும் போலிருந்த ஒரு அழுக்கு மீன் படகு. சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், டிக்கட் எல்லாம் வாங்கியாச்சு போய் தான் பார்ப்போம் என்று படகில் ஏறுவதற்கு வரிசையில் நின்றோம்.அன்று விடுமுறை நாளாகையில் கும்பல் நிறைய, படகோ சிறியதாக இருந்தது.
சரி நமக்கு அடுத்த படகுதான் என்று நின்றிருந்தோம்.ஆனால் வேகமாக வரிசை நகர்ந்தது எங்களையும் அந்த படகிலேயே ஏற்றிக்கொண்டார்கள். படகில் ஏறிக் கொண்டவுடன் பார்த்தால் சுமார் 40 அல்லது 50 பேர்களே செல்லக்கூடிய படகில் 150 பேர்களுக்கு மேல் இருந்தார்கள்.மிகவும் ஆபத்தாக இருக்கிறதே இறங்கிவிடலாமா என்று யோசித்து கொண்டிருக்கும்போதே படகு கிளம்பி விட்டது. சுமார் 20 நாற்காலிகளே போட்டிருந்தார்கள் மற்றவர்கள் நின்று கொண்டே வர வேண்டும். எப்படியோ ஆடிக்கொண்டே படகு சென்றது. ஒரு 1/2 மணி நேரம் மூச்சைப் பிடித்துக் கொண்டு பயணப்பட்டு பிறகு பார்த்ததில் சற்று தூரத்தில் தீவு கண்ணில் பட்டது,சரி ஒரு 5 நிமிடங்களில் அங்கு சென்று விடலாம், கரைக்கு அருகில்தான் இருக்கிறோம் என்று நிம்மதி பெருமூச்சு விட எத்தனித்த பொழுது, ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அது...............