செவ்வாய், ஜூன் 28, 2011

எங்க ஊர்.....


fort St-George

angelin  எங்க ஊர்... பற்றிய தொடர் பதிவிர்க்கு அழைத்திருக்கிறார்.  என்ன எழுத வேண்டுமோ என்ற பயம், ‘ எங்க ஊர்’ என்ற தலைப்பை பார்த்ததும், போயே போச்சு..

பின்ன என்ன சொந்த ஊரை பற்றி என்றால் பேசிக்கொண்டே போகலமே!!!!!!!!! அதுவும் நான் பிறந்து வளர்ந்த ஊரை பற்றி என்றால் கேட்கவே வேண்டாம்...

எந்த ஊர் ??அது ரொம்ப் புகழ் பெற்ற நகரம் .  அட.. நம்ப சென்னை தான்...

பொதுவாக எல்லோருக்கும் சொந்த ஊர் ஒரு கிராமமாக இருக்கும். ஆனால் எனக்கு சென்னைதான் சொநத ஊர். சிறு வயதில் என் அப்பாவிடம் இது பற்றி நான் கேட்ட போது அவர் தன்னுடைய அப்பா LME  என்கிற டாக்டர் படிப்பு படிப்பதற்காக 1920க்கு முன்னலேயே சென்னைக்கு வந்து விட்டதாகவும், தானும் சிறு வயது முதலே செனனையில் படித்து வந்ததாகவும் அதனால் நமக்கெல்லாம் சென்னைதான் என்று கூறினார். என் தாயாரும் சென்னைதான். அவருடைய தந்தை சென்னை AG's office ல் வேலை பார்த்ததால் அவரும் சிறு வயது முதல் சென்னை தான்.

ஆதலினால்,, எல்லோருக்கும் தெரிந்த சென்னையை பற்றி என்ன எழுதுவது?
நான் என்ன எழுதினாலும் அது யாருக்கும் புதியதாக இருக்காது..

அதனால் சென்னை சிறு வயது முதல் என் பார்வையில் எப்படி இருந்தது என்று சொல்லுகிறேன். உங்களுக்கு பிடிக்கிறதா என்று சொல்லுங்கள்..

 சென்னை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மெரினா பீச். எனக்கு 5அ 6 வயது முதல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குடும்பத்துடன் செல்லும் இடம். அப்பொழுது எங்கள் வீடு மேற்கு மாம்பலத்தில் இருந்தது.புகழ்பெற்ற சீனிவாசா தியேட்டர் அருகில். எஙகள் வீட்டு வாசலிலேயே பேருந்து நிறுத்தம். 11B  busல் ஏறினால் நேர மெரினா பீச்தான் கடைசி நிறுத்தம். அப்பா எங்களை ஒரு ஞாயிற்றுக்கிழமை அழைத்துக்க்கொண்டு செல்வார். பீச் நிறுத்தம் வந்தது பேருந்திலிருந்து குதித்து ஓட்டம் தான் நானும் என் தம்பியும். செருப்பை கையில் எடுத்துக்கொண்டு மணலில் கால் பதிய வேகமாக நடக்க முயல்வோம்.நிமிர்ந்து அலையை பார்தவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ள யார் முதலில் செல்வது என்ற போட்டி வேறுMarina Beach

.  அலைக்கருகில் சென்று ஆசை தீர நீரில் விளையாடுவோம். பின்னர் திரும்பி வரும்பொழுது பாட்டியின் பஜ்ஜி கடைக்கிட்ட நின்று கொள்வோம். அப்பா வந்து ப்ஜ்ஜி வாங்கி கொடுப்பார். ((சாப்பிட்டு முடித்தப்பிறகும் நகராமல் நிற்போம். பாட்டியை சீண்டும் விடலை பசங்களை அவர்,”கடங்காரா அதைதொடாதேடா இதை தொடதேடா” என்று திட்டுவதை கேட்டுவிட்டுதான் நகருவோம்.அவர் அப்படி பேசுவதை கேட்பது எங்களுக்கு ஒரு குஷி))
அங்கிருந்து அண்ணா சமாதி பார்த்துவிட்டு நேராக
பார்தசாரதியை பார்க்க திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில்.பெருமாளை சேவித்துவிட்டு நேரே வீட்டிற்க்கு.




மாதத்திற்க்கு ஒரு முறை பனங்கல் பார்க், ரங்கநாதன் தெரு. பனங்கல் பார்க்கிர்க்கு ரங்கநாதன் தெரு வழியாகதான் செல்வோம். அப்பொழுதெல்லாம் இவ்வளவு பெரிய கடைகளோ கும்பலோ இருக்காது. பார்க்கில் உட்கார்ந்து கொண்டு கொறிப்பதர்க்கு சுவீட் மிக்ச்ர் எல்லாம் உண்டு. அங்கு வைக்கபட்டிற்க்கும் வானொலி பெட்டியில் வரும் ஒலி எங்கிருந்து வருகிறது என்று பார்க்க அந்த மண்டபத்தை சுற்றி சுற்றி வருவோம். “அதுக்குள்ள யாரவது உட்கார்ந்து கொண்டு பேசுவாடி!!”என்று தம்பி சொல்ல.அவனை விட( ஒன்றறை வயதே)பெரியவள் என்பதால் ரொம்ப தெரிந்தவள் என்பதை காட்டிக்கொள்ள போடா அதோ அஙக ஒரு ரூம் இருக்கு பாரு அங்கிருந்து பேசுவார்கள் அது இங்கே கேட்க்கும் .” என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது.

அடுத்து அஷ்ட லக்‌ஷ்மி கோவில் பெசண்ட் நகரில் உள்ளது. அங்கு போக வேண்டுமென்றால் கோவிலுக்கு போகிறோம் என்பதைவிட பீச் இருக்கும் என்ற சந்தோஷம் நிறைய இருக்கும்.Ashtalakshmi Temple

அதன் பிறகு சற்று பெரியவர்கள் ஆனவுடன் பீச்,பார்க் ஆர்வமெல்லாம் குறைந்து புத்தகம் படிக்கும் ஆசை வந்தது. என் தம்பி கிரிகெட் விளையாட்டு என்று சென்றுவிட நான் புத்தகம் படிக்க தொடங்கினேன். அப்பொழுது கன்னிமேரா நூலகம் பற்றி கேள்வி பட்டு அங்கு போக ஆரம்பித்தேன் என் தங்கையையும் கூட அழைத்து கொண்டு(அம்மா தனியாக போகவிடமாட்டர்கள்) ரொம்ப வருடங்கள்.. அங்கு சென்று படிப்பது காலேஜீக்கு நோட்ஸ் எடுப்பதர்க்கு எல்லாம் கன்னிமேரா தான்.Guseums Museum
என்றாவது படிப்பதர்க்கு சரியாக கிடைக்கவில்லை என்றால் பக்கத்தில் உள்ள மியுசிம் செல்வோம், அந்த பெரிய திமிங்கலத்தின் எலும்புகூடை பார்க்க..

வேலைக்கு போக ஆரம்பித்ததும் பிராட்வே.. இந்த பெயரை கேட்டாலே ஏதோ வெளிநாட்டில் இருப்பது போல தோன்றி ஒரு கிளுகிளுப்பை எற்படுத்தியது. ஆனால் அநத கும்பல்,பரபரப்பான வியாபாரம், பேருந்துகள், ஹைகோர்ட்  ஆகியவையாலும், தொடர்ந்து ஒரே இடதுக்கு சென்றதாலோ என்னமோ கொஞ்ம் நாட்களில் சாதாரணமாகிவிட்டது

.தலைமை செயலகம்  அலுவலக வேலை விஷயமாக அங்கு செல்ல நேரிடும் போதெல்லாம் பேருந்தைவிட்டு இறங்கியவுடன் சாலையை கடக்காமல் சிறிது நேரம் நின்று அதன் கம்பீரத்தை ரசிப்பேன்.(என் தோழிகளிம் கேலிபேச்சையும் பொருட்படுத்தமல்)

வேலைக்கு செல்லும் வழியில் பேருந்தில் உட்கார்ந்து கொண்டு மவுண்ட் ரோடு வழியாக செல்லுகையில் அந்த பழைய ஸ்டேட் பாங்க் கட்டிடம், எல் ஐ சி கட்டிடம் ஆர்ட்ஸ் காலேஜ்  எல்லாம் பார்த்துக்கொண்டு செல்லும் போது தலை நகரில் இருக்கிறோம் என்கிற கர்வத்தை தவிர்க்க முடிந்ததிலை.

எக்மோர் ஸ்டேஷன்,செண்ட்ரல், ரிப்பன் கட்டிடம், சென்னை பல்கலைகழகம்,  பிரசிடென்சி காலெஜ்,குயின் மேரீஸ், சாந்தோம் சர்ச்.. அகியவற்றை அவைகளுடைய" HERITAGE BEAUTY" யை இப்பொழுது சென்றாலும் ரசிக்காமல் வருவதில்லை.

முக்கியமாக இந்த இடங்களுக்கு நான் சென்று ரசிக்க துணையக இருந்த,இருக்கி்ற ,இருக்கப்போகிற நம் PTC ... (என்னதான் பெயர் மாற்றிவிட்டாலும் எனக்கு இன்னுமும் (பல்லவன்) PTC தான் திருவள்ளுவர் BUS STAND  தான்.) மறுக்க,,மறக்க முடியுமா???அப்பறம் நம் யுனிட் ட்ரைன்....

இப்படி நான் எழுதிக்கொண்டே போகலாம்.ஆனால் பதிவு முடிவிற்க்கே வராதே அதனால் மீதி இடங்களை நீங்களே நினைவு கூர்ந்து பார்த்துகொள்ள விட்டுவிடுகிறேன்.

எனக்கு பரிச்சயமானவர்களின் எனக்கு அடுத்து ஜீனியர் குணா என்பதாலும்,மற்ற சீனியர்களை தொந்தரவு செய்யாலமா கூடாதா என்று தெரியாததாலும்

இந்த என்னுடைய பதிவை தொடர  இக்கரையும்...அக்கரையும்.. குணசேகரன் 
http://zenguna.blogspot.com அவர்களை தொடர அழைக்கிறேன்.



7 கருத்துகள்:

Aswin Kannan சொன்னது…

சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மட்டுமே அது எவ்வளவு சீரழிந்து விட்டது என்று உணர முடியும்... நாகரிகம் என்கின்ற நாகப்பாம்பு தான் காரணம் என்பது என் தாழ்வான கருத்து...

கோவை நேரம் சொன்னது…

இதெல்லாம் எப்போன்னு சொல்லலையே ...உங்களின் பார்வையில் இது ஒரு மதராச பட்டினம் ....

RAMA RAVI (RAMVI) சொன்னது…

இதெல்லாம் சுமார் 35 வருடங்களுக்கு முந்தி..

சுசி சொன்னது…

nandri. ellorum avargalin sontha oorai patri romba peeti ezhuthumbothu varuthama irukum, namakum oru sontha oru illiyenu.

en thalaivarum oru cook gramathil piranthu vitu eppothum tan oru perumai pesuvar. nan ketpen " cook gamathil piranthavargale ippadi peetri kolgireergale nangal ellam cityil piranthavargal ipadiya peetri kolgirom."endru. "ellam oru inferiority complex than. athai maraikathan intha film ellam" enbar.

sare thane?

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க தா.தலைவி, நீங்க சொல்லுவது ரொம்ப சரி...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தா.தலைவி உங்க பதிவை பார்க்க முடியவில்லையே ஏன்??

raji சொன்னது…

தங்கள் பதிவில் மீண்டும் சிங்காரச் சென்னையை நான் வலம் வந்தேன்.பகிர்தலுக்கு நன்றி