நாங்கள் இருக்கும் பெங்களூரில் விநாயக சதுர்த்தி விழா கணேஷ சதுர்த்தி என்கிற பெயரில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
10 வருடங்களுக்கு முன் நாங்கள் பெங்களூருக்கு வந்த புதிதில், நாம் தமிழ் நாட்டில் கொண்டாடும் பிள்ளையார்/விநாயக சதுர்த்தி விழாவை, இங்கு கணேஷ சதுர்த்தி என்கிற பெயரில் கொண்டாடுவதை பற்றி தெரிந்து கொண்டேன்.
இங்கு இப்பண்டிகை 2 நாட்கள் கெளரி கணேஷா பண்டிகை என்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகை வருவதறக்கு முன்னதாகவே ஊர் முழுவதும் எங்கு பார்த்தாலும் பிள்ளையார் சிலைகள்தான் பல அளவுகளில்,பல நிறங்களில்....

முதல் நாள் கொண்டாடப்படும் கெளரி பூஜை சுவர்ண கெளரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. விநாயக பெருமானின் தாயாரான பார்வதி தேவிக்காக கொண்டாடப்படும் இவ்விரதம் பெண்களால் கொண்டாடப்படுகிறது.
மஞ்சள் பொடியில் நீர்சேர்த்து கலந்து கெளரி உருவம் செய்து வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.சில வீடுகளில் கெளரி உருவச்சிலைகளும் வைத்து வழிபாடு நடத்தப்படும் வழக்கம் உண்டு.
மறுநாள் கணேஷ புஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.நம் ஊரில் உள்ள வழக்கப்படியே ஒவ்வொரு வீடுகளிலும் விநாயகரின் உருவச்சிலை வாங்கி வைத்து வெற்றிலை பாக்கு,பூ,பழங்கள் மற்றும் விநாயக சதுர்த்தியன்று செய்யப்படும் கொழுக்கட்டை,ஒப்பட்டு எனப்படும் போளி ஆகியவை நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.
வீட்டில் சிறப்பாக கொண்டாடப்படுவதுடன்,இவ்விழாவை ஒவ்வொரு பகுதியிலும் அங்கு வசிக்கும் மக்கள் ஒன்றாக சேர்ந்தும்,வீதிகளில் பெரிய விநாயகர் சிலை வைத்தும் கொண்டாடுகிறார்கள். இதற்காக ஒரு மாதம் முன்னதாகவே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதி மக்களிடம் நன்கொடை வசூலிக்கிரார்கள். நன்கொடையில் கிடைக்கும் பணத்தை கொண்டு பண்டிகைக்கு 2/3 நாட்களுக்கு முன்னதாக பெரிய அளவில் பந்தல் அமைத்து பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வாங்கிவந்து வைத்து 10/12 தினங்களுக்கு பூஜைகள் நடத்துகிறார்கள்.

சில பகுதிகளில் பாட்டு கச்சேரி, நாடகம் போன்றவையும் நடத்தப்படுவதுடன்,சிறுவர் சிறுமிகளுக்கு போட்டிகள் வைத்து பரிசுகளும் கொடுக்கிறார்கள்.

விநாயகர் வைக்கப்பட்டிருக்கும் தெருக்களில் வண்டிகளில் செல்ல முடியாத அளவு பெரிய பந்தல்கள் போடப்பட்டிருக்கும்.ஒரு கிலோமீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் குறைந்தது 5 அல்லது 6 தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்துவிடுவார்கள். அங்கு வண்டிகள் போக முடியாது. சுற்றிகொண்டுதான் போகவேண்டும்.
நான் 10 வருடங்களுக்கு முன் இங்கு வந்த பொழுது இவர்கள் தெருக்களை அடைத்து வழி விடாமல் இருப்பது மிகுந்த கஷ்டமாக இருந்தது. ஒரு தெருவுக்குள் நுழைந்து சற்று தூரம் போன பிறகுதான் அந்த தெரு வழி இல்லாமல் அடைக்கப்பட்டிருப்பது தெரியும். அவசரமாக செல்ல வேண்டிய சமயங்களில் சலித்துக்கொண்டே வண்டியை திருப்பிக்கொண்டு வரவேண்டியிருக்கும்.ஆனால் பக்கத்தில் வண்டியில் வருபவர்கள் ஒன்றும் சொல்லாமல் சர்ரென (இரு சக்கர வாகனமோ அல்லது 4 சக்கர வாகனமோ)திருப்பிக்கொண்டு வேறு வழியில் செல்வதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்து இந்த பண்டிகை கொண்டாட்டங்களை பார்த்து எனக்கு பழக்கமாகி நானும் எதுவும் பேசாமல் வண்டியை திருப்பிக்கொண்டு வரும்பொழுதுதான் புரிந்தது, இது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று என்று.அதுவே எனக்கும் பழக்கம் ஆகி விட்டபடியால் இப்பொழுதெல்லாம் சலிப்பு வருவதில்லை.
10 நாட்கள் பூஜை முடிந்த பிறகு மேளதாளத்தோடு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஊரை சுற்றியுள்ள ஏரி குளங்களில் முழுகச்செய்துவிட்டு வருகிறார்கள்.

மிகச்சிறப்பாக பெரிய அளவில் கொண்டாடப்படும் இவ்விழா மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருவதாக இருக்கிறது.

43 கருத்துகள்:
நல்ல பதிவு....
// ரெவெரி கூறியது...
நல்ல பதிவு....//
நன்றி ரெவெரி தங்களின் கருத்துக்கு..
அருமை.இந்த தடவை முதல் நாள் ரம்ஜான் வருது .அடுத்து விநாயகர் சதுர்த்தி வருது.என்ன பண்றது ?
// கோவை நேரம் கூறியது...
அருமை.இந்த தடவை முதல் நாள் ரம்ஜான் வருது .அடுத்து விநாயகர் சதுர்த்தி வருது.என்ன பண்றது ?//
வணக்கம் ஜீவா. உங்க கருத்துக்கு நன்றி.
//மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருவதாக இருக்கிறது//
எப்பொழுதுமே உங்களுக்கு
இந்த சந்தோசம் இருக்க
கணபதி அருள் புரிவார்
ஜெய் கணபதி நமக..
நன்றி மஹராஜன்.தங்களின் அன்பான கருத்துக்கும்,வாழ்த்துக்கும்.
எப்போதாவது பதிவிடும் தாங்கள் சனி , ஞாயிறு போன்ற லீவ் நாட்களீல் பதிவு போடுவதை தவிர்க்கவும்.
ஃபோட்டோக்கள் அழகு
செந்தில்குமார், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
>>எனக்கும் பழக்கம் ஆகி விட்டபடியால் இப்பொழுதெல்லாம் சலிப்பு வருவதில்லை.
தமிழன் எதையும் தாங்குவான்
// சி.பி.செந்தில்குமார் கூறியது.
>>எனக்கும் பழக்கம் ஆகி விட்டபடியால் இப்பொழுதெல்லாம் சலிப்பு வருவதில்லை.
தமிழன் எதையும் தாங்குவான்//
ஆம், செந்தில்குமார்.
நன்றி கருத்துக்கு.
விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் ! உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். நிறைவு செய்யவும். இப்போது என் ப்ளாக் சரியாகி விட்டது, சாதரணமாகவே முயன்று பார்க்கவும்.
நன்றி தா. தலைவி.
ரமா, எந்தபக்கம் போனாலும் பிள்ளையார் தான் ஜம்முனு உக்காந்திருக்கார். பதிவு நல்லா இருக்கு.
ஆமாம் லக்ஷ்மி அம்மா, உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அழகிய படங்களுடன், அருமையான விஷயங்கள் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
[என்றைக்கு, எத்தனை மணிக்கு, எந்த இடத்திற்கு வந்தால், கொழுக்கட்டை + ஒப்பட்டு எனப்படும் போளி ஆகியவை பிரஸாதமாகக் கிடைக்கும் என்பதைத் தெரிவிக்காதது ஒன்றே குறை.] vgk
//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
அழகிய படங்களுடன், அருமையான விஷயங்கள் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
[என்றைக்கு, எத்தனை மணிக்கு, எந்த இடத்திற்கு வந்தால், கொழுக்கட்டை + ஒப்பட்டு எனப்படும் போளி ஆகியவை பிரஸாதமாகக் கிடைக்கும் என்பதைத் தெரிவிக்காதது ஒன்றே குறை.] vgk//
வணக்கம் ஐயா,
நீங்க எப்பொழுது வந்தாலும் கிடைக்கும்.
பரட்டுகளுக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி.
அருமையான படங்கள், பதிவும் மிக அருமை..
வாழ்த்துகள் சகோ..,
நன்றி ராஜா தங்களின் கருத்துக்கு.
நல்ல பகிர்வு சகோ....
// வெங்கட் நாகராஜ் கூறியது...
நல்ல பகிர்வு சகோ....//
நன்றி வெங்கட்.
நல்ல பதிவு.
படங்கள், விபரங்கள் அருமை.
வாழ்த்துக்கள்.
//Rathnavel சொன்னது…
நல்ல பதிவு.
படங்கள், விபரங்கள் அருமை.
வாழ்த்துக்கள்.//
நன்றி ஐயா,தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும்.
நேரில் பார்த்த உணர்வை கொடுத்தது உங்கள் எழுத்தும் படங்களும்... நன்றி
போட்டோக்கள் அழகு.
நல்ல பதிவு.
படங்களுடன் பதிவும் அருமை
குறிப்பாக அந்த வேனில் செல்லுகிற கணபதிகள்
என்னவோ பேசிக்கொண்டே செல்வதுபோல்
இருப்பது மிகவும் ரசிக்கத் தக்கதாய் இருக்கிறது
விழாக்கள் மட்டும் அல்ல அது குறித்த
இதுபோன்ற இதமான பதிவுகளும் மனதிற்கு
சந்தோஷத்தையும் மகிழ்வினையும் தந்துதான் போகிறது
தரமான பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
நன்றி புவனா, தங்களின் கருத்துக்கு.
நன்றி குமார்.
//Ramani சொன்னது…
படங்களுடன் பதிவும் அருமை
குறிப்பாக அந்த வேனில் செல்லுகிற கணபதிகள்
என்னவோ பேசிக்கொண்டே செல்வதுபோல்
இருப்பது மிகவும் ரசிக்கத் தக்கதாய் இருக்கிறது//
ஆம் ரமணி சார்.நானும் அந்த படத்தை பார்த்து மிகவும் ரசித்தேன்.
நன்றி தங்களின் அன்பான கருத்துக்கு.
சுவாரசியமான தகவல்களுடன் கூடிய நல்ல பகிர்வு.
விநாயகர் சதுர்த்தி சம்பந்தமான அருமையான பதிவு சகோதரி
பகிர்வுக்கு நன்றி
நன்றி ஆதி, தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
நன்றி ரமேஷ் தங்களின் கருத்துக்கு.
மிகச்சிறப்பாக பெரிய அளவில் கொண்டாடப்படும் இவ்விழா மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருவதாக இருக்கிறது.//
இனிமையான பகிர்வு. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
இப்போது விநாயகர் பூஜை எல்லா ஊர்களிலும் இப்படி ஆங்காங்கே பெரிய விநாயகர் சிலைகளை வைத்துக் கொண்டாடுகிறார்கள். மும்பை 'கணபதி பாப்பா மோரியா' பார்த்து வழக்கமாகி விட்டது போலும். இன்றைய இளைஞர்கள் இதை உற்சாகத்துடன் தொடர்வது சந்தோஷம்தான் எனினும் சுற்றுச் சூழல் மாசுபடாமலும், ஜன இடைஞ்சல் இல்லாமலும் இருந்தால் வரவேற்கக் கூடியதே!
///இராஜராஜேஸ்வரி சொன்னது…
மிகச்சிறப்பாக பெரிய அளவில் கொண்டாடப்படும் இவ்விழா மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருவதாக இருக்கிறது.//
இனிமையான பகிர்வு. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.//
நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
ஸ்ரீராம்,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான தகவல்கள் மற்றும் அழகிய படங்கள் .
(ஒரே ஒரு குறை யாருமே எனக்கு கொழுக்கட்டை /போளி இதெல்லாம் தரவேயில்லை )
சுவர்ண கெளரி விரதம் பகிர்வுக்கு நன்றி.
angelin நன்றி உங்க கருத்துக்கு.
அடுத்த முறை இந்தியா வரும்போழுது இங்க வாங்க, எல்லாம் கிடைக்கும்..
நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
கணேச சதுர்த்தி பங்களூர்ல கொண்டாடும் விதம் பற்றி விவரித்ததில் கூட ஒரு மெசெஜ் இருந்தது கண்டு சந்தோஷப்பட்டேன்பா...
கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு போனால் எங்கும் சந்தோஷம் மட்டுமே நிறைந்து காணப்படும் என்பதே....
சுவர்ண கௌரி விரதம் முதல் முறை கேள்விப்படுகிறேன்பா...
இந்தியா வந்தால் அடுத்த வருடம் பங்களூருக்கு ஒரு ட்ரிப் போகனும் கண்டிப்பா... :)
அன்பு நன்றிகள் ராம்வி பகிர்வுக்கு...
// மஞ்சுபாஷிணி கூறியது.//
நன்றி மஞ்சு வருகைக்கும் கருத்துக்கும்.
கருத்துரையிடுக