வெள்ளி, அக்டோபர் 14, 2011

சுந்தர காண்டம்--2.

சென்ற பதிவில் அனுமன் கடல் தாண்டி இலங்கையில் சீதையை ஒரு இடம் பாக்கியில்லாமல் தேடுவது அப்படி தேடிக்கொண்டு அவர் ராவணனுடைய அரண்மனைக்கு வருவது வரை பார்த்தோம்.

இனி...

ஸர்க்கம்--10 ராவணனுடைய அந்தப்புரம்.

புஷ்பக விமானத்தின் நடுவில் இருந்த மாளிகையில் ராவணன் நித்திரை செய்யும் இடத்திற்கு வருகிறார்.அனுமன்,அவ்விடத்தில் ஸ்படிகத்தால் செய்யப்பட்டு,ரத்தினங்கள் இழைத்துத் தேவேந்திரனுடைய சயனம் போன்ற ஒர் மஞ்சத்தினை பார்த்தார்.அங்கு நாணா வர்ணமுள்ள புஷ்பங்கள் வாரி இறைக்கப்பட்டிருந்தன. குங்குமம், கஸ்தூரி, ஜவ்வாது, புனுகு, அத்தர், அகில்,சந்தனம் முதலிய வாஸனைதிரவியங்களின் பரிமளம் நிறைந்திருந்தது.
இவ்வாறு ராவணனுடைய ராஜ்ஜியம் சுபிட்ஷமாக இருந்ததை பார்த்து இது குபேரனுடைய ராஜதானியோ என்று ஆஞ்சனேயர் எண்ணிக்கொள்கிறார்.
மேலும் அந்த மஞ்சத்தில் ஒப்பற்ற ஆபரண அலங்கரங்களுடன் பிரதாபலங்கேசுவரன் உறங்கிக்கொண்டிருப்பதை மாருதி காண்கிறார்.அவன் உறங்குவது , “மரங்கள் புதர்கள் காடுகள் நிறைந்த மந்தரபர்வதம் அசைவற்று இருப்பது போல” இருந்ததாம்.இப்படியாக ராவணனுடைய அந்தப்புரத்தில் தேடிவிட்டு அடுத்து பான சாலைக்கு செல்கிறார் அனுமன்.

ஸ்ர்க்கம் --11  பான சாலை.

பான சாலை பல வித மாம்சங்களும்,பழங்களும் போஜன பண்டங்கள் நிறைந்ததாக இருந்ததாம்.தங்கத்தாலும்,வெள்ளியாலும் செய்யப்பட்ட பாத்திரங்கள், அவற்றில் உண்டு மீதி வைக்கப்பட்டிருந்த பலவகை பானங்கள் ஆகியவற்றை அனுமன் கண்டார்.அதையெல்லம் பார்த்த மாருதிக்கு ராவணனுடைய ஐஸ்வரியத்தினை பற்றி அடங்கா ஆச்சரியம் கொண்டார்.

ஸ்ர்க்கம் --12 மற்றும் ஸ்ர்க்கம் --13. சீதையை காணாமல் மாருதி துக்கித்தது.


இவ்விரண்டு ஸர்க்கங்களிலும் இலங்கையில் ஒரு இடம் பாக்கியில்லாமல் தேடியும் சீதையை காணவில்லையே என்று மாருதி துக்கிப்பது விளக்கப்பட்டுள்ளது.

 “ராகவனுடைய கோதண்டத்திலிருந்து பிரயோகிக்கப்பட்ட பாணத்தைப்போல ஒரு நொடியில் லங்கைக்கு போய் சீதையை தேடுவேன்,காணாவிட்டால் பதினாலு லோகங்களுக்கும் போய் சீதையை தேடுவேன் ,இல்லவிட்டால் ராவணனை கட்டி இழுத்துவந்து ராமனின் காலடியில் போடுவேன் என்று வீர்வாதம் பேசிவிட்டு வந்தேனே,இப்பொழுது ஜானகியை காணவில்லையே” என்று அனுமன் துக்கப்பட்டு தன்நிலை மறந்து புலம்புவார்.


பிறகு அவரே துக்கப்படுவது சிறப்பல்ல!!கவலையும் துக்கமும் தான் வந்த காரியத்திற்கு இடையுறு என்று தன்னையே தேற்றிக்கொண்டு மறுபடியும் சீதையை தேடுகிறார்.

ஸ்ர்க்கம்--14.  அசோகவனம்.

இப்படி சற்று நேரம் கவலையுற்று பிறகு தன்னையே தேற்றிக்கொள்ளும் மாருதி அங்கிருந்த அசோகவனத்தை பார்த்தார்.உடனே அவர் அந்த வனத்தில் ஏன் சீதையை ராவணன் வைத்திருக்க கூடாது என யோசனை செய்து அங்கே தேட செல்வார்.


அந்த அசோகவனத்தின் அழகை மதிற்சுவற்றின் மேலேரி பார்க்கையில் அனுமனின் சகல அவயங்களும் மகிழ்ச்சியால் பூரித்ததாம்.வஸந்த ருதுவில் முதலில் புஷ்பித்த ஆச்சா, அசோகம் ,சம்பகம் போன்ற மரங்களையும் மாந்தோப்புகளும்,அழகிய கொடிகளால் சூழப்பட்ட மரச்சோலைகளையும் மாருதி கண்டார்.அங்கு குயிகள்,மயில்கள் போன்ற பட்சிகளையும் மான் போன்ற அழகிய மிருகங்களையும் பார்த்தார்.

மேலும் கவனித்து பார்க்கையில் தங்கம் வெள்ளி மற்றும் நவமணிகளால் இழைத்த தரைகளை கண்டார். விசித்திரமான ருபங்களுடன் வெட்டப்பட்டிருந்த குளங்களின் படிகள் நவரத்தினங்களால் இழக்கப்பட்டிருப்பதை கண்டார்.அவைகளில் அமிர்தத்தை போல ருசியுள்ள ஜலம் நிறைந்திருந்தது.பொன்மயமான விருக்‌ஷங்களும்,சுவர்கலோகத்தில் மட்டுமே காணக்கூடிய விருக்‌ஷங்களும் இருந்ததை கண்ட மாருதி அந்த அசோக வனத்தின் வனப்பை பார்த்து மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்.

ஸ்ர்க்கம்--15  அனுமன் சீதையை கண்டது.

இப்படிப்பட்ட அந்த அழகான அசோக வனதில் சுற்றிப்பார்கையில் தொலைவில் ஒரு சிம்சுபா விருக்ஷத்தின் அருகில் ஒரு ஸ்திரீ இருப்பதையும் அவளை சுற்றி பல ராக்‌ஷசிகள் கண்கொட்டாமல் காவல் காத்துக்கொண்டிருப்பதையும் பார்த்தார். அந்த பெண்ணின் நிலை தன் இனத்தை விட்டு பிரிந்த பெண் மான் நாய்களால் சூழப்பட்டதும் போல இருந்ததாம்.இதன் காரணத்தாலும் இன்னும் பிற காரணங்களாலும் அவளே சீதை என தெரிந்து கொண்டு அனுமன் அவள் இருந்த மரத்தின் மீது அமர்ந்து கொள்கிறார்.



ஸர்க்கம் --16.  சீதையை கண்டு அனுமன் துக்கித்தது.

லோக குருவான ரகுநாதனுடைய பார்யை,வஸிஷ்டர் போன்ற மஹரிஷிகளால் பழக்கப்பட்ட லக்‌ஷ்மணனால் பூஜிக்கப்பட்டவள்,இவளையே துக்கம் பீடிக்குமானால் காலகதியே பெரியது.அதை மீற யாராலும் முடியாது,என்றெல்லாம் அனுமன் சீதையின் நிலையை பார்த்து மிகவும் துக்கித்தார்.



ஜனக மகாராஜாவினால் செல்லமாக வளர்க்கப்பட்டு தசரத சக்கரவர்த்திக்கு நாட்டுப்பெண்ணான இவள் கஷ்டம் என்பதையே அறியாதவள். அப்படிப் பட்டவள் இங்கு வெறும்தரையில் அலங்காரங்கள் ஏதுமிலாமல் உட்கார்ந்திருப்பதை பார்த்து மாருதி மிகவும் கவலை கொண்டார்.அதிக பாரமான கப்பல் ஜலத்தில் முழுகுவதை போல சீதையின் நிலையை கண்டு அனுமான் துக்க சாகரத்தில் முழுகினாராம்.

ஸர்க்கம் --17.  ராக்‌ஷசிகள்.

இந்த ஸர்க்கத்தில்சீதையை காவல் காகும் ராக்‌ஷசிகளை பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.  ஒரே காதை உடையர்வர்களும்,ஒரே கண்ணை உடையவர்களும்.,காதில்லாதவளும்,மேல் நோக்கியுள்ள மூக்கை உடையவளும்,தலை பெருத்தவளும்,இப்படி பல கோர உர்வம் கொண்டவர்களை அனுமன் பார்க்கிறார்.



இப்படிப்பட்ட கோர உருவம் கொண்டவர்களுக்கு மத்தியில் சீதை கருத்த மேகங்களுக்கு நடுவில் தோன்றி மறையும் பூர்ணசந்திரனை போல தோன்றினாளாம்.

ஸர்க்கம்--18.  ராவணன் அசோகவனத்திற்கு வந்தது.

இப்படி அனுமன்,சீதையின் நிலைமையை பார்த்து கவலைப்பட்டு அவருடன் எப்படி பேசுவது என்று யோசனை செய்து கொண்டிருக்கும் பொழுது தூக்கத்திலிருந்து விழித்து கொண்ட ராவணன் சீதையை காண அசோகவனத்துக்கு வந்தான்.


ராவணனுடன் அவன் மனைவியரும் அசோகவனத்திற்கு வந்தனர். அவர்கள் ராவணனை சூழ்ந்து கொண்டு வந்தது,தேவேந்திரன்,ஸ்திரீதிகள் சூழ வருவது மாதிரி இருந்ததாம்.அவர்கள் அணிந்திருந்த நகைகளும்,சலங்கைக்ளும் ஏற்படுத்தின சப்தம் மதுரமான துவனியில் அனுமனின் காதில் விழுந்ததாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------


அடுத்த பதிவு - ஸர்க்கம் 19--27

29 கருத்துகள்:

SRINIVAS GOPALAN சொன்னது…

ரமா மாமி
ராமாயணதுல மற்ற எல்லா காண்டத்திலும் ஸ்ரீ ராமர் ஹீரோ என்றால் இந்த சுந்தர காண்டத்துல அனுமார். சுந்தரரே அவர் தானே.
பரமேஸ்வரன் பார்வதியிடம் சொன்ன மாதிரி சஹஸ்ரநாமத்தை உச்சரிச்சு கிடைக்கற பலன் இந்த ராம நாமத்தில் கிடைத்து விடும். (ஸ்ரீ ராம ராமேதி ... சுலோகம்). அடுத்து மாருதி - ஜானகியை காணும் காட்சிக்கு waiting.
சமயம் கிடைக்கும் போது என் பக்கமும் வாங்கோ - கீதோபதேசம் நடக்கிறது:
http://srinivasgopalan.blogspot.com

ஸ்ரீராம். சொன்னது…

ராவணன் உறங்குவதன் உவமை, அனுமனின் புலம்பல், அசோகா வனத்தின் வனப்பைச் சொல்லும் பகுதி, சீதா வர்ணனையும் ..எல்லாமே ரசித்துப் படித்தேன்.

RAMVI சொன்னது…

//SRINIVAS GOPALAN சொன்னது…//

SRINIVAS GOPALAN மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

உங்க கீதோபதேசத்தை படிக்க இதோவந்துட்டேன்.

RAMVI சொன்னது…

//ஸ்ரீராம். சொன்னது…//

நன்றி ஸ்ரீராம்,நீங்க தொடர்ந்து வந்து படிப்பதற்கும்,அழகான கருத்து சொல்லுவதற்கும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சுந்தரகாண்டத்தின் விசேஷ்மே மூன்றுமுறை ராமசரிதம் முழுமையாக சொல்லப்படுவதுதான்.

ராமர் அனுமனிடம் சொல்வது
அனுமன் சீதையிடமும்
சீதை அனுமனிடமும்..

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//அதிக பாரமான கப்பல் ஜலத்தில் முழுகுவதை போல சீதையின் நிலையை கண்டு அனுமான் துக்க சாகரத்தில் முழுகினாராம்.//

ஆஹா! அருமை.
புரட்டாசி சனிக்கிழமையான இன்று ஹனுமனைப்பற்றி சிந்திக்க வைத்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. vgk

மாலதி சொன்னது…

ரசித்துப் படித்தேன்.

RAMVI சொன்னது…

//இராஜராஜேஸ்வரி சொன்னது…//

நன்றி மேடம் தங்களின் வருகைக்கும் அழகான கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…//

நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//மாலதி கூறியது...
ரசித்துப் படித்தேன்.//

நன்றி மாலதி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

யானைகுட்டி @ ஞானேந்திரன் சொன்னது…

அனைத்து கருத்துகளும் ...
மிக அருமை ...
வடிவமைப்பு சூப்பர் .
தமிழ் புலமை ஆகா!

யானைகுட்டி @ ஞானேந்திரன் சொன்னது…

அனைத்து கருத்துகளும் ...
மிக அருமை ...
வடிவமைப்பு சூப்பர் .
தமிழ் புலமை ஆகா!

RAMVI சொன்னது…

//யானைகுட்டி @ ஞானேந்திரன் சொன்னது…
அனைத்து கருத்துகளும் ...
மிக அருமை ...
வடிவமைப்பு சூப்பர் .
தமிழ் புலமை ஆகா!//

நன்றி ஞானேந்திரன் தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும்

C.P. செந்தில்குமார் சொன்னது…

Vanthen. Padithean. Thanx for Sharing

மழை சொன்னது…

ஹ்ம் பட்ங்கள் நல்லா இருக்கு.புக்கில் இருந்து எடுக்குறீங்களோ??படத்தை சொல்றேன்.

RAMVI சொன்னது…

//C.P. செந்தில்குமார் சொன்னது…//

நன்றி செந்தில்குமார் தங்களின் கருத்துக்கு.

RAMVI சொன்னது…

//மழை சொன்னது…//

படங்கள் google images இல் இருந்து எடுக்கப்பட்டது.

சுந்தர காண்டம்- புத்தகதிலிருந்து நான் படித்ததை தொகுத்து என்னுடைய கருத்துக்களுடன் கொடுக்கிறேன்.

மகேந்திரன் சொன்னது…

அன்பு சகோதரி,
சுந்தரகாண்டம் பற்றிய தெள்ளிய கருத்துக்களை
அள்ளி அள்ளிப் பருகினேன்.
சீதையைக் காணாது அனுமனின் புலம்பல் மனத்தைக் கொள்ளை கொண்டது. நாம புலம்புவது போலவே தோன்றியது.
மிகவும் ரசித்து ரசித்து படித்தேன் சகோதரி.
நன்றி.

RAMVI சொன்னது…

// மகேந்திரன் கூறியது...//

நன்றி மகேந்திரன் தங்களின் வருகைக்கும் அழகான கருத்துக்கும்.

M.R சொன்னது…

அருமை சகோதரி ,படித்தேன் அறிந்தேன் ,பகிர்வுக்கு நன்றி .

Ramani சொன்னது…

படங்களும் விவரித்துப்போகும் விதமும்
சொல்லாட்சியும் ஒரு சாஸ்திர விற்பன்னரிடம்
உபன்யாசம் கேட்பதைப்போல் மெய்சிலிர்க்க வைக்கிறது
மிகப் பெரிய பணியை மேற்கொண்டிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்

RAMVI சொன்னது…

//M.R சொன்னது…//

நன்றி ரமேஷ் ,தங்களின் கருத்துக்கு.

RAMVI சொன்னது…

//Ramani சொன்னது…//

நன்றி ரமணி சார், தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும்.

சே.குமார் சொன்னது…

ரசித்துப் படித்தேன்.

சம்பத்குமார் சொன்னது…

வணக்கம் சகோ...

இன்றுதான் என் முதல் வருகை..

அருமையான பதிவிற்க்கு மிக்க நன்றி

தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி..நானும் தொடர்கிறேன்

நன்றியுடன்
சம்பத்குமார்

அம்பாளடியாள் சொன்னது…

படங்களும் பகிர்வும் அருமை சகோ .பலமுறை ராமாயணத்தைப்
பார்த்துவிட்டேன் .என் மனதில் இன்னமும் அதன் உணர்வுகள்
உறங்கவில்லை .அருமையான உங்கள் ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ...........

ராஜி சொன்னது…

நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி

ராஜி சொன்னது…

நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி