என் சிறிய பெண்ணிற்கு இப்பொழுது 15 வயதாகிறது. அவளுக்கு 6/7 வயது இருக்கும் பொழுது என்ன பேசினலும் இல்லையா என்கிற வார்தையை கூட சேர்த்துகொண்டு பேசுவாள். (உம்..பால் சாப்பிடலாம் இல்லையம்மா? படிக்கலாம் இல்லையாப்பா ...). நாஙகளும் அப்படி பேசக்கூடாது என்று அவளுக்கு புரியவைக்க ரொம்ப் கஷ்டப்பட்டோம். அதை திருத்தவே முடியவில்லை.
ஒரு நாள் என் கணவர் அவளை கூப்பிட்டு அருகில் உட்கார வைத்துக்கொண்டு ரொம்ப நேரம் எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பிறகு நான் சொல்லுவது புரிகிறதா என்று கேட்டார். அவளும் எனக்கு ரொம்ப நன்றாக புரிந்துவிட்டது என்ற்வுடன். என்ன புரிந்தது என்று அவரும் கேட்க அதற்கு என் மகள் *இல்லையா சொல்லக்கூடாது இல்லையாப்பா* என்றாளே பார்க்கலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோருக்கும் சிறிப்பு அடங்க ரொம்ப நேரமானது.
அதன் பிறகு 1/2 வருடங்களில் அப்படி பேசுவது தானகவே நின்று விட்டது. இப்பொழுது நன்றாக பேசுகிறள்.
3 கருத்துகள்:
மஹாவின் மழழை மட்டற்ற மகிழ்ச்சி ... :)
ஆம் அஸ்வின், இப்பொழுது மழலை நக்கல் ஆகிவிட்டது!!!!!!!!!!!!!
அனுபவம் பேசுகிறது... நானும்கூட முகபுத்தகம் (FacebooK) மூலமாக அனுபவிக்கிறேன்...
கருத்துரையிடுக