சனி, ஜூன் 25, 2011

ஆறு.....அதிர்ச்சி...(நிறைவு)


சிறிது தூரதிலேயே மணற்பாங்கான இடம் வந்தது.  அப்பொழுதுதான் ஏதோஆறு என்று சொன்னாரே என்று நினைவுக்கு வர என்ன ஆறு ஓடுகிறது என்று கேட்டேன். என் கணவர்  ”கூவம் ஆறு ”என்று சொல்லிவிட்டு மணல் மேட்டிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார். மேட்டிலிருந்து இறங்க தொடங்கிய நான் கூவம் என்ற பெயரை கேட்டவுடன் அப்படியே அதிர்ந்து போய்  நின்றுவிட்டேன். என்ன இவர் கூவம் என்று சொல்லிவிட்டு அதில் இறஙக ஆரம்பித்து விட்டரே என்று குழப்பம் வேறு வந்தது. அவர் வேறெதாவது பெயரை சொல்லி நாந்தான் சரியாக கேட்டுக்கொள்ளவில்லையோ என்று, மறுபடியும் அவரிடம் சற்று உரத்த குரலில் என்ன பெயர் இந்த ஆற்றிக்கு என்று நான் கேட்க அவரும் மறுபடியும் கூவம் என்று சொல்லிவிட்டு என்னை திரும்பி பார்க்க நான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. உடனே அவர் என் அருகே வந்து ’ஏன் நின்று விட்டயாய்? வா போகலாம் ’என்றார். நான் உடனே ’என்ன நீஙகள் ??கூவம் ஆற்றில் இறங்குவதா!!! முடியவே முடியாது!!!’என்று  சொன்னேன்.

    ’நீ  என்ன சென்னையில் உள்ள கூவம் என்று நினைத்துக்கொண்டயா? ஆமாம் இது அதேதான்’ எனறார். எனக்கு மேலும் அதிர்ச்சி... இதில் போய் இறங்க சொல்லுகிறீர்களே என்று நான் கேட்க. ’ இதோ பார் அந்த மாதிரி சாக்கடை தண்ணியாக இருந்தா அப்பா என் தம்பி எல்லாம் இறங்கி போயிருப்பார்களா?? உன்னை அழைத்துதான் வருவோமா?? நீ கீழே இற்ங்கி பார்’ என்றார்.அப்பொழுதுதான் பார்தேன் என் மாமனார்,மச்சினர் அந்த மூட்டைக்காரர் எல்லோரும் அந்த பக்கம் உள்ள மணல் மேட்டில் எறிக்கொண்டு இருப்பதை !! சரி என்று நானும் அருகில் போய் பார்க்க, கரை ஓரத்தில் சிறிதள்வு தெளிவான நீர் தெரிந்தது. அப்பொழுதும் என் அதிர்ச்சி போகவில்லை.

என் கணவர் கூவம் ஆறு நம் ஊரை அடுத்துள்ள கூவம் என்கிற ஊரிலிருந்து உற்பத்தியாகி வருகிறது. அங்கு புகழ் பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது என்று விளக்கி கூறினார். அதுமட்டுமல்ல இந்த பகுதியில் உள்ள ஊர்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் எல்லவற்றிர்க்கும் பயன்படுகிற்து என்றார். கூவம் என்றால் சாக்கடை என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.மேலும் இப்பொழுது மழை குறைந்து விட்டதால் ஆற்றில் நீர் இல்லை என்றும்,17/18 வருடங்களுக்கு முன் (அதாவது இபொழுக்கு 40 வருடஙகளுக்கு முன்பு)  அவருக்கு 10 வயது இருக்கும் போதெல்லாம் மழை காலங்களில் முட்டிவரை தண்ணீர் வரும் என்றும் நண்பர்களுடன் நீச்சல் அடித்ததை பற்றி எல்லாம் கூறினார்.

அதன் பிறகு நான் நம்பிக்கை வந்து ஆற்றில் இறங்கினேன். தண்ணீர் அதிகம் ஒடவில்லை ஓரத்தில் சிறிது ஒடிக்கொண்டு இருந்தது. மற்றபடி ஆங்காங்கே தேங்கியிருந்தது. நீரில் கால் வைத்தவுடன் சில்லென்று இருந்தது. மனதில் இருந்த அதிர்ச்சி போகாமலேயே சிறிது நேரம் தண்ணீரில் நின்று விட்டு கிராமத்துக்கு போனோம். அங்கிருந்த புராதனமான பெருமாள் கோவிலுக்கு போய் பெருமாளை சேவித்துவிட்டு வீட்டிற்கு போனோம்.பிறகு என்மாமனாரின் மூதாதயர்களின் வயல்களை பார்த்துவிட்டு என் மாமனார் அப்பொழுது பயிறிடப்படும் முறைகளை கூற கேட்டு அறிந்துகொண்டேன்.

மாலையில்  திரும்பி கூவம் ஆற்றை தாண்டி வந்த பொழுது இப்படி பல கிராமங்களில் பல 100 மக்களின் வாழ்வின் ஜீவாதாரமாக உள்ள நதியை எப்படி பாழ்படுத்திவிட்டோம் என்கிற கனத்த உள்ளதோடு திரும்பி வந்தேன்.
அதன் பிறகு 2 -3 வருடங்கள்  கழித்தே ஊருக்கு மறுபடியும் போக முடிந்தது.
ஆனால் முதல் முறை நான் போனபொழுது இருந்தளவுகூட தண்ணீர் இல்லை. அதன் பிறகு நான் போனபோதெல்லாம் தண்ணீரே பார்க்கமுடியவில்லை. வெறும் மணல்தான்..............


நிறைவு..

5 கருத்துகள்:

Aswin Kannan சொன்னது…

கூவம் என்று வேறொரு இடம் இருப்பதை நான் அறிவேன்... எங்கு என்று தெரிவித்ததற்கு நன்றி அத்தை...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

நன்றி அஸ்வின்..

சுசி சொன்னது…

azhagar aatril iranguvar sare. azhagi aatril irangiyathu athuthan muthal muraiyo?

RAMA RAVI (RAMVI) சொன்னது…

அதெல்லாம் இல்லை, கூவம் ஆறு என்றவுடன் ஒரு தயக்கம்...

raji சொன்னது…

நன்றாக இருந்த கூவத்தை நாறடித்து பலனற்று ஆகியிருக்கிறதே.

பெருமாள் என்ன பெருமாள்ன்னு சொல்லலையே?