இராமாயணத்தின் 5 வது காண்ட மாகிய இந்த சுந்தர காண்டத்தின் கதாநாயகன் ஆஞ்சனேயரே ஆவார்.
“இராமாயணம் என்கிற மாலையில் நடுநாயகமான ரத்தினம்போல் ஆஞ்சனேயர் விளங்குகிறார்” என்று சொல்லுவதற்கு ஏற்றபடி சுந்தரகாண்டத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரையில் ஆஞ்சனேயரின், பலம்,பரக்கிரமம்,புத்தி, மஹிமை ஆகியவையே வர்ணிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்ர்க்கம்--1. ஆஞ்சனேயர் கடலைத்தாண்டி இலங்கைக்கு போனது:
இந்த ஸர்க்கத்தில் அனுமன் கடலைத்தாண்டி இலங்கைக்கு போய் இறங்கியது விவரிக்கப்பட்டுள்ளது.

அனுமன் மஹேந்திர பர்வதத்தில் ஏறி கடலை தாண்ட தன்னை தயார் படுத்திக்கொள்ளும் போது பூர்ண பலத்தை உடைய சிம்மம் போலவும்,விஸ்தாரமான மடுவில் விளையாடும் கஜத்தை(யானை)போலவும் இருந்தார் என்றும் வர்ணிக்கப்படுகிறார்.
அவர் அந்த மலையில் காலை அழுத்தி தாவின பொழுது அவருடைய தொடையின் வேகத்தால் அந்த மலையில் இருந்த புஷ்பமரங்கள் யாவும் வேருடன் பெயர்ந்து அவருடன் உயரக்கிளம்பியதை பார்கையில் நெடுந்தூரம் பிரயாணம்செல்லும் ஒருவனை அவனுடைய பந்துக்கள் சிறிதுதூரம் தொடர்ந்து சென்று வழி அனுப்புவது போல இருந்ததாம்.
அனுமன் உயரக்கிளம்பி கடலை கடக்க முற்பட்டபோது,அவருக்கு மூன்று தடைகள் வந்தது.
முதலில் “மைநாகம்” என்கிற பர்வதம் (மலை)அவருடைய வழியை தடுப்பது போல மிகப்பெரியதாக வளர்ந்து நின்றது. அது இராம காரியமாக செல்லும் ஆனுமார் இளைப்பாறி செல்லவே அவ்வாறு வளர்ந்து நின்றதாம்.ஆனால் தான் போகும் காரியம் தடை படக் கூடாது என்பதற்காக அனுமன் அந்த மலையை வணங்கி அதன் அதிதி பூஜையை ஏற்று கொண்டு மலையில் இளைபாறாமல் தொடர்ந்து செல்கிறார்.
இவ்வாறாக அவர் முதல் தடையை கடந்து செல்கையில் நாகங்களுக்கு தாயான ஸுரசை என்பவள் கடல் நடுவில் பெரிய உருவத்தோடு அவரை தடுத்து, “இந்த வழியில் போகிறவர்களை தேவர்கள் எனக்கு ஆகாரமாக அனுப்பியிருக்கிரார்கள் அதனால் என் வாயில் நுழை” என்கிறாள்.அனுமான் உடனே அவள் வாயைவிட பெரிய உருவத்தை எடுக்க அவள் அதற்கு தகுந்தபடி தன் வாயை பெரியதாக திறக்கிறாள்.ஆனால் அனுமான் உடனே கட்டை விரல் அளவு தன்னுடைய தேகத்தை சுருக்கி கொண்டு அவள் வாயில் புகுந்து வெளி வந்து விடுவார்.அப்போழுது அனுமார் ராகுவின் வாயிலிருந்து வெளிப்பட்ட சந்திரனை போல் பிரகாசித்தார் என வர்ணிக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்ததாக ஸிம்ஹிகை என்கிற ராக்ஷஸி அவருடைய நிழலை பிடித்து இழுப்பாள் அவளையும் அனுமான் ஜெயித்து அக்கரைக்கு போய் சேர்வார்.
ஸர்க்கம் -2. லங்கையின் வளப்பம்
அனுமான் 100 யோஜனை தூரமுள்ள கடலை கடந்து அக்கரைக்கு போய் லங்கையின் அழகை பார்க்கிறார்.அந்த நகரம் திரி கூட பர்வதம் என்கிற சிகரத்தில் கட்டப்பட்டு இருந்ததாம்.இராவணனுடைய ராஜதானி, தாமரை,மலைமல்லிகை முதலிய புஷ்பங்கள் நிறைந்த அகழிகளால் சூழப்பட்டதாகவும்.தங்கமயமான உயர்ந்த மதிற் சுவர்களால் சூழப்பட்டு விஸ்தாரமாகவும் இருந்ததாம்.அதிலுள்ள வீடுகள் நவக்கிரங்கள் போலும்,சரத்காலத்து மேகங்கள் போலும் விளங்கியதாம்.

மேலும் அன்னம்,நீர்காக்கை முதலிய பறவைகளாலும், வெண்தாமரை, செங்கமலம், கருநெய்தல் முதலிய மலர்களால் பிரகாசிக்கும் நீரோடைகளையும், சாதாரன மக்கள் விளையாடும் ஸ்தலங்களையும், ஜலக்ரீடை செய்யும் மடுக்களையும்,எந்த காலத்திலும் புஷ்பங்களாலும், பழங்களாலும் விளங்கும் விருக்ஷங்களுள்ள, அரசர்கள் விளையாடும் தோட்டங்களையும் ஆஞ்சனேயர் கண்டார்.
பர்வத சிகரத்தில் கட்டப்பட்டு வெண்மையான வீடுகளுடன் விளங்கும் லங்கையை பார்கையில் ஆஞ்சனேயருக்கு அது ஆகாசத்தில் பறந்து செல்லும் நகரம் போல தோன்றியதாம்.இந்திரனின் அமராவதியோ என்று மலைக்கும் அழகுடன் லங்கை விளங்கியதாம்.
ஸ்ர்க்கம்--3 மாருதி லங்கா தேவதையை ஜயித்தது.
இப்படி அனுமான் லங்கையின் அழகை பார்த்துக்கொண்டே சென்று,அந்த நகரத்தினுள் பிரவேசிக்க முயல்கையில்,லங்கையை காக்கும் தேவதையான லங்கா தேவி என்கிற ராக்ஷச ஸ்த்ரீ அவரை தடுக்க,அனுமனும் அவள் பெண் என்பதாலும்,பெண்களுடன் சண்டைபோடக்கூடதுஎன்பதாலும், அதிகம் கோபித்து கொள்ளாமல் தனது இடது கையை மடக்கி அவளை குத்துவார். அந்த குத்தையே தாங்காமல் அவள் கீழே விழுந்து அனுமனை பார்த்து, “எந்த சமயத்தில் ஒரு வானரன் உன்னை பரக்கிரமத்தால் ஜயிக்கிறானோ அப்பொழுது ராஷசகுலத்திற்கு அழிவு நேரும் என பிரம்மா எனக்கு கூறியுள்ளார்.அந்த சமயம் வந்தது என்று நினைக்கிறேன்.நீங்கள் உங்கள் இஷ்டப்படி லங்கையில் பிரவேசிக்கலாம்” என்பாள்.

ஸ்ர்க்கம்--4 மாருதி லங்கையில் சீதையை தேடினது.
இப்படி மகா தேஜஸ் உள்ள அனுமான் சத்ருக்களை ஜயிக்க விரும்புபவன் அவர்களுடைய பட்டிணத்தில் வழியில்லாத இடத்தில் நுழைய வேண்டும் என்கிற நீதி சாஸ்திரத்தின் படி வாசல் இல்லா மதிள் சுவற்றை தாண்டி தனது இடது பாதத்தை முன் வைத்து அந்த நகரத்தில் பிரவேசிப்பார்.
பிறகு அந்த நகரத்தில் உள்ள வீடுகள் ,தெருக்கள்,பிரபுக்கள் வசிக்கும் மாடமாளிகைகள் ஆகியவற்றில் சீதையை தேடுகிறார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தோரணத்தை உடைய ராவணனுடைய அரண்மனைக்கு செல்வார்.விலை உயர்ந்த தங்கம்,ஸுவர்ணம் முதலியவைகளால் செய்யப்பட்ட உன்னதமான சுவர்களாலும்,நவரத்தினங்களிழைத்த விடுதிகளாலும்,வைரமேறின அகில்,சந்தனம் முதலிய பரிமளங்களாலும் விளங்கும் ராவணனுடைய அந்தப்புரத்தில் மாருதி பிரவேசிக்கிறார்,என்பது வரை இந்த ஸர்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்ர்க்கம் --5 சந்திரோதய வர்ணனை.
இப்படி இரவு வேளையில் சீதையை தேடச்சென்ற மாருதிக்கு துணை புரிந்த சந்திரனை பற்றிய வர்ணனை இந்த ஸர்க்கத்தில் காணப்படுகிறது.
லோகத்தில் மந்தரபர்வதமும்,பிர்தோஷகாலதில் ஸ்முத்திரமும், தடாகங்களில் செந்தாமரையும்,மிகுந்த காந்தி பெற்று விளங்குவதை போல சந்திரனிடம் காந்தியும் தேஜஸும் விளங்கிற்றாம்.

வெள்ளிக்கூட்டில் விளையாடும் ராஜஹம்ஸத்தை போலும்,வெண்மையான மந்தரகிரியின் குகையிலிருக்கும் சிங்கத்தை போலும்,கறுத்த மதயானை மேலிருக்கும் யுத்தவீரனை போலும்,மஹாபர்வதத்தின் வெண்மையான சிகரத்தை போலும்,தங்கபூண் கட்டிய தந்தங்கள் உள்ள மதயானைப்போலும் சந்திரன் ஆகாசத்தில் பிரகாசித்தான் என வர்ணிக்கப்படுகிறது.
ஸர்க்கம்--6 மருதி பிரபுக்களுடைய வீடுகளில் தேடியது:
இவ்வாறு சந்திரன் துணை செய்ய மாருதி சீதையை லங்கையில் தேடிக்கொண்டு போகிறார்.ராவணனின் அரண்மனையின் வெளி வாசலில் விசித்திரமான வெள்ளித்தோரணங்கள் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு விளங்கினவாம்.கணக்கில்லா யானைவீரர்களும் சோர்வில்லாத காலாள்வீரர்களும்,கொல்ல முடியாத உத்தமமான போர்குதிரைகளும், ரதவீரர்களும் அரண்மனையை இமைகொட்டாமல் பாதுகாத்தார்கள்.
வெளிப்பிரகாரத்திற்குள் பிரதான மந்திரிகளும்,அலுவலர்களும் ராவணனுடைய புத்திரர்களும்,சகோதரர்களுமான, பிரஹஸ்தன், மஹாபார்கன்,கும்பகர்ணன்,விபீஷணன்,இந்திர்ஜித்,ஜம்புமாலி போன்ற பலர் வசிக்கும் வீடுகளிலும் சீதையை அனுமன் தேடிக்கொண்டு போனார்.
ஸ்ர்க்கம்--7 ராவணனுடைய அரண்மனை.
இப்படி மாருதி சீதையை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டு போகையில் ராவணனுடைய அரண்மனைக்கு செல்கிறார்.அது சில்ப சாஸ்திர விதிகளின்படி யாதொரு தோஷமும் இல்லாதபடி கட்டப்பட்டிருப்பதை பார்க்கிறார்.அந்த அரண்மனை உத்தமமான ரத்தினங்கள்,தங்கம், வெள்ளி பவழங்ம் முதலானவைகளால் அலங்கரிக்கப்பட்டு தேவலோகமோ என்று எண்ணும் வண்ணம் இருக்கிறதாம்.

ஸ்ர்க்கம்--8 புஷ்பக விமானம்.
ராவண கிருஹங்களுக்கு நடுவில் நவமணிகள் இழைத்து உருக்கியோடவிட்ட தங்கத்தால் செய்யப்பட்ட சிற்பங்களை கொண்ட ஒரு விமானம் இருந்தது.அது ராவணனுடைய புஷ்பக விமானம் என்பதை அனுமன் தெரிந்து கொண்டார்.அது விஸ்வகர்மாவினால் செய்யப்பட்ட தேவவிமானமாதலால் பூமியில் படாமல் ஆகாச மார்கத்தில் அதி வேகமாக செல்லக்கூடியது.
அது ஒப்பில்லாத அழகு பொருந்தியது.அதில் ஒவ்வொரு வேலைப்பாடும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது.அதில் அமைக்கப்பட்டிருக்கும் ரத்தினங்கள் சகல விதத்திலும் ஒப்பில்லாதவை.தேவர்களுடைய விமானத்தைக்காட்டிலும் அதி அற்புதமாக விளங்கியது.ராவணன் பிரம்மாவை குறித்து பதினாலாயிரம் வருஷம் கோர தவம் புரிந்து குபேரனை ஜெயித்து அந்த விமானத்தை அடந்தான்.
இவ்வாறு இலங்கையின் ஒவ்வொரு இடங்களின் அழகையும், ராவணனுடைய போக வாழ்க்கையும் பார்த்துக்கொண்டு அனுமன் சீதையை அங்கு தேடுகிறார்.
ஸ்ர்க்கம்--9 ராவணனுடைய அந்தப்புரம்.
அந்த புஷ்பக விமானத்தின் நடுவில் அனுமன் ஒரு சிறந்த மாளிகையை பார்த்தார்,அது ராவணனுடைய அந்தப்புரம். ஒப்பில்லாத அழகுடன் விளங்கியது. கணக்கற்ற ரக்ஷச வீரர்கள் ஆயுதம் தரித்து அதனை காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.அங்கே ராவணனுடை பத்தினிகளான ராக்ஷச ஸ்த்ரீகளும்,திக்விஜயதின் பொது ஜெயித்து கொண்டு வரப்பட்ட பெண்களும்,ராஜ கன்யைகளும்தூங்கிக்கொண்டிருப்பதை அனுமன் காண்கிறார்.
அங்கு பலவித போஜ பண்டங்களும் வாசனை திரவியங்களும் வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து எழும் வாசனையானது அனுமனை “ராவணன் இருக்குமிடத்திற்கு வா” என்று அழைப்பது போல இருந்ததாம்.
அங்கு அவர் தொடர்ந்து தேடிப்பார்க்கையில் பல நூறு ஸ்த்ரீகளை பார்க்கிறார்,ஆனால் ஜானகியை மாத்திரம் காணவில்லை.
தொடரும்....
அடுத்த பதிவில் ஸர்க்கம் 10--18 வரை..
------------------------------------------------------------------------------------------------------------------

24 கருத்துகள்:
அருமையான விரிவான சுந்த்தரகாண்டப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
முதல் மழை
ராம்வியின் ராமாயணம் !!!!!!!!!
//இராஜராஜேஸ்வரி சொன்னது//
நன்றி இராஜராஜேஸ்வரி மேடம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ராம்வியின் ராமாயணம் !!!!!!!!!//
அட!!இது கூட நல்லாயிருக்கே.
நன்றி செந்தில்குமார்.
அருமையான துவக்கம். தொடருங்கள். எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காதது இந்த சுந்தர காண்டம்.
A quick recap.
Quiet good.
(www.viswanathvrao.in)
//வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…//
நன்றி ஐயா தங்களின் கருத்துக்கு.
//ViswanathV சொன்னது…//
நன்றி திரு. விஷ்வநாத்.
சுவாரஸ்யமாகப் படித்து வருகிறேன். எத்தனை தரம் படித்தாலும் அலுக்காது.
நல்ல பகிர்வு தொடருங்கள்
கம்ப ராமாயணமும் வால்மீகி ராமாயணமும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதினால் அருமையாக இருக்கும...
தொடர் பதிவை இருந்தாலும் ஓகே தான்
//ஸ்ரீராம். சொன்னது…
சுவாரஸ்யமாகப் படித்து வருகிறேன். எத்தனை தரம் படித்தாலும் அலுக்காது.//
ஆம் ஸ்ரீராம்,எத்தனை முறை படித்தாலும் அலுக்காது.
நன்றி தங்களின் கருத்துக்கு.
//தமிழ்வாசி - Prakash சொன்னது…
நல்ல பகிர்வு தொடருங்கள்//
நன்றி பிரகாஷ்,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
//suryajeeva சொன்னது…
கம்ப ராமாயணமும் வால்மீகி ராமாயணமும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதினால் அருமையாக இருக்கும...
தொடர் பதிவை இருந்தாலும் ஓகே தான்//
நன்றி suryajeeva தங்களின் கருத்துக்கு. முயற்சி செய்கிறேன்.
ஒவ்வொரு சர்கமாய் விவரித்து சொல்லிற் இருக்கிறீர்கள் அருமை
அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோதரி ,அருமை
அருமையாக இருந்தது. தொடருங்கள்.
எப்போதோ பள்ளியில் படித்த, மற்றும் பார்த்தவற்றை ஒன்றாய் படிப்பதில் மகிழ்ச்சி
அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
இலங்கையின் வனப்பை படிக்கையில்
அப்படியே மனம் அந்த இடத்திற்கு சென்று
வந்தது.
சந்திரனை வர்ணிக்கையில் வெண்மையான மந்தரகிரியின் குகையிலிருக்கும் சிங்கத்தை போலும் என்று வர்ணித்தது நெஞ்சில் இனித்தது.
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ!
படங்களுடன் பதிவின் விளக்கம் அருமை சகோ! பாராட்டுக்கள்...
தங்களின் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருப்பின் சென்று பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html
கருத்துரையிடுக